(அதிகாரம் 056. கொடுங்கோன்மை தொடர்ச்சி) 02.பொருள் பால் 05.அரசு இயல் அதிகாரம் 057. வெருவந்த செய்யாமை   குடிமக்கள், அஞ்சி நடுங்கும்படி, கொடுமைச் செயல்கள் செய்யாமை   தக்காங்கு நாடித், தலைச்செல்லா வண்ணத்தால்,      ஒத்(து),ஆங்(கு), ஒறுப்ப(து), வேந்து.    தக்கபடி ஆய்ந்து, குற்றம்   மீளநடவாவாறு, பொருந்தத் தண்டிக்க.   கடி(து)ஓச்சி, மெல்ல எறிக, நெடி(து)ஆக்கம்,       நீங்காமை வேண்டு பவர்.         கடுமையாக மிரட்டி, மென்மையாகத்        தண்டிப்பதே, ஆக்க நீதி.   வெருவந்த செய்(து)ஒழுகும், வெங்கோலன் ஆயின்,       ஒருவந்தம்,…