திருக்குறள் அறுசொல் உரை: 114. நாணுத் துறவு உரைத்தல்: வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 113. காதல் சிறப்பு உரைத்தல் : தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் நாணுத் துறவு உரைத்தல் காதலர் தம்தம் காதல் மிகுதியை வெட்கம்விட்டு மொழிதல் (01-07 தலைவன் சொல்லியவை) 1131 காமம் உழந்து வருந்தினார்(கு), ஏமம், மடல்அல்ல(து) இல்லை வலி. “காதல் வெல்ல, மடல்குதிரை ஏறுதல்தான் மிகநல்ல வழி”. நோனா உடம்பும், உயிரும் மடல்ஏறும், நாணினை நீக்கி நிறுத்து. “காதல்துயர் பொறாத…
திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் : புதுமை விளக்கம் தரும் ஒரு புதிய முயற்சி – முகிலை இராசபாண்டியன்
‘திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும்’ – புதுமை விளக்கம் தரும் ஒரு புதிய முயற்சி ஆய்வுரை இந்தியப் பொதுநூலாகத் திருக்குறளை அறிவிக்க வேண்டும் என்னும் கோரிக்கை இந்திய அரசிடம் தொடர்ந்து எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகப் பொதுநூலாகத் திருக்குறளை அறிவிக்க வேண்டும் என்னும் கோரிக்கையும் தற்போது எழுந்து கொண்டி ருக்கின்றது. ஈராயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் இன்று புதிதாய்ப் பிறந்தது போன்ற தன்மையுடன் எல்லாருக்குமான அறிவியல் கருத்துகளை அள்ளித் தரும் பெருமை கொண்ட திருக்குறள் உலகப் பொதுநூலாக அறிவிக்கப்படும் காலம் வரும் என்பதற்கு இந்த…
திருக்குறள் அறுசொல் உரை: 113. காதல் சிறப்பு உரைத்தல் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 112. நலம் புனைந்து உரைத்தல் – தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் 113. காதல் சிறப்பு உரைத்தல் தகுதலைவனும், தலைவியும், தம்தம் மிகுகாதல் சிறப்பை உரைத்தல். (01-05 தலைவன் சொல்லியவை) பாலொடு தேன்கலந்(து) அற்றே, பணிமொழி வால்எயி(று) ஊறிய நீர். “பணிவு மொழியாளின் வாய்ஊறல், பால்,தேன் கலவைபோல் இனிக்கும்.” உடம்பொ(டு) உயிர்இடை என்ன, மற்(று) அன்ன, மடந்தையொ(டு) எம்இடை நட்பு. “உடம்புக்கும்,…
திருக்குறள் அறுசொல் உரை: 112. நலம் புனைந்து உரைத்தல் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 111. புணர்ச்சி மகிழ்தல்: வெ. அரங்கராசன் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் 112.நலம் புனைந்து உரைத்தல் தலைவியின் நலம்மிகு அழகைத், தலைவன் மகிழ்ந்து பாராட்டியது. (01-10 தலைவன் சொல்லியவை) “நல்நீரை வாழி, அனிச்சமே! நின்னினும், மெல்நீரள் யாம்வீழ் பவள்”. “மெல்லிய அனிச்சப்பூவே! என்னவள் மெல்லியவள், உன்னைக் காட்டிலும்”. மலர்காணின் மையாத்தி நெஞ்சே! இவள்கண், பலர்காணும் பூஒக்கும் என்று. “மனமே! இவள்கண், பலர்காணும்…
திருக்குறள் அறுசொல் உரை: 111. புணர்ச்சி மகிழ்தல் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 110. குறிப்பு அறிதல்: வெ. அரங்கராசன் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் 111. புணர்ச்சி மகிழ்தல் தலைவன் மணந்து, கூடிமகிழ்ந்த இன்பத்தை, எடுத்துக் கூறுதல். (01-10 தலைவன் சொல்லியவை) கண்டு,கேட்(டு), உண்(டு),உயிர்த்(து), உற்(று)அறியும் ஐம்புலனும், ஒண்தொடி கண்ணே உள. கண்டு,கேட்டு, உண்டு,முகர்ந்து, தொடுஇன்பம் இவளிடமே உண்டு. பிணிக்கு மருந்து பிறமன்; அணிஇழை தன்நோய்க்குத், தானே மருந்து. நோய்க்கு மருந்து வேறு;…
திருக்குறள் அறுசொல் உரை: 110. குறிப்பு அறிதல்: வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 109. தகை அணங்கு உறுத்தல் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் அதிகாரம் 110. குறிப்பு அறிதல் பார்வை, செயல்களால், காதலியின் ஆழ்மனக் குறிப்பினை அறிதல் (01-10 தலைவன் சொல்லியவை) இருநோக்(கு), இவள்உண்கண் உள்ள(து); ஒருநோக்கு நோய்நோக்(கு),ஒன்(று) அந்நோய் மருந்து. இவளிடம் இருபார்வைகள்; ஒன்று, நோய்தரும்; மற்றுஒன்று, மருந்து. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம், காமத்தில் செம்பாகம் அன்று: பெரிது. காதலியின் கள்ளப் பார்வை, காதலில் பாதியைவிடப்…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 6/6
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை: திருக்குறள் ஆராய்ச்சி 5/6 தொடர்ச்சி) பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 6/6 பொருளியலிலும் நாட்டியல் ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார் (திருக்குறள் 463) இக்குறளுக்குப் பொருள்சார் விளக்கம் மட்டும் தராமல், ‘‘பிறர் நாட்டை அடிமைப்படுத்தச் சென்று தம் நாட்டை இழந்த செயல்கள் வரலாறுகளில் நிறைய உள’’ [18] எனப் புதுமையாக நாட்டாசை அடிப்படையிலும் விளக்குகிறார். பேராசிரியரின் திருவள்ளுவர் கால ஆராய்ச்சி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் பிற அறிஞர்கள்…
திருக்குறள் அறுசொல் உரை: 109. தகை அணங்கு உறுத்தல்: வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை 108. கயமை தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் அதிகாரம் 109. தகை அணங்கு உறுத்தல் தகுதிமிகு தலைமகளது அழகு, தலைமகனது மனத்தை வருத்துதல் (01-10 தலைமகன் சொல்லியவை) அணங்குகொல்…? ஆய்மயில் கொல்லோ…? கணங்குழை மாதர்கொல்….? மாலும்என் நெஞ்சு. தெய்வ மகளோ….? மயிலோ….? மண்மகளோ….? என்மனம் மயங்கும். நோக்கினாள்; நோக்(கு)எதிர் நோக்குதல், தாக்(கு)அணங்கு தானைக்கொண்(டு)…
திருவள்ளுவரின் உயிரியல் பார்வைத் திறன்-குறளேந்தி ந.சேகர்
திருவள்ளுவரின் உயிரியல் பார்வைத் திறன் தமிழ் மொழியில் தோன்றிய இலக்கியச் செல்வங்களுள் தலை சிறந்தது திருக்குறள். தமிழரே அல்லாமல் அயலவரும் உரிமை பாராட்டிப் பயன் எய்துதற்கு மிக்க துணையாவது இந்நூல். தான் தோன்றிய நாள் முதல் தலைமுறை தலைமுறையாக எத்தனையோ நாட்டவரும், மரபினரும், மொழியினரும், சமயத்தினரும் நுகர்ந்து பயன் பெறுமாறு செய்தும் அழியாச் செல்வமாகத் திகழ்வது திருக்குறள் ஒன்றே ஆகும். இது சான்றாண்மை நிறைந்த அரும் பெரும் புலவர் பெருமானார் என உலகில் உள்ள எல்லா மொழிப் புலவர்களாலும் சிறப்பித்துப் பாராட்டப்பெறும்…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறள் உரைச் சிறப்பு 2/2 : செ. இரவிசங்கர்
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறள் உரைச் சிறப்பு 1/2 தொடர்ச்சி) திருக்குறள் உரைச் சிறப்பு 2/2 சுருக்கம்: ‘சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல் ’ என்பது போல திருக்குறளுக்கான உரையை மிகச் சுருக்கமாகச் சொல்லி புரிய வைத்துள்ளபணியை இலக்குவனார் மிகத் தெளிவாகச் செய்துள்ளார். இலக்குவனார் சுருக்கமாக உரை யெழுதக் காரணம் யாது? “ஓரளவு படிப்பறி வுடையோரும் புரிந்துகொள்ளும் வகையில் திருக்குறள் எளிய பொழிப்புரை எழுதினார்” என்று மறைமலை கூறுகிறார். எனவேதான் சுருக்கமான கருத்தை எழுதியுள்ளார் எனலாம். திருக்குறளில் அதிகாரத்திற்கு அமைந்துள்ள தலைப்பை உரையாசிரியர்கள் விளக்க…
மறுமை – மீண்டும் பதவியில் அமரும் தன்மை: சி.இலக்குவனார்
மறுமை – மீண்டும் பதவியில் அமரும் தன்மை மனநலத்தி னாகு மறுமைமற் றஃது மினநலத்தி னேமாப் புடைத்து (குறள் 459) மறுமை -மீண்டும் அப்பதவியில் அமரும் தன்மை, மன நலத்தின் ஆகும்-உள்ளத்தின் சிறப்பால் உண்டாகும், மற்று அஃதும்-மீண்டும் அங்ஙனம் ஆவதும், இனநலத்தின்-சூழ்ந்திருக்கும் இனத்தின் சிறப்பால், ஏமாப்பு உடைத்து-வலிமை உடையது ஆகும். அரசியல் பதவிகளில் மீண்டும் மீண்டும் அமர்ந்து தொண்டாற்றும் நிலைமை எல்லோர்க்கும் கிட்டுவது அன்று. ஒரு முறை ஆண்ட பின்னர் மறுமுறை மக்களால் அமர்த்தப்பட வேண்டுமாயின், சிறந்த நற்பண்பு…
ஆட்சி முறைகள் செம்மை யுறுதல் வேண்டும் – சி.இலக்குவனார்
ஆட்சி முறைகள் செம்மை யுறுதல் வேண்டும்! உலகம் நல்லின்பம் பெற ஆட்சி முறைகள் செம்மை யுறுதல் வேண்டும். ஆட்சிமுறை செம்மையுற ஆளுவோர் உளம் நற்பண்பு அடைதல் வேண்டும். ஆட்சிமுறை எவ்வளவு சிறந்ததாய் இருப்பினும் ஆளுவோர் உளநிலை பண்பட்டிலதேல் பயனற்றுவிடும். ஆதலின் ஆட்சித்துறையில் அமர்வோர் உளம் செம்மையுற வேண்டும். அவர் மனநலத்தால் அவர் நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக மக்களே நன்மை பெறுவர். உலகில் உள்ள பல நாடுகளும் ஒன்றோடொன்று தொடர்புற்றுச் சார்ந்து வாழும் நிலையில் உள்ளன. ஒரு நாட்டின் இன்பதுன்பம் பிறநாடுகளையும் சார்கின்றன….