“கருமவீரர் காமராசர்” கட்டுரைப் போட்டி – வல்லமை
உலகெங்கும் வாழும் தமிழர்கள் பலரும் பங்கேற்க, “கருமவீரர் காமராசர்” என்னும் கட்டுரைப் போட்டியை அறிவிக்கிறோம். போட்டியில் பங்கேற்கும் கட்டுரைகள், வல்லமை மின்னிதழில் வெளியாகும். வெற்றி பெறும் சிறந்த படைப்புகளுக்குப் பரிசு உண்டு. தேர்வு பெறும் கட்டுரைகள், நூல் வடிவம் பெறும்.
இக்கட்டுரைப் போட்டியின் நடுவர் பொறுப்பினைத் தமிழறிஞரும் சிறந்த சொற்பொழிவாளரும் காமராசர் அவர்களைப் பற்றி நன்கு அறிந்தவரும் பண்பட்ட அரசியல்வாதியுமான தமிழருவி மணியன் ஏற்றுள்ளார். தமிழருவி மணியன் அவர்களுக்கும் இந்தக் கட்டுரைப் போட்டியை முன்மொழிந்த கவிஞர் காவிரிமைந்தன் அவர்களுக்கும் நமது நன்றிகள்.
15.07.2015, காமராசர் பிறந்த இந்த நன்னாளில் இந்தக் கட்டுரைப் போட்டியை அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம். படைப்பாளர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்று, பரிசுகளை வெல்ல அழைக்கிறோம்.
உங்கள் கட்டுரையைச்சீருருவில் / ஒருங்குகுறியில் 1000 சொற்களுக்கு மிகாமல் எழுதி, 15.08.2015க்குள் vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.
பரிசுத் தொகை – முதல் பரிசுகள் மூன்று …. உரூ.1000 வீதமும்
இரண்டாம் பரிசுகள் இரண்டு உரூ.750 வீதமும் மற்றும் மூன்றாம் பரிசுகளாய் மூன்று உரூ.500 வீதமும் வழங்கப்படும்! (மொத்தப் பரிசுகள் – ரூ.6 ஆயிரம்)
மேற்கண்ட பரிசுகளைத் தவிர, பங்கேற்கும் அனைத்துக் கட்டுரைகளும் பரிசீலித்து, தகுதியுள்ள படைப்புகள் நூல் வடிவம் பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்!
ஒருவரே ஒரு கட்டுரைக்கு மேல் அனுப்பலாம்; எந்தத் தடையும் இல்லை.
கட்டுரைப் போட்டி முடிவுகளைப் பொறுத்தவரை, நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
போட்டியில் அனைவரும் பங்கேற்று, பரிசுகளை வெல்லுமாறு அன்போடு அழைக்கிறோம். வாழ்த்துகள் நண்பர்களே.
நிருவாக ஆசிரியர், ‘வல்லமை’ மின்னிதழ்
Leave a Reply