தனித்தமிழ் இயக்கம் நடத்தும் சிறுவர் பாடல் போட்டி
பரிசு உருவா 1000.00
பாடல்அனுப்ப வேண்டிய கடைசிநாள் 2014 சனவரி 28
சிறுவர்கள் பாடிமகிழ்தற்கேற்ற இனிய 12 வரிப்பாடல்கள்
5 பாடல்கள் எழுத வேண்டும்.
முதற்பரிசு 500.00 உருவா
இரண்டாம் பரிசு 300.00 உருவா
மூன்றாம் பரிசு 200.00 உருவா
நெறிமுறைகள்
1.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.
2.பிறமொழிச் சொற்கள் கலவாத தனித்தமிழில் பாடல்கள் அமைய வேண்டும்.
3.அறிவியல்,விளையாட்டு,இயற்கை,பகுத்தறிவு,முதலிய பாடுபொருள்களைக் கொண்டு எளிமையாக இருத்தல் வேண்டும்.
4.இதுவரை வெளிவராத பாடல்களை மட்டுமே போட்டிக்கு அனுப்ப வேண்டும்.
5.பாடல்கள் தாளின் ஒருபக்கம்மட்டும் இருத்தல் வேண்டும். தாளின் பின்பக்கம் ஏதும் எழுதக்கூடாது.
6. பாடல்களின் 2 படிகளைக் கட்டாயம் அனுப்புக. ஒரு படியில்மட்டும் பெயர் முகவரி இருக்கலாம். ஒருபடியில் பெயர்போன்றவை இல்லாமல் வெறும்பாட்டு மட்டுமே இருத்தல் வேண்டும். பாடல் ஆசிரிய படத்தை இணைக்கலாம்.
7.தழுவல்,மொழிபெயர்ப்பு ஏற்கப்படா.
8.தேர்ந்தெடுக்கப்படும் பாடல்கள் வெல்லும் தூயதமிழ் மாதஇதழில் வெளிவரும்.
9.வெல்லும்தூயதமிழ் சிறுவர்பாடற்சிறப்பிதழ் விலை உருவா 20.00. விருப்பம் உள்ளவர்கள் தொகை அனுப்பலாம்.
போட்டிமுடிவுகள் பிப்பிரவரி 2014இல் வெளிவரும்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
முனைவர் க.தமிழமல்லன், தலைவர்,
தனித்தமிழ்இயக்கம்,
66,மாரியம்மன்கோவில்தெரு,
தட்டாஞ்சாவடி,
புதுச்சேரி-605009
தொலைபேசி 0413-2247072
மின்னஞ்சல் vtthamizh@gmail.com
அன்புடன்
க.தமிழமல்லன் 2044,சிலை.8 (23.12.2014)
Leave a Reply