(அதிகாரம் 066. வினைத் தூய்மை  தொடர்ச்சி) 02. பொருள் பால்    06. அமைச்சு இயல் அதிகாரம் 067. வினைத் திட்பம்     செயல்வெற்றிக்கு மிகவும் தேவையான            செயல்உறுதி மேலாண்மைத் திறன்இயல்   வினைத்திட்பம் என்ப(து), ஒருவன் மனத்திட்பம்;      மற்றய எல்லாம் பிற.           செயல்உறுதி என்பது மனஉறுதி;         மற்றவை, எல்லாம் வேறு.             ஊ(று)ஒரால், உற்றபின் ஒல்காமை, இவ்இரண்டின்     ஆ(று)என்பர் ஆய்ந்தவர் கோள்.           வரும்முன் காத்தலும், வந்தபின்         தளராமையும் ஆய்வாளர் கொள்கை.   கடைக்கொட்கச், செய்தக்க(து) ஆண்மை; இடைக்கொட்கின்,…