தோழர் தியாகு எழுதுகிறார் 81: வெண்மணியும் பெரியாரும் 2

(தோழர்தியாகுஎழுதுகிறார்  80 தொடர்ச்சி) வெண்மணியும் பெரியாரும் 2 திமுக ஆட்சி இந்தச் சம்பவத்தை எப்படி எதிர்கொண்டது? அண்ணாவால் இந்தச் சம்பவத்தை நினைத்திருந்தாலும் தடுத்திருக்க முடியாது. இது அவருக்குத் தெரிந்து நடந்தது என்றோ அவர் காவல்துறையை அனுப்பினார் என்றோ சொல்ல முடியாது. ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் “உழவர் காவல்துறை” ஆரம்பிக்கப்பட்டது. ஒருமுறை சட்ட மன்றத்தில் அண்ணா பேசும்போது, “உங்கள் தோழர்களில் சிலர் “பகலில் மார்க்குசியர்கள், இரவில் நக்சலையர்கள்” என்றே சொல்லியிருக்கிறார். வேளாண் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஏ.சி.கே., மீனாட்சிசுந்தரம் போன்றவர்களைத்தான் அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார். தொழிலாளர்களின் சார்பாக…

தோழர் தியாகு எழுதுகிறார் 80: வெண்மணியும் பெரியாரும் 1

(தோழர் தியாகு எழுதுகிறார்  79 தொடர்ச்சி) வெண்மணியும் பெரியாரும் 1 கீழவெண்மணி குறித்துப் பெரியார் மேல் எனக்கே குற்றாய்வுகள் உண்டு. பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். ஆனால் சுயசாதிப் பற்று என்பது இழிவான அவதூறு. பெரியாரைக் கனவிலும் அப்படி எண்ணிப் பார்க்க முடியாது. 2017 திசம்பரில் ‘இந்து’ தமிழ் ஏட்டுக்கு வெண்மணி குறித்து நான் தந்த செவ்வியிலேயே பெரியார் பற்றிய குற்றாய்வு உள்ளது. இதோ அந்தப் பேட்டி:— “வெண்மணி வெறும் கூலிக்கான போராட்டம் அல்ல!” – தியாகு பேட்டி வெண்மணி படுகொலைச் சம்பவத்தின் காரணமாகக், கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டுப் பொதுவாழ்வுக்குத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்…

தோழர் தியாகு எழுதுகிறார் 75: அம்பேத்துகர் – பெரியார் – வெண்மணி நினைவாக

(தோழர் தியாகு எழுதுகிறார் 74 தொடர்ச்சி) அம்பேத்துகர் – பெரியார் – வெண்மணி நினைவாக அண்ணல் அம்பேத்துகர் இந்திய நாடாளுமன்றம் முதல் கடைக்கோடிக் குப்பம் வரை சிலைகளாக நிற்கிறார். அவருடைய பிறந்த நாளும் நினைவு நாளும் நாடெங்கும் பெருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. ஒடுக்குண்ட மக்கள், உழைக்கும் மக்கள் அவரைத் தங்கள் காவல்தெய்வமாகப் போற்றுகின்றார்கள். ஆளும்வகுப்புக் கட்சிகள் அவரை அரசமைப்புச் சட்டச் சிற்பியாகப் புகழ்கின்றன. அவரது படத்தைக் காட்டித் தேர்தலில் வாக்கு வேட்டையாடும் கட்சிகளும் உண்டு. நாட்டையாளும் இந்துத்துவக் கும்பல் அம்பேத்துகரைக் களவாடப் புதுப்புது மோடி வித்தைகள் காட்டி வருகிறது. இந்தக் களவாடலின்…

கோவை கு.இராமகிருட்டிணனுக்கு விருது

கோவை கு.இராமகிருட்டிணனுக்குச் சமூகநீதிப் போராளி விருது நந்தன் எனும் இரகுநாதனின் வீரவணக்க நிகழ்ச்சி பவுத்தம்:- ஆரிய திராவிடப் போரின்தொடக்கம்  – நூல் அறிமுகம்   ஆனி 30, 2045 / 14-07-2014 மாலை, கோவை அண்ணாமலை அரங்கில் தோழர் வெண்மணி அவர்களின் ஒருங்கிணைப்பில் தமிழர் விடுதலை இயக்கம் சார்பாக  நந்தன் எனும் ரகுநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் திராவிடநெறி எழுத்தாளர் எழில் இளங்கோவன் அவர்கள் எழுதிய, ” பவுத்தம் ஆரிய – திராவிடப் போரின் தொடக்கம் ” எனும்…