‘எதிரும் புதிரும்’: வெள்ள அரசியல் குறித்து இலக்குவனார் திருவள்ளுவன்
விண் தொலைக்காட்சி ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் வெள்ள அரசியல் குறித்த கலந்துரையாடலில் இலக்குவனார் திருவள்ளுவன் விண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் கார்த்திகை 26, 2046 / திசம்பர் 12, 2015 சனியன்று இரவு 7.00 மணிக்கு வெள்ள அரசியல் குறித்த கலந்துரையாடலில் நான் பங்கேற்கிறேன் மறு ஒளிபரப்பு அன்று யாமம் 1.00 மணி. http://wintvindia.com இணையத் தளத்திலும் காணலாம். வாய்ப்புள்ளவர்கள் காண்க. வெள்ளத்தில் மீண்டவர்கள் கருத்து வெள்ளத்தில் மூழ்கலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!
பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
1 பாட்டுக்கு ஒரு புலவராம் மாபெரும் கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் சமய நல்லிணக்கம், இறையொருமை, சாதி மறுப்பு, விடுதலை வேட்கை, நாட்டுப்பற்று, வீர உணர்வு, கல்விப்பற்று, தொழில் நாட்டம், பெண்ணுயர்மை, அறிவியல் உணர்வு, பொதுமை வேட்கை, வினைத்திறம் முதலிய பண்புகள் இணைந்த ஓர் ்அறிவுப் பெட்டகமே ‘புதிய ஆத்திசூடி’. சப்பானிய மொழியின் குறுவரிப்பாடல்களைப் புதுமையாகக் கருதும் நாம், தமிழில் நாலடி வெண்பா, முவ்வரிச் சிந்து, ஈரடிக்குறள், ஒற்றையடி வரிப்பா(ஆத்திசூசடி, பொன்றை வேந்தன், வெற்றி வேற்கை முதலியன) ஆகியவற்றின் மரபார்ந்த சிறப்புகளை உணர்ந்து…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 5: இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 106 கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி) 05 இந்நூற்பா மட்டுமல்ல, மற்றொரு நூற்பா மூலம் தமிழர் உலகிலேயே முதன்முறையாகத்திருமணப் பதிவு முறையைப்பின்பற்றி உள்ளனர் என்பதையும் நாம் அறியலாம். இதனைப் பேராசிரியர் சி.இலக்குவனார் நன்கு விளக்கியுள்ளார். திருமணப் பதிவை இங்கிலாந்து அரசாங்கம் 1653இல் அறிமுகப்படுத்தியது. பிரான்சு நாட்டில் பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக 1791இலும் உருசியப் புரட்சியினால் உருசியாவில் 1917இலும் திருமணப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு காலங்களில் திருமணப் பதிவைக் கட்டாயமாக்கினாலும் பல…
பிரபாகரன் பிறந்த நாள் பெருமங்கலம்
பிரபாகரன், ஈழத்தலைவர் மட்டுமல்லர்! தமிழ் ஞாலத்தலைவருமாவார்! பிரபாகரன் பிறந்ததால் தமிழர் தம் வீரம் உணர்ந்தனர் தமிழ்மானம் தெளிந்தனர்! அடிமை விலங்கொடிக்கும் துணிவைப் பெற்றனர்! இந்தியக் கூண்டிற்குள் அடைபட்டிருந்த தமிழினத்தை உலகு அறியவில்லை! பிரபாகரன் செயல்களால் தமிழினம் அறிந்தனர்! தரணியெங்கும் போற்றினர்! வாராது வந்த மாமணியாய் இருபதாம் நூற்றாண்டில் பிரபாகரன் வந்தார்! தமிழர் தாயகம் இருபத்தோராம் நூற்றாண்டில் விடுதலை பெறும் என்னும் செய்தி தந்தார்! வாழ்க பிரபாகரன்! வெல்க தமிழீழம்! உயரட்டும் தாய்த்தமிழகம்! பிரபாகரன் வாழும் காலத்தில் வாழ்கிறோம் என்னும் பெருமையை எமக்கீந்த…
ஆருயிர் அன்புச்செல்வி ஆண்டுகள் நூறு வாழியவே!
கார்த்திகை 10, 2046 / நவம்பர் 26, 2015 இல் பிறந்தநாள் காணும் ஆருயிர் அன்புச்செல்வி ஆண்டுகள் நூறு வாழியவே! சென்னை மாகாண மாநிலக்கல்லூரியில் பயின்று தமிழ் இளங்கலைப் பட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கங்கள் பெற்றுப் பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தமிழ்ப்பேராசரியராகப் பணியாற்றிப் பலரைக் கல்வி பயில ஆற்றுப்படுத்தியவர் அறிஞர் முத்துராமலிங்கம்; அப்பொழுதே பல கோடி மதிப்புள்ள 29 வகைச் சொத்துகள் இருப்பினும் அவற்றைப் பிறருக்கு வழங்குவதில் மகிழ்ச்சி கொண்டு உழைப்பிலும் கல்வியிலும் நாட்டம் கொண்டு கல்விப்பணியாற்றியவர். இவர்…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 4: இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 105 ஐப்பசி 29, 2046 / நவ. 15, 2015 தொடர்ச்சி) 04 “பணமி ருந்தார் என்ப தற்காய்ப் பணிந்தி டாத மேன்மையும் பயமுறுத்தல் என்ப தற்கே பயந்திடாத பான்மையும் குணமி ருந்தார் யாவ ரேனும் போற்று கின்ற கொள்கையும் குற்ற முள்ளோர் யாரென் றாலும் இடித்துக் கூறும் தீரமும் இனமி ருந்தார் ஏழை யென்று கைவி டாத ஏற்றமும் இழிகு லத்தார் என்று சொல்லி இகழ்த்தி டாமல் எவரையும் மணமி குந்தே இனிமை மண்டும் தமிழ்மொ ழியால் ஓதிநீ மாநி…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 3: இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015 தொடர்ச்சி) 03 “தமிழின் பழைய மரபுகள் அழிந்து, தமிழ் அழிந்து போகாமல் காக்கவே தொல்காப்பியம் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும்.” என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். ஆனால், இன்றைக்கு நாம் தமிழ் மரபுகளை அழித்துக் கொண்டு அழிவுப் பாதையில் விரைந்து கொண்டிருக்கிறோம். “தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று இருந்தது. அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம். தொல்காப்பியத்தால் மொழி நிலை – இலக்கியநிலை மட்டுமன்று; அக்கால மக்கள் நிலையும் அறியலாகும். . ….
இனிதே இலக்கியம் – 11 : தமிழே இன்பம்! – முடியரசன் – இலக்குவனார் திருவள்ளுவன்
11 : தமிழே இன்பம்! – முடியரசன் தாயே உயிரே தமிழே நினைவணங்கும் சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே தலை நின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீ இங்கு இலை என்றால் இன்பம் எனக்கு ஏது? பாவேந்தர் மரபுக்கவிஞரான முடியரசன் அவர்களின் ‘முடியரசன் கவிதைகள்’ தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட பாடல். “பிறவிகளுக்கெல்லாம் காரணமாகும் தாயைப்போன்று எங்களின் தாயாய் விளங்கும் மொழிகளின் தாயே! எங்களை இயக்கும் உயிரே! உன்னை வழங்கும் குழந்தையாகிய நான் பெறுதவற்கு அரிய பேறாய் எனக்குக் கிடைத்த செல்வமே!…
வைகோ சொல்பவர் நீங்கள்தாமா? தடம் புரளலாமா?
வைகோ சொல்பவர் நீங்கள்தாமா? தடம் புரளலாமா? தலைக்குனிவிற்கு ஆளாகலாமா? தமிழ்நாட்டில் மாறி,மாறி இரு கட்சிகள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கவும் இரு கட்சிகளுடனும் மாறி மாறிக் கூட்டணி வைத்து, வெறுப்படைந்ததாலும் வைகோ முதலானவர்கள் புதிய கூட்டணியை உருவாக்க எண்ணுவது தவறல்ல! ஆனால், கூட்டணியின் பொதுவான கொள்கைகளுக்காகத் தனக்கே உரிய கொள்கைகளை விட்டுக் கொடுப்பது முறையல்லவே! வைகோ பொதுவான கருத்தொற்றுமைக்காகத் தமிழ்ஈழம் பற்றியும் கூடங்குளம் பற்றியும்பேசப்போவதில்லை என்கிறார். நாளை இவர் ஆட்சி அமைத்தால், கருத்தொற்றுமைக்காக எந்தக் கொள்கையையும் விட்டுக் கொடுப்பார் என்றுதானே பொருள். தமிழ்ஈழத்திற்காகக் குரல்…
பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 3/3
பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 3/3 தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்தியதால் இந்தியப்பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறைவாழ்க்கை பெற்ற பேராசிரியர்(1965), தமிழ்க்கல்வித்திட்டம் பற்றியும் பின்வருமாறு அகநானூற்றுப் பாடல் 55 இல் வரும் வெண்ணிப்போர் விளக்கம் மூலம் வலியுறுத்துகிறார். வெண்ணிப்போர்: ‘வெண்ணி’ , ‘கோவில் வெண்ணி’ என்ற பெயரின் சுருக்கமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றும் உள்ளது. . . . இங்கு நடந்த போரைப்பற்றி புலவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. ஆயினும் நம் தமிழ் மாணவர்கள் மேனாட்டில் நடைபெற்ற போர்களைப்…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 2: இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 103 ஐப்பசி 15, 2046 / நவ. 01.2015 தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 02 “மண்ட லத்தே இணையி லாத வாழ்வு கண்ட தமிழகம் மகிமை கெட்டே அடிமைப் பட்டு மதிம யங்கி நிற்பதேன்?’’ என்று நாமக்கல்லாரே வினவுகின்றார். அப்படியானால், நாம் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்பவருக்கு அவரே, தமிழ னென்ற பெருமை யோடு தலைநி மிர்ந்து நில்லடா! தரணி யெங்கும் இணையி லாஉன் சரிதை கொண்டு…
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 18 : இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 103 ஐப்பசி 15, 2046 / நவ. 01.2015 தொடர்ச்சி) 18 அட்டவணை 06 இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் (கவிதைகள்) இருபதாம் நூற்றாண்டு கவிதை இலக்கியங்களில் முகப்புப் பகுதியில் –‘பெண்மதிமாலை’ நீங்கலாகத் – தேடுதல் பொறி இருப்பது பற்றிய குறிப்பே இல்லை. வழக்கம்போல் அட்டவணைப் பகுதிக்குச் செல்பவர்கள் மட்டுமே அறிய இயலும். அட்டவணை 07 இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் (உரைநடைகள்) பகுதியில் ஏறத்தாழ 85 நூல்கள் இடம் பெற்றுள்ளன. அனைத்திலும் உள் அட்டவணைப் பகுதியில் தேடுதல் தலைப்பில் பக்கம் தேடலும், சொல்…
