(மாற்றுப் பொருள் சொற்கள்  1/2 ) மாற்றுப் பொருள் சொற்கள்  2/2 மாற்றுப் பொருள் சொற்கள்  2/2 Acid  – காடி, காடித்தன்மை, காடிப்பொருள், புளியம், புளிப்பு, அமிலம், புளிமம், அமிலத்தன்மை, புளிப்புத் திராவகம், தீநீர் முதலிய பல பொருள்கள் உள்ளன. எனினும் இவை நீதித்துறையில் Acid test என்னும் பொழுது பொருந்தா. புளிம ஆய்வு, எரிம ஆய்வு , எரிமச்சோதனை என்பன நேர் பொருளாக இருந்தாலும் இந்த இடத்தில் பொருந்தாது. அக்கினிப் பரீட்சை எனச் சொல்வது இதற்குப் பொருந்தும். ஆனால் அக்கினி தமிழ்ச்சொல்லல்ல….