நாலடி நல்கும் நன்னெறி 3 – பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்!: இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 2.: இறப்பவரைப் பார்த்து இருப்பவர் உணர்க!-தொடர்ச்சி) பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்! இழைத்தநாள் எல்லை இகவா ; பிழைத்தொரீஇக் கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; ஆற்றப் பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் ; நாளைத் தழீஇம் தழீஇம் தண்ணம் படும். -நாலடியார், செல்வம் நிலையாமை , 6 பொருள்: வாழ்வதற்கு வரையறுக்கப்பட்ட கால அளவைக் கடந்து எமனிடமிருந்து தப்பிக் குதித்து ஓடிப் பிழைத்தவர் இல்லை! நாளைக்கே (விரைவில்) உங்களது பிணப்பறை ‘தழீம் தழீம்’ என்னும் ஓசையுடன் எழும். எனவே, பெரும் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவர்களே!…
நாலடி நல்கும் நன்னெறி 2.: இறப்பவரைப் பார்த்து இருப்பவர் உணர்க!-இலக்குவனார் திருவள்ளுவன்
(நிலையாமை உணர்ந்து நல்லறம் புரிக!-தொடர்ச்சி) இறப்பவரைப் பார்த்து இருப்பவர் உணர்க! சென்றே யெறிப வொருகால் சிறுவரை நின்றே யெறிப பறையினை – நன்றேகாண் முக்காலைக் கொட்டினுண் மூடித்தீக் கொண்டெழுவர் செத்தாரைச் சாவார் சுமந்து. (நாலடியார் பாடல் 24) பொருள்: (பறை அடிப்போர்) இறந்தவர் வீட்டிற்குச் சென்று ஒரு முறை பிணப்பறையை அடிப்பர்; சற்று நேரம் சென்றதும் மீண்டும் ஒரு முறை அடிப்பர்; மூன்றாவது முறை பறை அடிக்கும் பொழுது இனி இறக்கப் போகிறவர்கள், பாடையில் இறந்தவர்களைத் துணியால் மூடி மறைத்துத் தூக்கிக் கொண்டு, நெருப்புச்…
சங்கப்புலவர்கள் பொன்னுரை – 5: உன்னுடைய இன்பத்திற்காகப் பிறருக்குத் துன்பம் செய்யாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 4: தொடர்ச்சி) சங்கப்புலவர்கள் பொன்னுரை – 5: உன்னுடைய இன்பத்திற்காகப் பிறருக்குத் துன்பம் செய்யாதே! “தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னாசெய்வது நன்று ஆகுமோ…” கபிலர், கலித்தொகை 62: 7, 8 – வெண்கலிப்பா – கலித்தொகை – 62, குறிஞ்சிக் கலி – 26 – தலைவன் கூற்று– பாடியவர்: கபிலர்– திணை: குறிஞ்சிகி.மு. காலத்துப் பாடல் தமக்கு இனிதாய் இருக்கின்றது என்று கருதிப்…
ஆளுமையர்உரை 124 & 125; என்நூலரங்கம்-கருவிகள் 1600
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௨ – 642) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் ஆளுமையர் உரை 124 & 125; என் நூலரங்கம் இணையவழி யரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 பங்குனி 09, 2056 ஞாயிறு 23.03.2025 காலை 10.00 மணி தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன் “தமிழும் நானும்” –…
நிற வகைகள்-இலக்குவனார் திருவள்ளுவன்
நிற வகைகள் புதிய அறிவியல் – செவ்வாய்க் கிழமை, புரட்டாசி 2, 2043 12:03 இதிநேTuesday, September 18, 2012 12:03 IST பால் போல் வெண்ணிறம் கொண்டவனைப் பால்வண்ணன் என்றும் முத்துபோல் வெண்ணிறம் கொண்டவனை முத்து வண்ணன் என்றும் சொல்வது பழந்தமிழர் வழக்கம். மலர்களின், விலங்குகளின் வண்ண அடிப்படையிலும் நிறங்களைக் குறிப்பிட்டுள்ளனர். இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இந்நிறங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது. நிறங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை…
வழிவழியாகச் சிறந்து வாழ்வாயாக…! – சங்கப்புலவர்கள் பொன்னுரை – 4: இலக்குவனார்திருவள்ளுவன்
(சங்கப்புலவர்கள் பொன்னுரை – 3 தொடர்ச்சி) வழிவழியாகச் சிறந்து வாழ்வாயாக…! வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்துபொலிமின்!(தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல் 422) கடைச்சங்கக் காலத்தைத்தான் நாம் சங்கக்காலம் என்கிறோம். அதற்கு முற்பட்ட சங்கத்தைச் சேர்ந்ததுதான் தொல்காப்பியம். எனவே, தொல்காப்பியப் பொன்னுரைகளையும் சங்க இலக்கியப் பொன்னுரையில் சேர்த்துப் பார்ப்போம். கடவுள் வணக்கம் என்பது தமிழர்க்குரியதுதான். ஆனால், அதில் மூடநம்பிக்கை கலக்கக் கூடாது. தெய்வ முணாவே மாமரம் புட்பறைசெய்தி யாழின் பகுதியொடு தொகைஇஅவ்வகை பிறவுங் கருவென மொழிப. …
குறள் கடலில் சில துளிகள் 22. உன்னைத் திருத்திய பின் ஊரைத் திருத்து! – இலக்குவனார்திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 21. வருமுன் காத்திடு! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 22. உன்னைத் திருத்திய பின் ஊரைத் திருத்து! தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்பிற்பின் என்குற்றம் ஆகும் இறைக்கு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், குறள் எண்: 436) தன் குற்றம் கண்டறிந்து நீக்கிப் பிறர் குற்றம் காண்பவனுக்கு எக்குற்றமும் வராது என்கிறார் திருவள்ளுவர். ஆளுமையியலாளர்கள், பிறர் குற்றங்களைப் பார்க்கும் முன்னர் முதலில் உன்னைப் பார் (Look at yourself first, before looking on to others) என்கின்றனர்….
தமிழ்க் காப்புக் கழகம்: ஆளுமையர் உரை 122 & 123; எம் நூலரங்கம்
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று. (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௧ – 641) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் ஆளுமையர் உரை 122 & 123; எம் நூலரங்கம் கூட்ட இணைப்பு கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 மாசி 25, 2056 ஞாயிறு 09.03.2025 காலை 10.00 மணி தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன் “தமிழும் நானும்” – ஆளுமையர்கள்…
குறள் கடலில் சில துளிகள் 21. வருமுன் காத்திடு!- இலக்குவனார்திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 20. குற்றம் என்னும் பகை – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 21. வரு முன் காத்திடு! இல்லையேல் அழிவாய்! வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், குறள் எண்: 435) குற்றம் வரும் முன்னர்க் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை நெருப்பின் முன் உள்ள வைக்கோல் போல அழியும் என்கிறார் திருவள்ளுவர். ஆட்சியியல், வணிகவியல், இயந்திரவியல், மின்னியல், பயிரியல் முதலான பல துறை அறிஞர்களும் வரும் முன்னர்க் காத்திடுமாறு கூறுகின்றனர். வைத்தூறு=வைக்கோற்போர்; வைக்கோல்…
குறள் கடலில் சில துளிகள் 20. குற்றம் என்னும் பகை- இலக்குவனார்திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 19. குற்றம் சிறிதாயினும் பெரிதாய் அஞ்சு! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 20. அழிவுதரும் குற்றம் என்னும் பகை உருவாகாமல் காத்திடுக! குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றம் தரூஉம் பகை (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், குறள் எண்: 434) அழிவுதரும் உண்மையான பகை குற்றச் செயலே ஆகும். அதனால் குற்றமில்லா வாழ்க்கையை இலக்காகக் கொண்டு காத்திடுக என்கிறார் திருவள்ளுவர். குற்றத்தையே பகை எனக் கருதி நீக்கி வாழ்ந்தால் குற்றவாழ்வு இல்லாமல் போகும் எனத் தண்டனையியலாளர்கள் கூறுகின்றனர். அற்றம்=இறுதி,…
குறள் கடலில் சில துளிகள் 19. குற்றம் சிறிதாயினும் பெரிதாய் அஞ்சு! – இலக்குவனார்திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 18. இம்மூன்றும் குற்றங்களாம் – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 19. குற்றம் சிறிதாயினும் பெரிதாய் அஞ்சு! தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், குறள் எண்: 433) பழிக்கு அஞ்சுவோர், தம்மிடம் தினையளவு சிறு குற்றம் நேர்ந்தாலும் பனையளவாகக் கருதி வருந்துவர் என்கிறார் திருவள்ளுவர். சிறிய குற்றங்களையும் பெரிய குற்றங்களாகக் கருதி அஞ்சி வாழ்ந்தால் குற்றங்கள் குறையும் எனத் தண்டைனயியலறிஞர்கள் கூறுகின்றனர். தினை, பனை என்பன அக்கால அளவுப்பெயர்கள். தினை அரிசி…
குறள் கடலில் சில துளிகள் 18. இம்மூன்றும் குற்றங்களாம் – இலக்குவனார்திருவள்ளுவன்
( குறள் கடலில் சில துளிகள் 17. பெருமிதத்துடன் வாழ்க! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 18. கஞ்சத்தனமும் மாணமில்லா மானமும் முறையற்ற மகிழ்ச்சியும் குற்றங்களாம்! இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், குறள் எண்: 432) கஞ்சத்தனமும் மாட்சிமை இல்லாத மான உணர்வும் தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனுக்குக் குற்றங்களாகும் என்கிறார் திருவள்ளுவர். பிறருக்குக் கொடுக்கும் தலைமை இடத்தில் கொடையுள்ளம் கொண்டவர்களே இருக்க வேண்டும் என ஆட்சியியலர்கள் கூறுகின்றனர். இவறல்=தேவைக்கு ஏற்பப் பொருள் கொடாமை; மாண்புஇறந்த=மாட்சிமை நீங்கிய; …
