கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழ்நலப்பணிகளைச் செயற்படுத்துக !

தனித்தமிழ்இயக்கம்,

புதுச்சேரிஅரசு கலை,பண்பாட்டுத்துறை அமைச்சர்க்கு

வேண்டுகோள்!   

 

   தமிழ்ப் பணி,கலை,இலக்கியப் பண்பாட்டுப் பணிகள் ஆகியவற்றைக் கடந்த பல்லாண்டுகளாகப் புதுச்சேரிஅரசு கலை,பண்பாட்டுத்துறை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டு விட்டது. அவை வருமாறு:

  1. தொல்காப்பியர்விருது10ஆண்டுகளுக்குமேல் வழங்கப்படவில்லை.

2. சிறந்த நுால்களுக்கான கம்பன் புகழ்ப்பரிசு, நேருகுழந்தைகள் விருது, போன்றவைபலஆண்டுகளாக வழங்கப்படவில்லை.

  1.  புதுச்சேரி எழுத்தாளரகளின் நுால்கள் நுாலகங்களுக்கு வாங்கப்படவில்லை.
  2.  கடந்த 25ஆண்டுகளாக ஒரு புதிய கிளைநுாலகம்கூடத் திறக்கப்பட வில்லை.

5. இருக்கும் நுாலகங்களுக்கு நுாலகர்கள் அமர்த்தப்படவில்லை.

  1. உரோமன் உரோலந்து பொதுநுாலகம் நீண்டகாலமாக மூடப்பட்டுக் கிடக்கிறது

7. ஆண்டுதோறும் புதுச்சேரி எழுத்தாளர்களுக்கு அவர்களின் கையெழுத்துப் படிகளை நுாலாக்குவதற்கு உதவித்தொகை வழங்கப்படுவதும் கடந்த எட்டு ஆண்டுகளாக நிறுத்தப் பட்டுள்ளது.  அதை  வழங்க வேண்டும்

  1. கடந்த பல ஆண்டுகளாக நுாலகக்கண்காட்சி நடத்தப்பட வில்லை.

9 .புதுச்சேரி அரசு வழங்கிவந்த கலைமாமணி விருதுகள் வழங்கப் படவில்லை.

  1. 21 அறிஞர்களுக்குத் தமிழ்மாமணி விருது அறிவிக்கப்பட்டு ஓராண்டைத் தாண்டிய பின்னரும் அவ்விருது வழங்கப்படவில்லை. அவ்வறிப்பால் எதிர்பார்ப்பில் இருந்த மிகவும் மூத்த அறிஞர்கள் ஏமாற்றமும் வருத்தமும் அடைந்துள்ளனர்.

இவற்றை வற்புறுத்திப் பலமுறை பல்லாண்டுகளாக அறிஞர்கள் பலவகையான வேண்டுகோள் கொடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் அறிக்கைகள் வெளியிட்டும் எந்தப் பயனும் இதுவரை விளையவில்லை.

செயல்முனைப்பும் ஆர்வமும் கொண்ட தாங்கள் இவற்றை நிறைவேற்றிப் புதுச்சேரிக்கு நேர்ந்துள்ள பழிகளைத் துடைப்பீர்கள் என்னும் நம்பிக்கையுடன் இந்த வேண்டுகோள்களைத் தங்களிடம் அளிக்கிறோம்.

இவண்

.தமிழமல்லன்

தலைவர், தனித்தமிழ்இயக்கம்

முகவரி-66 மா.கோ.தெரு தட்டாஞ்சாவடி புதுச்சேரி-605009

9791629979  vtthamizh@gmail.com