தனிச் சின்னத்தில் போட்டி – வைகோவிற்குப் பாராட்டு
தனிச் சின்னத்தில் போட்டி – வைகோவிற்குப் பாராட்டு!
“ஈரோட்டு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி, தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவில்லை! தொகுதித் தேர்தல் அலுவலர் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவார்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தலைவர் வைகோ தெரிவித்துள்ளார்.
தி.மு.க. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துவதாகவும் ம.தி.மு.க.விற்குரிய பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை எனில் உதய சூரியனில் போட்டியிடுவதாக வைகோ தெரிவித்தார் என்றும் ஊடகங்களில் செய்திகள் வந்தன.
19.03.2019 வெளிவந்த ‘அகரமுதல’ இதழின் இதழுரையில் ‘பாவம் வைகோ’ எனக் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அதில், “ம.தி.மு.க.வின் சின்னமான பம்பரம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டியிட வேண்டுமே தவிர, உதயசூரியனில் போட்டியிடக் கூடாது” எனத் தொண்டர்களின் கருத்தை எதிரொலித்திருந்தோம்.
இதற்கிணங்க மேற்குறித்தவாறு தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ள வைகோவிற்குப் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவிக்கிறோம்.
Leave a Reply