‘வணக்கம் வட அமெரிக்கா’வின் எழுவகைப் போட்டிகள்
அமெரிக்கா கனடா வாழ் தமிழ் நெஞ்சங்களே!
பேரவை பெருமையுடன் வழங்கும்
‘வணக்கம் வட அமெரிக்கா’வின் எழுவகைப் போட்டிகள்
உங்களுக்காக!.
இந்தக் காணொளியை மறக்காமல் பாருங்கள்!
2021 ஆம் ஆண்டுக்கான போட்டிகளைப் பேரவையே முன்னெடுத்து ‘வணக்கம் வடஅமெரிக்கா’’ மூலம் நடத்த விருக்கிறது.
சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, பாடல் போட்டி, ஆடல் போட்டி, குறும்பட போட்டி ஆகியன!
போட்டிகள் அனைத்தும் குறிஞ்சி (5-8), முல்லை (9-12), மருதம் (13-17) மற்றும் நெய்தல் (18 க்கு மேல்) என நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட உள்ளன.
போட்டிகள் குறித்த விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் அறிந்து கொள்ள, போட்டிகளில் பதிவு செய்ய இந்த இணைப்பை பயன்படுத்துங்கள்.
மாசி 17, 2052 / மார்ச்சு 1, 2021 முதல் போட்டிகளுக்கான பதிவுகள் துவங்குகிறது.
பதிவு செய்வதற்கான இறுதி நாள் பங்குனி 18, 2052 /மார்ச்சு 31.
தத்தம் திறமைகளைத், தமிழ் மொழியால் வெளிப்படுத்தக் காத்திருக்கும் தீரர்களை வரவேற்கிறது
‘வணக்கம் வட அமெரிக்கா ‘
உங்கள் திறமை நம் மொழிக்குச் சேர்க்கட்டும் பெருமை!
உங்களின் வெற்றி நம் அனைவரின் நல் முயற்சியின் வெற்றி!.
இந்த நற்செய்தியைப் பகிர்ந்திடுங்கள், உங்கள் குமுக ஊடகங்களில் பதிவிடுங்கள், போட்டிகளில் பதிவுசெய்து பரிசுகளை வென்றிடுங்கள்!
Leave a Reply