(திருக்குறள் அறுசொல் உரை: 131. புலவி:தொடர்ச்சி)

திருக்குறள் அறுசொல் உரை

3. காமத்துப் பால்
15. கற்பு இயல்
132. புலவி நுணுக்கம் 

தவறுஇல்லாப் போதும், கூடல்இன்ப

மிகுதிக்காக நுட்பமாய்ச் சினத்தல்

             (01-02 தலைவி சொல்லியவை)

  1. பெண்இயலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்,

நண்ணேன், பரத்த!நின் மார்பு.

பெண்களின் பார்வைகளால் கற்பினை

இழந்தவனே! உன்னை நெருங்கேன்.

 

  1. ஊடி இருந்தேம்ஆத், தும்மினார், யாம்தம்மை,

     “நீடுவாழ்” கென்பாக்(கு) அறிந்து.

ஊடலில் தும்மினார், “நீடுவாழ்க”என

வாழ்த்துவேன் என்று நினைந்து.

 

(03-10 தலைவன் சொல்லியவை)

 

  1. கோட்டுப்பூச் சூடினும் காயும், “ஒருத்தியைக்

      காட்டிய சூடினீர்” என்று.

மரக்கிளைப் பூச்சூடினும் ஊடுவாள்,

“ஒருத்திக்குக் காட்டத்தானே” என்று.

 

  1. “யாரினும், காதலம்” என்றேன்ஆ, ஊடினாள்

      “யாரினும்? யாரினும்?” என்று.

       “யாரைவிடவும் காதல் மிகுதியோம்”

என்றேனா, “யாரினும்”….?என ஊடினாள்.

 

  1. “இம்மைப் பிறப்பில் பிரியலம்” என்றேன்ஆக்,

      கண்நிறை நீர்கொண்ட னள்

இப்பிறப்பில், பிரியோம்” என்றேனா,

மறுபிறப்பில் பிரிவோ….?” என்றாள்.

 

  1. “உள்ளினேன்” என்றேன்,மற்(று) “என்மறந்தீர்?” என்(று)என்னைப்      

      புல்லாள், புலத்தக் கனள்

“நினைத்தேன்” என்றேன்; “ஏன்மறந்தீர்?”

என்று, தழுவாது பிணங்கினாள்.

 

  1. வழுத்தினாள் தும்மினேன் ஆக; அழித்(து)அழுதாள்,

      “யார்உள்ளித் தும்மினீர்?” என்று.

தும்மினேன்; வாழ்த்தினாள்; பின்அழுதாள்,

        “யார்நினைப்பால் தும்மினீர்?” என்று.

 

  1. தும்முச் செறுப்ப அழுதாள், “நுமர்உள்ளல்

      எம்மை மறைத்திரோ?” என்று.

தும்மலை அடக்கினேன்; “யார்நினைப்பதை

         மறைக்க, அடக்கினீர்?” என்றாள்.

 

  1. தன்னை உணர்த்தினும் காயும், “பிறர்க்கும்நீர்

      இந்நீரர் ஆகுதிர்” என்று.

ஊடல்தீர்க்கப் பணிந்தாலும், “இப்படித்தானே

பிறரிடமும் நீர்” என்பாள்.

 

  1. நினைத்(து)இருந்து நோக்கினும் காயும், “அனைத்துநீர்

      யார்உள்ளி நோக்கினீர்?” என்று.

       உற்றுப் பார்த்தாலும், “யாரோடு

ஒப்பிடுகிறீர்?” என்றே ஊடுவாள்.

 

 

 

  பேரா.வெ.அரங்கராசன்