70.அன்பே சிவம் என்பது சனாதனம். – சரியா? + 71.       ஞானச் சுடர் விளக்கு ஏற்றியது சனாதனம்.- சரியா? + 72.          பணிவைச் சொல்லிக் கொடுத்தது சனாதனம் என்கிறாரே இரங்கராசு – சரியா?

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 67-69 தொடர்ச்சி) அன்பும் சிவனும் இரண் டென்பரறிவிலார் அன்பே சிவ மாவதற்கும் அறிகிலார் அன்பே சிவ மாவதாகும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே. என்பது திருமூலர் கூற்று. அன்பு, அன்பிலிருந்து பிறக்கும் அருள் (அன்பு ஈன் குழவியாகிய அருள்) எவ்வகை வேறுபாடின்றி எல்லா உயிர்களிடத்தும் காட்ட வேண்டிய பண்பாகும். குடும்பத்திலுள்ள பெற்றோர், உடன் பிறப்புகள், வாழ்க்கைத் துணை, மக்கள், பிறர், பிற உயிர்கள் என அனைத்துத் தரப்பாரிடமும் உயர்வு தாழ்வு கற்பிக்காமல் காட்டப்படுதே அன்பு என்னும் நெறி. இதுவே…

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6, அன்றே சொன்னார்கள்44, இலக்குவனார் திருவள்ளுவன்

(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -3:தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6 நகரங்கள் போல் பெரிதாக அமைந்த மாளிகைகளை நகர் என்றே பழந்தமிழர் குறிப்பிட்டள்ளதைக் கண்டோம். புலவர்கள், நகரங்களைப்பற்றிக் குறிப்பிடும் பொழுதே நகரங்களில் உள்ள கட்டடங்களின் சிறப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர். மாளிகைகள் பற்றிக் குறிப்பிடும் பொழுதே அவற்றின் உயரம், அகலம், காவல், வளமை முதலான சிறப்புகளை உணர்த்த அவர்கள் தவறவில்லை.உயர்ந்த மேல்நிலைகளை உடைய பெரிய மனை நெடுநிலை வியல் நகர் எனச் சொல்லப்பட்டுள்ளது. புலவர் மதுரைச் சுள்ளம்போதனார்,வியல் நகர் (நற்றிணை: 215.4) என அகன்ற மாளிகையைக்குறிப்பிடுகிறார்.   …

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -3: அன்றே சொன்னார்கள்43 – இலக்குவனார் திருவள்ளுவன்

(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -2 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -3       பழந்தமிழர்கள், மாடம் என்று பலமாடிக் கட்டடங்களையே குறித்துள்ளனர். மிகுதியாக மாடிகளைக் கொண்ட கட்டடங்கள் நெடுநிலை மாடங்கள் எனப்பட்டன. பொதுவாக 7 மாடிக்கட்டங்கள் இருந்துள்ளன.  இவற்றுள் தரைத்தளம் பொதுவாகவும் பிற பருவச் சூழல்களுக்கேற்ப வெம்மை தாங்குவன, தென்றல் வீசுவன, என்பன போன்றும் இருந்திருக்கின்றன.   இளங்கோ அடிகள் அவர்கள் கோவலன், கண்ணகி ஆகிய இருவரும் நெடுநிலை மாடத்து இடைநிலத்து  இருந்துழி (இருந்த பொழுது) எவ்வாறு மகிழ்ச்சியாக இருந்துள்ளனர் எனக் குறிப்பிடுகிறார் (சிலப்பதிகாரம் : 1:2:…

65. இல்லறத்தான் பணி எனத் திருவள்ளுவர்கூறுவதுவே தமிழ் கூறும் சனாதனம் – சேக்கிழான் 66.         சனாதனம் என்றால் மரியாதைக்குரிய ஒழுங்கு முறை எனப் பல  பொருள்கள் சொல்லப்படுகின்றன. – இவை சரிதானா? : இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 63-64 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 65-66    ? 65  தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. (திருக்குறள்- 43)உலக வாழ்வை நீத்த முன்னோர், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான் என ஐவகையினரையும் காப்பதே இல்லறத்தான் பணி என்கிறார் திருவள்ளுவர். இதுவே தமிழ் கூறும் சனாதனம் என்கிறாரே சேக்கிழான். தென்கடலில் மூழ்கிய நம்மவர்களையும் – தென்புலத்தாரையும் – பிறரையும் போற்ற வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். ஆனால் ஆரியமோ தமிழர்களையே பழிக்கிறது. அவ்வாறிருக்க இதனை எங்ஙனம் சனாதனம் என்று சொல்ல முடியும்? இப்படித்தான் ஆரியத்திற்குப்…

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -2: அன்றே சொன்னார்கள் 42 – இலக்குவனார் திருவள்ளுவன்

(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 1  தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -2 பல்வேறு வகையான வீடுகள் இருந்தமையை முதலில் பார்த்தோம். சிறந்த நகர அமைப்பும் உயர்ந்த ஊரமைப்பும் கொண்டிருந்த நகரங்களிலும் ஊர்களிலும் அமைந்த வீடுகள் வளமை மிகுந்ததாகவும் நன்முறையிலும் இருந்தமை பல பாடல்கள் மூலம் தெரியவருகின்றன. பொதுவாக மனை என்பது வீட்டையும் வீட்டின் முன்புறம் உள்ள முற்றம், பின்புறம் உள்ள கொல்லை, சுற்றி உள்ள தோட்டம் ஆகியவற்றையும் இவ்வீட்டுப் பகுதி அமைந்துள்ள பொழிலையும் சேர்ந்த நிலப்பகுதியையும் குறிக்கின்றது. மனை என்பது புலவர்களால் பல…

இந்து வாழ்வியல் அறமும் + 64. அனைத்து உயிரும் ஒன்றே என்பதுவுமே தமிழ்ச்சனாதனம் என்கிறாரே சேக்கிழான். – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 62 -. தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 63-64 நம் கடம்பனை பெற்றவள் பங்கினன் தென் கடம்பை திருக் கர கோயிலான் தன் கடன் அடியேனையும் தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே’ இவர்களின் பணிக்குச்(!) சான்றாக ஒரு நிகழ்வைக் காண்போம். கருநாடக மாநிலம் சாம்ராசுநகர் மாவட்டம் சுலவாடி ஊரில் மாரம்மா கோயில் உள்ளது. சாளூர் மடத்தின் பெரிய மடாதிபதி குருசாமி. இதன் இளைய மடாதிபதி மகாதேவசாமி. இருவருக்கும் அதிகார மோதல் இருந்து வந்துள்ளது. மாரம்மா கோயில் பொறுபப்பாளர்களுள் ஒருவரான மாதேசு என்பவரின் மனைவி…

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 1: அன்றே சொன்னார்கள் 41- இலக்குவனார் திருவள்ளுவன்

(வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 3/3 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 1                                                                                                         சிந்துவெளி, மொகஞ்சதாரோ மூலம் அறியக்கிடக்கும் தமிழர் நாகரிகச் சிறப்பு நம் முன்னைத் தமிழர்களின் கட்டுமான அறிவியலுக்கு மிகச் சிறந்த சான்றாகும். அவற்றின் தொடர்ச்சியாக இன்றைக்கும் காட்சியளிக்கும் கோபுரங்கள், சிதலமாகிப்போன சுரங்கப் பாதைகள் முதலியனவும் முந்தைச் சிறப்பை நமக்கு விளக்குவனவாக இருக்கின்றன. மலையே இல்லாத தஞ்சாவூர் மாநகரில் பெரிய கோயில் மட்டுமல்ல  எண்ணற்ற கோயில்கள் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளன. கரிகால(ன்)…

? 62 . திருவருட்பாவைத் தமிழ்ச்சனாதனம் எனச் சேக்கிழான் என்பவர் கூறுகிறாரே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 60-61 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 62 வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்; பசியினால் இளைத்தே வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்! நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்; ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்! (திருவருட்பா- 3471) அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி.   (திருக்குறள் – 226) பொருளைச் சேமிக்குமிடம் வைப்பகமோ வங்கியோ வேறு சேமிப்பகமோ அல்ல. ஒன்றுமில்லாதவரின் கொடும் பசியை நீக்குவதே பொருளைச் சேமிக்கும் இடம் என்கிறார் திருவள்ளுவர். இது…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 16 : பயன் கருதாமல் பிறர் துன்பம் துடைக்க உதவுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 16 பயன் கருதாமல் பிறர் துன்பம் துடைக்க உதவுவோம்! “எத்துணை ஆயினும் ஈத்தல் நன்று எனமறுமை நோக்கின்றோ அன்றேபிறர் வறுமை நோக்கின்று அவன் கை வண்மையே” திணை – பாடாண்துறை – பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையுமாம். வையாவிக்கோப் பெரும்பேகனைப் பரணர் பாடியது. “பாணன் சூடிய பசும்பொன் தாமரை” எனத் தொடங்கும் பாடலில் இடம் பெறும் வரிகள். பதவுரை: எத்துணை = எவ்வளவு, எத்தனை; ஈத்தல் = கொடுத்தல்; மறுமை = மறுபிறவி, மறுவுலகம் என்பர் பிறர். மறுபயன் என்கிறார் பேராசிரியர்…

வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 3/3: அன்றே சொன்னார்கள் 40 – இலக்குவனார் திருவள்ளுவன்

(வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3 – தொடர்ச்சி) வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 3/3                2000 ஆண்டுகளுக்கு முன்பே அடுக்கடுக்கான பல மாடிவீடுகள் வரிசையாக அமைந்திருந்தமை குறித்து மேலும் சில விவரம் பார்ப்போம். மதுரை மாநகர் மாடிக்கட்டடங்களால் புகழ் பெற்றது என்பதைப் புலவர் மாங்குடி மருதனார் பல இடங்களில் விளக்குகிறார். மாடிக்கட்டடங்களால் சிறப்புமிகு புகழை உடைய நான்மாடக்கூடலாகிய மதுரை என,      மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் (மதுரைக்காஞ்சி : 429)என்றும், முகில் உலாவும் மலைபோல உயர்ந்த மாடிக்கட்டடங்களோடு உடைய மதுரை என     மழையாடு மலையி னிவந்த மாடமொடு (மதுரைக்காஞ்சி…

தமிழ்க் காப்புக் கழகம்: இணைய அரங்கம்: ஆளுமையர் உரை132 & 133; என்னூலரங்கம்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.   (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௬ – 416) தமிழே விழி!                         தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்: ஆளுமையர் உரை132 & 133; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வைகாசி 25, 2056  ஞாயிறு 08.06.2025  காலை 10.00 மணி தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன் “தமிழும் நானும்”  – ஆளுமையர்கள் பேரா.மரு.மு.செம்மல், முதன்மை…

வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3- அன்றே சொன்னார்கள் 39 : – இலக்குவனார் திருவள்ளுவன்

(வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 1/3  – தொடர்ச்சி) வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3                        வானைத் தொடும் அளவிற்கு உள்ளதாகக் கருதும் வகையில் உயர்ந்த மாடிக் கட்டடங்கள் இருந்தன என்பதற்காக வான் தோய் மாடம் என்றும் விண்ணை நெருங்கும் அளவிற்கான உயரம் எனக் கருதும் அளவிற்கு மாடிகள் அமைந்த கட்டடங்கள் இருந்தன என்பதற்கு அடையாளமாக விண்தோய் மாடம் என்றும் சங்க இலக்கியங்களில் குறிக்கப் பெற்றுள்ளன. நகரம் என்பதே பல மாடிகள் உடைய வீடுகள் நிறைந்தது என்பதே வழக்கம் என்னும் அளவிற்கு நகரங்கள் இருந்தன….