(அதிகாரம் 086. இகல் தொடர்ச்சி)

arusolurai_munattai01

02. பொருள் பால்
12. துன்ப இயல்
அதிகாரம் 087. பகை மாட்சி

படைஅறிவு, வலிமை, நல்துணை

பொறுமை போன்றன பகைச்சிறப்புகள்.

  1. வலியார்க்கு மா(று)ஏற்றல் ஓம்புக; ஓம்பா

     மெலியார்மேல் மேக பகை.

     வலியார் பகையை, விலக்குக;

       மெலியார் பகையை, விரும்புக.

 

  1. அன்(பு)இலன், ஆன்ற துணைஇலன், தான்துவ்வான்,

     என்பரியும் (து)இலான் துப்பு….?

     அன்பு,துணை, வலிமை இல்லான்,

       பகைவரை எப்படி எதிர்கொள்வான்….?

 

  1. அஞ்சும், அறியான், அமை(வு)இலன், ஈகலான்,

     தஞ்சம் எளியன் பகைக்கு.

 

     அஞ்சாமை, படைஅறிவு, ஒழுங்கு,

       கொடைமைஎன இல்லான் தோற்பான்.

 

  1. நீங்கான் வெகுளி, நிறைஇலன், எஞ்ஞான்றும்,

     யாங்கணும், யார்க்கும், எளிது.

     நீங்காச் சினத்தான், மனக்கட்டுப்பாடு

       இல்லான் யாரிடமும் தோற்பான்.

 

  1. வழிநோக்கான், வாய்ப்பன செய்யான், பழிநோக்கான்,

     பண்(பு)இலன், பற்றார்க்(கு) இனிது.

     செயல்முறை, பழி,பண்பு ஆராயான்,

       முடிந்ததையும் செய்யான்; தோற்பான்.

 

  1. காணாச் சினத்தான், கழிபெரும் காமத்தான்,

     பேணாமை பேணப் படும்.

     கடும்சினத்தான், மிகுந்த காமத்தான்

       பகைவர் வெல்வற்கு வாய்ப்பாவான்.

 

  1. கொடுத்தும், கொளல்வேண்டும் மன்ற, அடுத்(து)இருந்து

     மாணாத செய்வான் பகை.

      அடுத்துஇருந்து கெடுப்பார்க்கு வேண்டியன

       கொடுத்தும் துணையாக் கொள்.

 

  1. குணன்இலனாய்க், குற்றம் பலஆயின், மாற்றார்க்(கு)

     இனன்இலன்ஆம் ஏமாப்(பு) உடைத்து.

     குணம்,துணை இல்லான், குற்றத்தான்,

       பகைவர் வெல்வதற்கு வாய்ப்பாவான்.

 

  1. செறுவார்க்கும் சேண்இகவா இன்பம், அறி(வு)இலா

     அஞ்சும் பகைவர்ப் பெறின்.

     படைஅறிவு இல்லாத, அஞ்சும்

       பகைவனை எதிர்ப்பான், மகிழ்வான்.

 

  1. கல்லான், வெகுளும், சிறுபொருளும் எஞ்ஞான்றும்

     ஒல்லானை, ஒல்லா(து) ஒளி.

     கல்லாதான், சினத்தான், சிறுபொருளும்

       இல்லாதான், வீரப்புகழ் பெறான்.

பேரா.வெ.அரங்கராசன்

பேரா.வெ.அரங்கராசன் :ve.arangarasan

அதிகாரம் 088. பகைத் திறம் தெரிதல்