எப்படி வளரும் தமிழ்? 3/3 : கவிஞர் முடியரசன்

(எப்படி வளரும் தமிழ்? 2/3  தொடர்ச்சி) எப்படி வளரும் தமிழ்?  3/3     இம்மட்டோ? பிறநாட்டுத் தலைவர்கள், புரட்சியாளர், சிந்தனையாளர் ஆகியோர்பாற் கொண்ட பற்றாலும் அவர்தம் கொள்கையிற் கொண்ட காதலாலும் இலிங்கன், இலெனின், ஃச்டாலின், காரல்மார்க்சு, சாக்ரடீசு என்றெல்லாம் பெயர் வைத்துக் கொள்கின்றனர். எவ்வெவ் வகையால் ஒதுக்க இயலுமோ அவ்வவ் வகையாலெல்லாம் தமிழை ஒதுக்கிவருகின்றனர். ஆனால், இன்று இளைஞரிடையே அவ்வுணர்வு அஃதாவது மொழியுணர்வு ஓரளவு அரும்பி வருவது ஆறுதல் தருகிறது.   இந்து மதத்தவர் முருகவேள், இளங்கோவன், பிறைநுதற் செல்வி, தென்றல் என்று…

வானொலிதான் உயர்ந்தே நிற்கும் ! – ப.கண்ணன்சேகர்

  வானொலிதான் உயர்ந்தே நிற்கும் ! காற்றில் மிதக்கும்  ஒலியாக கருத்தாய் மலர்ந்து பெட்டியிலே களிக்க விருந்தென வந்திடும்! வந்திடும் நிகழ்ச்சி சுவையாக வையம் முழுக்க உலவிடவே வண்ண சித்திரம் ஒலித்திடும் ! ஒலித்திடும் வானொலி செய்தியினில் உலக நிலவரம் உள்ளடக்கி ஊரும் பேரும் தந்திடும்! தந்திடும் தகவல் நலமென்றே தவறாது மக்கள் கேட்டிடும் தன்னிக ரில்லா ஊடகம்! ஊடக வரிசையில் வானொலிதான் உயர்ந்தே நிற்கும் எப்போதும் உயர்வான் கற்று பாமரன்ய்ம்! பாமரனும் பயிலும் பள்ளியென பாதைப் போட்ட வானொலியே படிக்க சொல்லும் வீடுதோறும்!…