வெருளி நோய்கள் 456 – 460 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 451 – 455 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 456 – 460 456. உள்ளாடை வெருளி – Esorouchaphobia உள்ளாடை குறித்த வரம்பற்ற பேரச்சம் உள்ளாடை வெருளி.உள்ளாடைகளைக் கடைகளில் கேட்பதற்கு அணிவதற்கு மாற்றுவதற்கு எனப் பல நிலைகளில் உள்ளாடைகள் குறித்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர். உள்ளாடைகள் மூலம் நோய் வரும் என அஞ்சுவோரும் உள்ளனர்.Esoroucha என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உள்ளாடை என்று பொருள்.அழுக்கு உள்ளாடை வெருளி(snickophobia) உள்ளவர்களுக்கு உள்ளாடை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.அமெரிக்க அதிபர் கிளிண்டன், தன் செயலர்…

தொல்காப்பியமும் பாணினியமும் – 5 : மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம்  – இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 4 : முதனூல்  – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 5 மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம் இது குறித்துப் புலவர் செந்துறைமுத்து (பரிபாடல் பழக்க வழக்கங்கள்: பக். 14) பின்வருமாறு தெரிவிக்கிறார்:       “தமிழ் இலக்கிய உலகு மிகவும் பழமைபட்டது; பரந்து பட்டது; பெருமைபட்டது. தமிழ் இலக்கியங்களைத் தமிழ் உலகு எனவும் தமிழ் கூறும் இலக்கிய உலகு எனவும் கூறலாகும். காலவரையறையைக் காண வியலாத பழமையையும் பெருமையையும் கொண்டது  தமிழ் உலகு. தமிழ் உலகில் வழங்கும் நூல்களில் தொல்காப்பியம் மிகவும் பழமை வாய்ந்தது….

குறட் கடலிற் சில துளிகள் 32. தக்கவர் இனத்தில் இணைந்தால் பகைவரால் யாது செய்ய இயலும்? – இலக்குவனார்திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 31 – அறிஞர்களே கண்கள்; அவர்களைத் துணையாகக் கொள்க! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 32. தக்கவர் இனத்தில் இணைந்தால் பகைவரால் யாது செய்ய இயலும்? தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்தது இல் (திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல்,  எண்: ௪௱௪௰௬ – 446) தக்கார்- அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையார்; ஒழுகுதல்-அறநீதிகளின் நெறி வழுவாமல் நடத்தல்; வல்லானை-திறமையுடையவனை; செற்றார்-பகைவர்; செய-செய்ய; கிடந்தது-கூடியது; இல்-இல்லை. ‘தான்ஒழுக வல்லானை’ என்றதற்குப் பரிமேலழகர் வழியில் பெரியார் சிந்தனை…

வெருளி நோய்கள் 451 – 455 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 446 – 450 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 451 – 455 மன உலைச்சல்(anxiety) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உலைச்சல் வெருளி. உணர்ச்சி வெருளி(Animotophobia) உள்ளவர்களுக்கு உலைச்சல் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.மன உளைச்சலானது சுற்றுச்சூழல், தனிப்பட்ட காரணிகள், குடும்பச் சிக்கல்கள், நிதிச் சிக்கல்கள், வேலையில் அதிக அழுத்தம், குமுகப் புறக்கணிப்பு, தனிப்பட்ட துயரங்கள், சோர்வு போன்ற காரணங்களால் மன உலைச்சலுக்கு ஆளாகின்றனர். பதற்றம் கொள்கின்றனர். அளவுகடந்தபதற்றமும் மன உலைச்சலும் மன நோய் வரவும் காரணமாகின்றன.00 உழுவை(Tractor) தொடர்பான மிகையான…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 8 : ஓரெழுத்தொரு மொழிகளுக்கு அடுத்தும் கிழமைகளுக்கு அடுத்தும் வல்லினம் மிகும்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 7: தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 8 : ஓரெழுத்தொரு மொழிகளுக்கு அடுத்தும் கிழமைகளுக்கு அடுத்தும் வல்லினம் மிகும் இக்கோப்பில், “கை குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து கொடுக்கப்படும்’ என உள்ளது. “கை’ என்பது  ஓரெழுத்து ஒரு மொழி எனப்படும். ஓரெழுத்துச் சொல்லிற்குப் பின்பும் வல்லினம் மிக வேண்டும். கைக்குழந்தை தீத்தடுப்புப் பயிற்சி தைத்திங்கள் ஈத்தொல்லை கேள்வி: ஓரெழுத்து ஒரு மொழி’ சிலவாகத்தானே இருக்கும். பதில் : இல்லவேயில்லை. ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாய் அமையும்…

சட்டச் சொற்கள் விளக்கம் 1001-1005 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 996-1000 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1001-1005  1001. Authorised officer      /  Authorized officer            அதிகாரம்‌ பெற்ற அலுவலர்‌   அதிகாரம்‌ பெற்ற அலுவலர் என்பவர் தனியொருவர், ஓர் அமைப்பு அல்லது அரசு நிறுவனத்தின் சார்பாகச் செயற்பட, குறிப்பிட்ட கடமைகளைச் செய்ய, ஆவணங்களைச் செயற்படுத்த அல்லது சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தும் முடிவுகளை எடுக்க அதிகாரம் அல்லது அதிகாரப்பூர்வமாக அதிகாரம் வழங்கப்பட்டவர். இந்த ஏற்பு/ அங்கீகாரம் இயக்குநர்கள் குழு அல்லது அரசுத் துறை அல்லது ஒரு குறிப்பிட்ட சட்டத்தின் மூலம்…

செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-2(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-1(2010): தொடர்ச்சி) செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி – 2 ? யார் முதலில் இந்தவேண்டுதலை முன் வைத்தார்கள் என்று சொல்ல முடியுமா? # 1918 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய சைவ சித்தாந்த மாநாட்டில்தான் தமிழைச் செவ்வியல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வேண்டுதல் வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் சார்பில் 1919 ஆம் ஆண்டிலும் 1920 ஆம் ஆண்டிலும் நடைபெற்ற ஆண்டு விழாக்களின் பொழுது இதற்கான தீர்மானம்…

வெருளி நோய்கள் 436-440 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 431-435 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 436-440 உருப்படம்(icon) குறித்த வரம்பற்ற பேரச்சம் உருப்படவெருளி.இவற்றுள் குறிப்பாக மதச் சின்னங்கள் மீதான ஒரு வலுவான வெறுப்பு அல்லது பேரச்சம் இருக்கும். உருவ வழிபாட்டாளர்களை, கடவுள் உருவ எதிர்ப்பாளர்களை எதிர்க்கும் உருவ எதிர்ப்பு நிலைக்கு மாறுபட்டது. எனினும் உருவப்பட வெருளி, உருவ எதிர்ப்பு நிலைக்குக் கொண்டு செல்லலாம்.மேலும் இஃது உருவ நேயர்களுக்கு எதிரானநிலைப்பாடாகும். உருப்பொருள்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் உருப்பொருள் வெருளி.அசைவூட்டப்படங்கள் அல்லது கேலிப்படங்களில் பயன்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கில் உருப்பொருள்கள் உள்ளன. இவற்றின்மீதான பேரச்சமே…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 7: back என்றால் முன் என்றும் பொருள்- இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! –6, தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 7: back என்றால் முன் என்றும் பொருள் எந்த ஒரு சொல்லும் தான் பயன்படும் இடத்திற்கேற்ப உள்ள பொருளைச் “”சுமந்து செல்லும் ஊர்தி”தான். எனவே, மூலச் சொல்லுக்கு நேரான பெயர்ப்புச் சொல்லை அமைக்காமல் மூலப் பொருளுக்கு ஏற்ற பெயர்ப்புச் சொல்லை ஆக்க வேண்டும். சொல் செறிவாயும் செவ்விதாயும் இருத்தல் வேண்டும். பயன்பாட்டுப் பின்னணியைக் கருத்தில் கொண்டு கலைச் சொற்களை உருவாக்க வேண்டும். ” “குன்றக் கூறல்” முதலான நூல்…

வெருளி நோய்கள் 431-435 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 426-430 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 431-435 உயிரிய மணிப்பொறி (biological clock) தொடர்பான அளவுகடந்த கவலையும் பேரச்சமும் உயிரிய மணிப்பொறி வெருளி00 432. உயிருடன் அடக்க வெருளி-Subterraneapremortephobia உயிருடன் அடக்கம் செய்யப்படுவோமோ என்ற பெருங்கவலையும் பேரச்சமும் உயிருடன் அடக்க வெருளி.இதை முதலில் உயிருடன் புதைதல் வெருளி எனக் குறித்திருந்தேன். ஆனால் புதைவு வெருளி எனத் தனியாகக் குறித்துள்ளதால் இவ்விரண்டிற்கும் குழப்பம் வரக்கூடாது என்றே உயிருடன் அடக்கம் வெருளி என இப்போது குறித்துள்ளேன்.Subterranea நிலத்தடி எனப் பொருள்; premorte என்றால் இறப்பிற்கு முன்…

வெருளி நோய்கள் 426-430 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 421-425 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 426-430 உயரம் அல்லது உயரமான இடங்களை அண்ணாந்து பார்ப்பதால் ஏற்படும் பேரச்சம் அண்ணாத்தல் வெருளி.உயரமான இடங்களை அண்ணாந்து பார்க்கும் பொழுது தலைசுற்றல், கிறுகிறுப்பு, மயக்கம் வரலாம் எனப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். hyps என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் உயரம். இதனை முதல் பதிப்பில் உயர வெருளி(Hypsiphobia) எனத் தனியாகக் குறித்திருந்தேன். என்றாலும் உயரம் குறித்த பேரச்சம் உயர்வு வெருளி எனத் தனியாகக் குறிக்கப் பெற்றுள்ளது. எனவே, மேல் நோக்கி அண்ணாந்து பார்ப்பது குறித்த…

வெருளி நோய்கள் 421-425 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 416-420 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 421-425 உதைபந்தாட்டம்(soccer) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உதைபந்தாட்ட வெருளி.இதனைக் காற்பந்து வெருளி(footballphobia) என்றும் சொல்வர்.ஆடுபவர்களில் சிலருக்கு அல்லது வேடிக்கை பார்ப்பவர்களில் ஒரு சாராருக்குப் பந்து தங்கள் மீது பட்டுக்காயம் ஏற்படலாம் என்ற பேரச்சம் வரலாம். இதனால் ஆட்டத்தின் மீதே வெருளி வரும்.00 உந்து ஒலிப்பான்(horn) குறித்த வரம்பற்ற பேரச்சம் உந்து ஒலிப்பான் வெருளி.Keras என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் கொம்பு. கொம்பு என்பது பின்னர் ஊது கொம்பையும் இசைக் கொம்பையும் குறித்தது. ஊர்திகள் பந்த பின்னர்…