புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.6-10

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.1-5  தொடர்ச்சி) 6.      இன்னாத வெவ்வுயிர்க்குஞ் செய்யாதே யெவ்வுயிரும்                 பொன்னேபோ லருள்பூத்துப் புறந்தந்து புகழ்பூத்தார்                 கொன்னாளுங் கலஞ்செலுத்திக் குடயவனப் பெருவணிகர்                 பொன்னாடிப் பொருணாடிப் புகலாகும் புகழ்நாடர்.            7.     நலக்குறையே வலக்குறையா நற்குணநற் செய்கைதமக்                 கிலக்கியமாய் வழிவருவோர்க் கிலக்கணமா யெனைத்தொன்றும்                 சொலக்குறையா மனைவாழ்க்கைத் துறைநின்று முறைவாழ்ந்தார்                 இலைக்குறையென் றெனைவளமு மினிதமைந்த வியனாடர்.            8.     பொருவிலே மெனப்போந்த பொருளிலரை யெள்ளுதலும்                 திருவிலே மெனக்குறைவு சிந்தையிடைக் கொள்ளுதலும்                 வெருவிலே யகன்றோட வேற்றுமையற் றேவாழ்ந்தார்                 கருவிலே திருவுடைய கவல்காணாக் கலைநாடார்.           …

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  51

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  50 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 19 குண்டலந் திகழ் தரு காதுடைக் குழகனைவண்டலம்பும் மலர்க் கொன்றைவான் மதியணிசெண்டலம்பும் விடைச் சேடனூர் ஏடகம்கண்டுகை தொழுதலும் கவலை நோய் அகலுமே.      — திருஞானசம்பந்தர் “நீ மனம் வைத்தால் நிச்சயமாக இந்தக் காரியத்தைச் சாதிக்க முடியும் அரவிந்தன். அதற்கு இதுதான் சரியான சமயம். துணிந்து தான் இதில் இறங்க நினைக்கிறேன்…” இதற்கு அரவிந்தன் ஒரு பதிலும் சொல்லாமல் தமது முகத்தையே பார்த்தவாறு அமர்ந்திருப்பதைக் கண்டதும் மீனாட்சிசுந்தரம் பேச்சை நிறுத்தினார். எழுந்திருந்து கைகளைப்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 129-132

(தமிழ்ச்சொல்லாக்கம்  124-128 தொடர்ச்சி) (சொல்மொழிமாற்றம்பெற்றசுவடுகளைஅடையாளங்காட்டும்சுரதாவின்அரியதொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம்பார்வையில் பட்டவற்றை) தேடித்தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 129. இரசாயன நூல் – பொருட்டிரிவு நூல் யாம் மதநூலைக் குறித்துச் சொல்லிய நியாயமே யிவற்றிற்கெல்லாம் பொருந்தும். நூலென்னும் பெயர்க்குச் சில வுளவே யன்றி முறை வழுவாது எளிதிற்றெளிவாக விளங்கும்படி யெழுதிய நூல்கள் அரிதினுமரிதா யிருக்கின்றனவே. தற்காலத்தாசிரியர் ஒருவர், இரசாயன நூல் என்பதனைப் பொருட்டிரிவு நூலெனப் புதுப்பெயரிட்டழைத்தனர். (ஞானபோதினி – Sept. 1902) இதழ் :           யதார்த்த பாசுகரன்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1713-1719 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1712 இன் தொடர்ச்சி) 713. வானகத் தொல்லியல் Astroarcheaology 1714. வானக Astro – வான், விண், அசுரோ, சோதிடம், உடு எனக் கூறப்படுகின்றன. அசுரோ என்பது ஒலிபெயர்ப்புச் சொல். சோதிடம் தமிழ்ச்சொல்லல்ல. உடு என்பதற்கு விண்மீன் என்பது பொருள். எனவே, இந்த இடத்தில் உடு என்பது பயன்படுத்தப்பட வேண்டா. வானின் அகத்தே உள்ள பொருள்கள் என்னும் பொருளில் வானகம் எனலாம். முன்னொட்டுச் சொல்லிற்கு வானக  – Astro என்று குறிக்கலாம்.     Astro   1715….

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 124-128 

(தமிழ்ச்சொல்லாக்கம்  118 -123 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 124. Hero – பெருமான் 125. Heroine – பெருமாட்டியார் இந்துக்கள் அதிர்ட்டவசமென்றும், திசாபலம் இராசி நட்சத்திரங்களின் பலமென்றும், ஊழ்வினைப் பலமென்றும் பலவகையில் இந்நடவடிக்கைகட்கு நியாயம் சொல்வதால், கவி எடுத்துக்கொண்ட பெருமான், பெருமாட்டியார் (Hero, Heroine) பெருமை இவ்வித இவ்வித சம்பவங்களால் அலங்கரிக்கப்பட்டு விசித்திரமாவது பற்றி, இதை ஒரு அணியென வகுத்தல் தமிழாசிரியர் பெற்றியாம். மேற்படி நூல் : பக்கம் : 414 ★ 126. சூரிய நாராயண சாத்திரியர் -பரிதிமாற்கலைஞன் இதுகாறும்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 118 – 123 

(தமிழ்ச்சொல்லாக்கம்  111-117 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 118. ஆண்டிமொனி – நிமிளை அச்செழுத்து எப்படி உண்டாகிறது? நாலு பங்கு ஈயத்துக்கு ஒரு பங்கு நிமிளை (ஆண்டிமொனி) கூட்டுவார்கள். நூல்   :           மூன்றாம் சுடாண்டர்டு புத்தகம் – பதப்பொருளும் வினா விடையும் (1897) நூலாசிரியர்         :           எத்திராச முதலியார். ★ 119. அம்போதரங்கம் – நீரின் அலை அம்போதரங்கம் (நீரின் அலை) அல்லது அசையடி – இது கடல் அலைகள்போல அடிகள் அளவடியாய்ப் பெருத்தும், சிந்தடியாய்ச் சிறுத்தும், குறளடியா யதனினும் சிறுத்தும் தாழிசைக்குப் பின்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  50

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  49 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 18 “தாங்க முடிந்ததற்கு மேல் அதிகப்படியான சுமையைத் தாங்கிக் கொண்டிருக்கிறவன் ஏலாமையோடு முனகுகிற மாதிரி வாழ்க்கையில் இன்று எங்கும் ஏலாமையின் முனகல் ஒலி கேட்டுக் கொண்டிருக்கிறது. முள்ளோடு கூடிய செடி பெரிதாக வளர வளர முள்ளும் பெரிதாகி வளர்ந்து கொண்டிருப்பதைப் போல உரிமைகளும் விஞ்ஞான விவேக வசதிகளும் நிறைந்து வாழ்க்கை தழைத்து வளர வளர அதிலுள்ள வறுமைகளும் பிரச்சினைகளும் பெரிதாகி வளர்ந்து கொண்டிருக்கின்றன. குற்றம் குறைகளோடு தப்பாக எடுக்கப் பெற்ற புகைப்படத்தை அப்படியே பெரிது…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1712 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1707-1711 இன் தொடர்ச்சி) 1712. வானகவியல்   Astronomy – வானியல், வானசாத்திரம், ககோளசாத்திரம், வான நூல், வான வியல், வானவியல் வான நூல், வானூல், வான்கோள ஆய்வியல், விண்ணியல், கணிதசாத்திரம், சோதிட நூல், காலக்கணிதம், காலக் கணனம்பற்றிய வானசாத்திரம், சோதிசாத்திரம் எனக் கூறப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இவற்றுள் வானியல் என்பதையும் கணனம்(சோதிடம்) என்பதையும் Astronomy குறிப்பிடுகிறது. Ástron என்னும் கிரேக்கச் சொல்லுக்கு வானிலுள்ள பொருள்கள் எனப் பொருள். அஃதாவது, கோள்கள், நட்சத்திரங்கள் முதலியவை. Astrologia என்னும்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1707-1711 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1701-1706 இன் தொடர்ச்சி) 1707. வாழ்க்கைப் புள்ளியியல்   இன்றியமையாத புள்ளி விவரங்கள், உயிர்ப் புள்ளியியல், உயிர்ப் புள்ளிவிவரவியல், பிறப்பு இறப்பு விவரங்கள், உயிர்நிலைப் புள்ளிவிவரம், குடிவாழ்க்கைப் புள்ளியியல், குடிசனப் புள்ளிவிபரம், சனன மரணக் கணக்கு, சனங்களின் பிறப்பிறப்புப் பதிவுப் புத்தகம், பிறப்பிறப்பு விபரங்கள், பிறப்பிறப்புப் புள்ளிகள், பிறப்பு இறப்பு விவரங்கள், பிறப்பு-இறப்புப் புள்ளி விவரங்கள், முதன்மைப் புள்ளிவிவரங்கள், வாழ்க்கைப் புள்ளிவிபரம், வாழ்க்கைப் புள்ளிவிவரவியல் எனப் பலவாறாகக் கூறப் படுகின்றது.   உயிர், உயிர் நிலை, முதலானவற்றைக் கையாள்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 111- 117

(தமிழ்ச்சொல்லாக்கம்  106-110  தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 111. Room – சிற்றில் அறை – அடி, சொல், சிற்றில் (Room), திரை, பாறை, மறை, மலையுச்சி. நூல்   :           தமிழ் வித்தியார்த்தி விளக்கம் (1894) முதற் பாகம், பக், 2 நூலாசிரியர்         :           பு: த. செய்யப்ப முதலியார் (சென்னை சென்ட் மேரீசு காலேசு தமிழ்ப் பண்டிதர்) (தமிழ்நாட்டில் பயிற்சிமொழி தமிழாகத்தான் இருக்கவேண்டும் என்றவர்) ★ 112. விசாலாட்சி – அழகிய கண்ணையுடையவள் நூல்   :           தமிழ் வித்தியார்த்தி விளக்கம் (1894)…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  49

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  48 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 18 “இப்போதைக்கு என்னை விட்டுவிடு அரவிந்தன். இராத்திரி ஒன்பது மணிக்கு மேல் அச்சகத்துக்கு வந்து அடி முதல் நுனி வரையில் எல்லா விவரமும் நானே சொல்லிவிடுகிறேன். திலகர் திடலில் ஆறரை மணிக்குப் பொதுக்கூட்டம். நான் அதில் பேசுகிறேன்” என்று பரபரப்பைக் காட்டிக் கொண்டு அரவிந்தனிடமிருந்து நழுவினான் முருகானந்தம். “இந்தப் பொதுக்கூட்டம், தொழிற்சங்கம், சமூகத்தொண்டு, ஏழைகளின் உதவி நிதிகள் – இவையெல்லாம் இனி என்ன கதியடையப் போகின்றனவோ? நீ காதல் வலையில் நன்றாகச் சிக்கிக் கொண்டு…