திருக்குறள் அறுசொல் உரை – 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 069. தூது தொடர்ச்சி)
02. பொருள் பால்
06. அமைச்சு இயல்
அதிகாரம் 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
ஆட்சியரிடம் பழகும் பொழுது
கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்.
- அகலா(து), அணுகாது, தீக்காய்வார் போல்க,
இகல்வேந்தர் சேர்ந்(து)ஒழுகு வார்.
மாறுபட்டு ஆள்வாரோடு விலகாமல்,
நெருங்காமல் ஆய்ந்து பழகு.
- மன்னர் விழைய விழையாமை, மன்னரால்
மன்னிய ஆக்கம் தரும்.
ஆட்சியார் விரும்புவதை விரும்பாமை,
நிலைக்கும் நன்மைகள் தரும்.
- போற்றின், அரியவை போற்றல்; கடுத்தபின்,
தேற்றுதல் யார்க்கும் அரிது.
ஆட்சியார் ஏற்காத பெரும்குற்றங்கள்
செய்வார், தப்பவே முடியாது.
.
- செவிச்சொல்லும், சேர்ந்த நகையும், அவித்(து)ஒழுகல்
ஆன்ற பெரியார் அகத்து.
காதுக்குள் சொல்லல், ஐயப்படுமாறு
சிரித்தல் பெரியார்முன் வேண்டா.
- எப்பொருளும் ஓரார், தொடரார்,மற்(று) அப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.
எப்பேச்சையும் ஒட்டுக் கேட்காதே;
கேட்காதே; சொன்னால், கேட்டுக்கொள்.
- குறிப்(பு)அறிந்து, காலம் கருதி, வெறுப்(பு)இல,
வேண்டுப வேட்பச் சொலல்.
குறிப்பை, காலத்தை ஆராய்ந்தபின்,
வேண்டியதை விரும்பும்படி சொல்
- வேட்பன சொல்லி, வினைஇல, எஞ்ஞான்றும்,
கேட்பினும் சொல்லா விடல்.
வேண்டியன, சொல்லு; வேண்டாவற்றைக்,
கேட்டாலும் சொல்லாது விட்டுத்தள்ளு.
- இளையர், இனமுறையர், என்(று)இகழார், நின்ற
ஒளியோ(டு) ஒழுகப் படும்.
‘இளையார், உறவார்’என இகழாது,
தக்க மதிப்போடு நடக்க.
- “கொளப்பட்டேம்” என்(று)எண்ணிக், கொள்ளாத செய்யார்,
துளக்(கு)அற்ற காட்சி யவர்.
“ஆட்சியார் மதிக்கிறார்” என்பதால்,
பேரறிஞர் தகாதன செய்யார்.
- “பழையம்” எனக்கருதிப், பண்(பு)அல்ல செய்யும்
கெழுதகைமை, கேடு தரும்.
“நெடுநாள் நண்பர்”எனப், பண்புக்கேடு
செய்யும் நட்புஉரிமையும் கேடு.
பேராசிரியர் வெ. அரங்கராசன்
Leave a Reply