சட்டச் சொற்கள் விளக்கம் 381-390 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 371-380 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 381-390 381. accommodate இணக்குவி இடங் கொடு 382. accommodation இடவசதி உறையுள்; தங்கியிருத்தல் கடனுதவி; பணஉதவி ஏற்பமைவு, தகவமைப்பு, இசைவாக்கம் குடியிருப்பு, அறை, வாழ்விடம், பணியிடம், தொழிலிடம் போன்றவற்றிற்குத் தேவையான வாய்ப்பு நலனை வழங்குவது. அவசரக்காலத்தில், கடனாக அல்லது பணமாக அல்லது வேறு வகையில் தேவைப்படுவதை அல்லது விரும்புவதை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடு. 383. accommodation acceptor கடனுதவி ஏற்பவர்; பணஉதவி…
தமிழ்நாட்டு மக்களே தமிழைத் தொலைக்காதீர் ! தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்I விசவனூர் வே. தளபதி
தமிழ்நாட்டு மக்களே! தமிழைத் தொலைக்காதீர் ! தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்I விசவனூர் வே. தளபதி
சட்டச் சொற்கள் விளக்கம் 371-380 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 361-370 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 371-380 371. accidental தற்செயலான எதிர்பாராத; தற்செயலாக தற்செயலான நேர்வில் ஏற்படும் குற்றத்தைக் குற்றமனச் செயலாகப் பார்ப்பதில்லை. 372. accidental consequences எதிர்பாரா விளைவுகள் எதிர்பாராமல் அல்லது எதிர்நோக்காமல் நேரும் தற்செயலான விளைவுகளைக் குறிப்பது. 373. accidental death தற்செயலான மரணம்; நேர்ச்சி மரணம் எதிர்பாராமல் அல்லது எதிர்நோக்காமல் நிகழும் ஊர்தி மோதல், தீப்பற்றல், வண்டி அல்லது படகு கவிழல் போன்ற நேர்ச்சியால் ஏற்படும் உயிரிழப்பைக்…
சட்டச் சொற்கள் விளக்கம் 361-370 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 351-360 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 361-370 361. Accident நேர்ச்சி எதிர்பாரா விளைவு விபத்து; தற்செயல் நேர்வு accidēns என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நிகழ்தல்/நேருதல். எனவே, நேர் பொருளாக நேர்ச்சி என்கின்றனர். எதிர்பாரா நேர்வைக் குறிப்பதால், எதிர்பாரா நேர்ச்சி என்பர். இருப்பினும் வழக்கத்தில் விபத்து என்று சொல்லும் பொருளை இதில் உணராமல் பயன்படுத்துவதில்லை. எனினும் வண்டி மோதல், தீப்பற்றியது, என்பதுபோன்று இடத்திற்கேற்பச் சொல்லலாம். சட்டமுறையான செயலை சட்ட…
சட்டச் சொற்கள் விளக்கம் 351-360 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 341-350 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 351-360 351. Accession register அணுகல் பதிவேடு இதனை அருங்காட்சியக அணுகல் பதிவேடு, நூலக அணுகல் பதிவேடு என இரண்டாகக் குறிக்கலாம். அருங்காட்சியகத்திலுள்ள நிலையான காட்சியகப் பொருள்களின் பதிவுகளை மேற்கொள்வதற்குரிய பதிவேடு. நூலகத்தில் உள்ள புத்தகங்கள், ஒலிஇழை, ஒளிஇழை முதலான பல்வேடு வடிவங்களில் உள்ள நூற்பதிவுகள் ஆகியவற்றைப் பதியும் பதிவேடு. 352. accession to office பதவியிலிருத்துகை ஒருவரைப் பதவியில் அமர்த்தி இருக்க வைத்தல்….
பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை 2/2; இலக்குவனார் திருவள்ளுவன்
(பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை ½ – தொடர்ச்சி) முனைவர் மெய்.சித்திரா, ஆங்காங்கு பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை 2/2 மக்கள், மன்பதை, குடும்பம், அன்பு, விருப்பு-வெறுப்பு, நட்பு, வானகம்-வையகம், அண்டம், இயற்கை, அரசு, போர், அழுக்காறு, நன்னெறி, அறம், ஒழுக்கம், அரசாண்மை, அறிவு, வாழ்க்கை, பற்று, காலம், மொழி, பொருளியல், அரசியல், உறவு, வலியறிதல், பொறுமை, பணிவு, எளிய தீர்வுகள் எனப் பல பொருண்மைகளில், திருக்குறள் நூலிலும் தாவோ தே சிங்கு நூலிலும் உள்ள ஒப்புமைக் கருத்துகள் பலவற்றையும் எடுத்து…
சட்டச் சொற்கள் விளக்கம் 341-350 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 331-340 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 341-350 341. Access, direct நேரடி அணுகல் மின்னஞ்சல் முதலியவற்றை நேரடியாக அணுகும் வாய்ப்பு. 342. Access, open court to Which the public may have மக்கள் அணுகுவதற்கேற்ற வெளிப்படையான நீதிமன்றச் செயற்பாடு. கொள்கையளவில், இந்தியக் குடிமக்கள் அனைவரும் இந்நாட்டில் உள்ள நீதிமன்றங்களை அணுகலாம். ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதிமன்றத்தின் மூலம் நீதி பெற உரிமை உண்டு என்பதை இஃது உணர்த்துகிறது. எந்தவொரு குடிமகனும் தங்கள்…
தேர்தல் முடிவுகளின் தாக்கம்! | தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் | விசவனூர் வே. தளபதி
முற்றம் இணையத் தொலைக்காட்சி தேர்தல் முடிவுகளின் தாக்கம் இலக்குவனார் திருவள்ளுவன் உடன் விசவனூர் வே. தளபதி உரையாடல்
பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை ½; இலக்குவனார் திருவள்ளுவன்
முனைவர் மெய்.சித்திரா, ஆங்காங்கு பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை 1/2 முனைவர் மெய்.சித்திரா அறிவியலிலும் கணிப்பொறிப் பயன்பாட்டிலும் வரலாறு-தொல்லியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதுடன் தகவல் முறைமைகளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்; கல்வெட்டியலில் பட்டயம் பெற்றுள்ளார்; இதழியலில் சான்றிதழ் பெற்றுள்ளார்; தொடர்ந்து கல்விப் பட்டங்கள் பெற்று வருகிறார். தமிழ்-கொரிய, தமிழ்-சுமேரிய, தமிழ்-சீன பண்டைய தொடர்புகள், கோவில் குறியீடுகள், கோலங்கள் பற்றிய ஆய்வாளராகத் திகழ்கிறார். ஆங்காங்கு தமிழ் மலர் ஆசிரியராக 4 ஆண்டுகள்(2014-2018) தொண்டாற்றி யுள்ளார். 2020 முதல் ‘இலக்கியச் சுடர்’ மின்னிதழ் ஆசிரியர்…
சட்டச் சொற்கள் விளக்கம் 331-340 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 331-340 : இலக்குவனார் திருவள்ளுவன் Accepted and countersigned ஏற்று மேலொப்பமிடப்பட்டது ஆவணத்திலுள்ள விதிகள்/வகையங்கள்/கூறுகள், செயன்மை(action) இரு தரப்பாராலும் ஏற்கப்பட்டதன் அடையாளமாக முதல் தரப்பார் கையொப்பமிட்டதும் அதனை ஏற்கும் வகையில் மறு தரப்பாரும் கையொப்பமிடுவது. ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், முதன்மையான ஆணைகள், என எவையாக இருந்தாலும் ஒப்புதலுக்கான இரண்டாம் கையொப்பமே மேலொப்பமாகும். Accepted in principle கொள்கையளவில் ஏற்றல் முழு விவரங்கள் அறியாச் சூழலில், சாத்தியமா இல்லையா…
சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 311-320 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 321. acceptance of final bill இறுதிப் பட்டி ஏற்பு இறுதிப் பட்டியை ஏற்றல் கணக்கை முடித்து வைக்கும் பட்டி அல்லது நிதிப்பட்டியல் ஏற்றல். 322. acceptance of less sum குறை தொகை ஏற்பு குறைந்த தொகை ஏற்றல் ஒப்பந்தத்தில் அல்லது உடன்படிக்கையில் குறித்த தொகையைவிடக் குறைவான தொகையை ஏற்றல். 323. acceptance of offer தருகை ஏற்பு…
சட்டச் சொற்கள் விளக்கம் 311-320 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 306-310 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 311-320 311. Acceptable ஏற்கத்தக்கது ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுதியோ திறனோ உடையது. ஏற்கத்தக்க ஒலி அளவு. மன்பதையில் ஏற்கத் தக்க நடத்தை. இரு தரப்பும் ஏற்கத் தக்க இணக்கத் தீர்வு. நடைமுறை, செயல்முறை, அல்லது கொள்கையை மதிப்பாய்வு செய்து ஏற்றல். 312. Acceptable reliability level ஏற்பு நம்பக அளவு ஒரு பொருளின் நம்பகத் தன்மை குறித்த அளவு. 313. Acceptability ஏற்புத்திறன் …
