குறள் கடலில் சில துளிகள் 28. – துன்பம் வந்ததை நீக்கி, வருவதிலிருந்து காப்போரைத் துணையாகக் கொள்க!  – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 27. அறமறிந்த அறிவு உடையவரைத் துணையாகக் கொள்க! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 28. துன்பம் வந்ததை நீக்கி, வருவதிலிருந்து காப்போரைத் துணையாகக் கொள்க! உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்.   (திருவள்ளுவர்,  திருக்குறள், அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்,  குறள் எண்:௪௱௪௰௨ – 442) பதவுரை: உற்ற-நேர்ந்த; நோய்-துன்பம்; நீக்கி-விலக்கி; உறாஅமை-வராத வண்ணம்; முன் – (வரும்)முன்னால்; காக்கும்-காப்பாற்றும்; பெற்றியார்-தன்மையுடையார், இயல்புடையர்; பேணி-நலன்பாராட்டி,; கொளல்-கொள்க. பொழி்ப்புரை: வந்த துன்பம் நீக்கி, வர உள்ள…

“இராமர் அவதாரம் செய்து 17 இலட்சம் ஆண்டுகள் ஆகிறது” என்கிறாரே கோமடம் சுவாமிகள்

(தமிழ்நாட்டில்தான் சனாதனம் உருவாகியது என ஆளுநர் இர.நா.இரவி கூறியிருப்பது சரியா? – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும்: 10-13 10. “இராமர் அவதாரம் செய்து 17 இலட்சம் ஆண்டுகள் ஆகிறது” என்கிறாரே கோமடம் சுவாமிகள்.        ஆரியத்தின் வழக்கமான பொய்களுள் இதுவும் ஒன்று. படித்தவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் எனக் கருதி இதை நம்பும் தமிழறிஞர்களே இதன் அடிப்படையில் தவறான கால ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடுகிறார்கள். அப்படியிருக்கப் பாமரர்கள் இவற்றை நம்பாமல் எப்படி இருப்பார்கள். வால்மீகி இராமாயணத்தில் பட்டமேற்பிற்காக அயோத்திக்குத் திரும்பும் இராமன், தம்பி…

சட்டச் சொற்கள் விளக்கம் 971-975 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 966-970 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 971-975 971. Attestation சான்றொப்பம்‌   சான்றுக்‌ கையொப்பம்‌   நிறைவேற்றுநர் ஒப்பாவணத்தில் கையொப்பம் இட்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் பொருட்டுச் சான்றாளர் தமது பெயரைக் கையொப்பமாக இடுவது (பி 69, இ.சா.ச.).   இ.சா.ச. பிரிவு 69 என்பது இந்தியச் சான்றுரைச் சட்டத்தின் (Indian Evidence Act) 69 ஆவது பிரிவைக் குறிக்கிறது. இது சான்றுரையின் சான்றளிப்பு (attestation) பற்றி விவரிக்கிறது.   இறுதி முறியின் சான்றளிப்பு,  சான்றுரைஞர் கையெழுத்திடுவதைப்…

நாலடி நல்கும் நன்னெறி :10  வழி வழியே இறந்தோரைத் தொடர்ந்து செல்வதே இயற்கை – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி : 9 இளமையிலேயே நல்லன  செய்க! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 10  வழி வழியே இறந்தோரைத் தொடர்ந்து செல்வதே இயற்கை எனக்குத்தா யாகியா ளென்னையீங் கிட்டுத் தனக்குத்தாய் நாடியே சென்றாள்–தனக்குத்தா யாகி யவளு மதுவானாற் றாய்தாய்க்கொண் டேகு மளித்திவ் வுலகு -நாலடியார், இளமை நிலையாமை 15 பொருள்: எனக்குத் தாயானவள் என்னை விட்டுத் தன் தாயைத் தேடிச் சென்று விட்டாள். அவளும் தன் தாயைத்தான் தேடிச் சென்றுள்ளாள். அதுபோல் வழிவழியே முன்னவரைத் தேடிச்செல்லும் நிலையாமையை உடையது இவ்வுலகு….

தமிழ்நாட்டில்தான் சனாதனம் உருவாகியது என ஆளுநர் இர.நா.இரவி கூறியிருப்பது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(எல்லாரும் சமம் என்பது சாத்தியமில்லை – சரியா?- தொடர்ச்சி) 5. இன்று தமிழ்நாடு என்று அழைக்கப்படும் . . . . இந்த நிலத்தில்தான் சனாதன தருமம் உருவாகியது. இந்தத் தருமம் பாரதம் முழுவதும் பரவியது. பாரதம் என்றால் சனாதன தரும இலக்கியங்கள் என்று பொருள்” என ஆளுநர் இர.நா.இரவி கூறியிருக்கிறாரே!  இது பொதுவாக ஆரியர்களின் வழக்கம். ஒன்றைப்பற்றிய தீய சக்தியை மக்கள் புரிந்து கொண்டால், அதனைச் சமாளிப்பதற்காக அதைப்பற்றிய இல்லாத நல்ல செய்திகளை இருப்பதாகப் பரப்புவர். அதுபோல்தான் இப்போதும். சனாதனத்திற்குரிய எதிர்ப்பு…

எல்லாரும் சமம் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை எனச் சனாதனவாதிகள் கூறுவது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் என்பது நிலையானதுதானா? (தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 3. எல்லாரும் சமம் என்பது, எழுதவும் பேசவும் இனிப்பாக இருக்கும்; நடைமுறையில் அது சாத்தியமில்லை. ஒரே வண்டியில் பயணிப்பதால், உரிமையாளரும் ஓட்டுநரும் ஒன்றில்லை. – தினமலரின் சிந்தனைக் களத்தில் சானதனக் காவலாளி இரங்கராசு கூறிய செய்தியாகும்.- சரிதானா?  இஃது அனைத்துச் சாதியினரையும் சமமாகப் பார்க்கக் கூடாது என்பதற்குச் சொல்லப்படும் மறுப்பு விளக்கமாகும். பதவி முறையில் உள்ள வேறுபாடு நிலையானதல்ல. அப்பதவி மாறும் பொழுது அதுவும் மாறும். இன்றைய வண்டி ஓட்டுநர் நாளைய உரியமையாளராகலாம்….

நாலடி நல்கும் நன்னெறி : 9 இளமையிலேயே நல்லன  செய்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 8 : காமவழி செல்வோர்க்கு ஏமவழி யில்லை  – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 9. இளமையிலேயே நல்லன  செய்க! தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா வீழா இறக்கும் இவள்மாட்டும் – காழிலா மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகுந் தன்கைக்கோல் அம்மனைக்கோ லாகிய ஞான்று. -நாலடியார், இளமை நிலையாமை 14 பொருள்: கூன் விழுந்து உடல் தளர்ந்து தலை நடுங்கிக் கைத்தடி ஊன்றி வாழும் இம் மூதாட்டி முன்பு இவள் தாய் மூதாட்டியாக இருக்கும் பொழுது இளமை நலம் திகழப் பிறர்…

சட்டச் சொற்கள் விளக்கம் 966-970 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 961-965 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 966-970 966. Attendance     (S. 7(9) ROBDA, 1969) வருகை   முன்னிலையாதல்   கல்வியகம், பணியகம், தொழிலகம் போன்ற இடங்களில் உரிய நேரத்தில் பயிலுவோர் அல்லது பணியாளர்கள் அல்லது தொழிலாளர்கள் வருவதைக் குறிப்பது.   முறை மன்றம் போன்ற இடங்களில் அதன் தலைவர் முன்னர் நேர் நிற்பதை அல்லது முன்னிலையாதலைக் குறிப்பது.   தொல்பொருள், கருவூலப் பொருள்கள் சட்டம் 1972(Antiquities and Art Treasures Act), இருப்பூர்தித் துறை(சட்ட…

அன்றே சொன்னார்கள் – காற்றின் வகைமை தெரியும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(அன்றே சொன்னார்கள் 11 : முகிலறிவியலின் முன்னோடி நாமே! –தொடர்ச்சி) அன்றே சொன்னார்கள் –காற்றின் வகைமை தெரியும்! காற்று உலகெங்கும் பரவி இருந்தாலும் ஒரே தன்மையில் இல்லை. சில நேரங்களில் அல்லது சில இடங்களில் வலிமை குறைந்தும் வேறு சில நேரங்களில் அல்லது இடங்களில்  வலிமை மிகுந்தும் காணப்படுகின்றது. கப்பல் தளபதி பிரான்சிசு பியூஃபோருட்டு (Sir Francis Beaufort : 1774 –1857) என்னும் ஐரீசு நாட்டு நீர்ஆராய்வாளர் 1806ஆம் ஆண்டில் காற்று வீசும் வலிமைக்கேற்ப அதனை வகைப்படுத்தினார். அவ்வாறு காற்று வீசும் விரைவிற்கேறப்ப  வீச்சு எண்களையும் பின்வருமாறு வரையறுத்தார். வீச்சு எண்…

அன்றே சொன்னார்கள் 11 : முகிலறிவியலின் முன்னோடி நாமே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(அன்றே சொன்னார்கள் : சேம அச்சு – stepney – தொடர்ச்சி)   அன்றே சொன்னார்கள்முகிலறிவியலின் முன்னோடி நாமே!  வான் மழை பெய்யும் முகில் கூட்டம் பல வகையாய் உள்ளது என 19 ஆம்  நூற்றாண்டில் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். ஆவர்டு (Luke Howard: 1772-1864) என்னும் பிரித்தானிய அறிஞர் வெவ்வேறு வகை முகில் கூட்டம் உள்ளன என உணர்ந்து அவற்றிற்குப் பெயர்கள் இட்டார். என்ற போதிலும் முதல் முறையாக முகில்களின் வேறுபாடுகளை உணர்ந்து வகைப்பாடுகளை விளக்கியவர்  இலமார்க்கு (Jean-Baptiste Lamarck:1744-1829) என்னும் அறிவியலாளரே. ஆனாலும்…

புவியின் சுழற்சியை முதலில் உணர்ந்த தமிழர்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

(சேமக்குடுவையின் முன்னோடி – தொடர்ச்சி) அன்றே சொன்னார்கள் 7 புவியின் சுழற்சியை முதலில் உணர்ந்த தமிழர்கள்  பழந்தமிழ் மக்கள் அறிவியல் நோக்கிலேயே எதனையும் சிந்தித்தனர். ஆனால், பிற நாடுகளில் அறிவியல் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டபொழுது    அறிவியலாளர்கள்  சமயவாதிகளால் தண்டிக்கப்பட்டனர்; உயிர்பறிக்கப்பட்டனர். 1548 இல் பிறந்த இத்தாலிய அறிவியலாளர் கியார்டனோ புருனோ (Giordano Bruno) எனப்பெறும் பிலிப்போ புருனோ (Filippo Bruno) அண்டங்களைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தியவர். 1584இல், முடிவற்ற அண்டமும் உலகங்களும் (Infinite Universe and Worlds) முதலான இரு நூல்களை வெளியிட்டார். சமய நம்பிக்கைக்கு…