தாளநுட்பங்களைப் பழங்காலத்திலிருந்தே அறிந்து வைத்துள்ளனர்! – அ.நா.பெருமாள்

தாளநுட்பங்களைப் பழங்காலத்திலிருந்தே அறிந்து வைத்துள்ளனர்!    இன்றைய நிலையில் தாளத்தைப் பற்றி நன்கு அறிவதற்கு ஏற்ற முறையில் தாள சமுத்திரம், சச்சப்புட வெண்பா, தாள தீபிகை, தாளமும் அனுபவமும் ஆகிய நூல்கள் தமிழில் அச்சுப்பதிப்பாகக் கிடைக்கின்றன. வாத்திய மரபு என்ற நூல் சுவடிவுருவில் கிடைத்துள்ளது. இவை அனைத்தும் தமிழர் இசையிலுள்ள தாளத்தின் வகைகளையும் அவற்றின் அமைப்புக் கூறுகளையும் மிகச் சிறப்பாக விளக்குகின்றன. இவை தவிர, பத சங்கிரகம் என்ற பழைய நூல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் பதிப்பித்து வெளியிடப் பெற்றுள்ளது. இது நாட்டியம், தாளம் ஆகியவற்றை…

தமிழ்நூல் செய்திகள் தமிழர்க்கே உரியன – அ.நா.பெருமாள்!

வடசொல் கலப்பு இருப்பினும் தமிழ்நூல் செய்திகள் தமிழர்க்கே உரியன!   பல கலைநூல்கள் வடமொழியிலோ மிகுதியான வடசொல் கலப்புடனோ எழுதப்பட்டுள்ளதைப் பாரத நாட்டில் பல இடங்களில் வழக்கமாக இருப்பதைக் காணலாம். தமிழ் மருத்துவ நூல்கள் இதற்கு நல்ல எடுத்துக் காட்டுகளாகும். இவற்றில் கூறப்பட்டுள்ளவை தமிழரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் வடசொல் கலப்பாகவே அவை இருக்கும். இவ்வாறு பத தமிழிசை நூல்கள் வடமொழிக் குவியலாகவே வெளிவந்துள்ளன. இருப்பினும் அவற்றில் தமிழுணர்வு சிறப்பாக இணைந்து விளங்குவதைக் காணலாம். இவற்றை நன்கு உணர்ந்து காணின் இந்த…