தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙா) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙா)     பேரறிஞர் அண்ணா பேராசிரியர் இலக்குவனாரிடம் பேசி அவருக்குத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முதலான ஏதேனும் ஒரு பணியைத் தர முதலில் எண்ணினார். பெருந்தலைவர் காமராசர் இருந்த பொழுதே தடைநோக்கில் இருந்த அதிகாரக் கூட்டத்தார் கடும்போட்டி இருப்பதால் இவரை அமர்த்த இயலாது எனக் கூறினர். எத்தனைப் போட்டியாளர் இருப்பினும் தமிழுக்காகப் போர்க்களங்களைக் கண்டு சிறைவாழ்க்கையும் பதவி இழப்புகளும் உற்ற பேராசிரியர் இலக்குவனாருக்கு இணையாக அவர்கள் வருவார்களா என எண்ணவில்லை.  …

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங) – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙௌ)  – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங)     பேராசிரியர் திருப்பரங்குன்றம் தொகுதியில் நிற்பதாக அறிவித்ததால், வாக்குகள் பிரிந்து ஓரிடத்தை இழக்க வேண்டி வரும் எனத் தி.மு.க.தலைவர்கள் அஞ்சினர். பிற இடங்களிலும் பேராசிரியர் ஆதரவின்றி வெற்றி வாய்ப்பை இழக்க நேரிடும் என்று கவலைப்பட்டனர். எனவே, போட்டியிடும் அறிவிப்பைத் திரும்பப் பெறுமாறும் தம் பரப்புரையால் நாடு தழுவிய வெற்றியைத் தி.மு.க.விற்கு ஈட்டித் தருமாறும் வேண்டினர். பேராசிரியர் இலக்குவனார் தி.மு.க. தன்னை ஆதரிக்கட்டும் என்றார். தேர்தல் இல்லாமலேயே பேராசிரியரை நாடாளுமன்ற…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙௌ) – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙோ) – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙௌ)    இவை மட்டுமல்ல, அனைத்து இதழ்களும் ஊடகங்களும் நல்ல தமிழே மக்களுக்கானது என்பதை உணர்ந்து தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். இதற்கான பணிகளைத் தமிழ் அமைப்புகள் மேலும் முனைப்பாக ஆற்றி வெற்றி பெற வேண்டும். அன்று பேராசிரியர் இலக்குவனார் விதைத்த தமிழ்உணர்வு இன்றும் மங்காமல் தமிழ் ஆர்வலர்களிடம் உள்ளது. அவர்கள் இப்பணியில் வெற்றி பெறுவதே நாம்  பேராசிரியருக்குப் படைக்கும் காணிக்கையாகும் என்பதை உணரவேண்டும்.   குறள்நெறி ஆங்கில இதழுக்கு இருந்த வரவேற்பாலும்…