azhai_panuval_poattikal

கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து நிகழ்ச்சிகளும்

மாலை 5: 30 மணிக்கு நடைபெறும்

இடம்: பனுவல் புத்தக விற்பனை நிலையம்

112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர்,

சென்னை 600 041.

தொடர்புக்கு : 89399 – 67179 / 044-4310-0442

பங்குனி 15 / மார்ச்சு 29        ஞாயிறு     : ‘தலித் முரசு’ இதழ்களின் கண்காட்சி

தோழர். நீலகண்டன் (கருப்புப் பிரதிகள்) தொடங்கிவைப்பு

பங்குனி 20 / ஏப்பிரல் 3 வெள்ளி:  அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகள் – வாசிப்பு

அருள்மொழி, பாத்திமா பர்ணாடு, வ. கீதா, பாமா, இரமணி, பிரேமா இரேவதி, அமுதா மற்றும் பலர்

பங்குனி 21 / ஏப்பிரல் 4 சனி: அம்பேத்கரின் பாதையில் நீதியைத் தேடி

தாம் மேற்கொண்டுள்ள சட்டத் தொழிலில் சட்டம், நீதி, நீதியான சமுதாயம் குறித்த அம்பேத்கரின் பார்வையால் வழிநடத்தப் பெற்ற பட்டறிவுகள், அவை சார்ந்த விளக்கங்கள், பகிர்வுகள் : வழக்கறிஞர் சத்தியசந்திரன்

அம்பேத்தரின் அரசியல் சட்டத் தொகுப்பாக்கம் : சரவணன்

பங்குனி 22 / ஏப்பிரல் 5 ஞாயிறு: அம்பேத்கரின் வாழ்வு தரும் பாடங்கள் – குறிப்பாக அவரது வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுதல், அதனை எழுதுதல், பகிர்ந்து கொள்ளுதல் என்பதன் பொருள், அவர் தழுவிய பௌத்தம் ஏற்படுத்திய மனமாற்றங்கள் ஆகியன குறித்த உரையாடல்

அம்பேத்கரின் வாழ்க்கையை எழுதுதல் என்பதன் பொருள் : அழகிய பெரியவன்

அம்பேத்கரின் பௌத்தம் தந்த உந்துதல் – தம்மபதத்தை முன்வைத்து : யாழன் ஆதி

பங்குனி 28 / ஏப்பிரல் 11      சனி   : அம்பேத்கர் கண்ட சனநாயகம்

அரசியல் தளத்தில் மட்டுமில்லாது சமுதாய, பண்பாட்டுத் தளங்களிலும் சமத்துவமும் உடன்பிறப்புநிலையும்(சகோதரத்துவமும்) நிறுவப்பட வேண்டும் என்பதை அம்பேத்கர் தன்வாழ்நாள் முழுவதும் முதன்மையான கோரிக்கையாக முன்வைத்து வந்தார். சாதி சமுதாயத்தில் கடைக்கோடி இடத்தில் நிற்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமில்லாது சூத்திரர்கள், இசுலாமியர்கள் முதலான சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றியும் விவாதித்தார். இவற்றை விளக்கும், அலசும் அமர்வு

அம்பேத்கரின் பார்வையில் சூத்திரர்கள் : தோழர் செல்வா

சிறுபான்மையினர் குறித்த அம்பேத்கரின் பார்வை : எச். முசிபுர் இரகுமான்

பங்குனி 29 / ஏப்பிரல் 12      ஞாயிறு :     அம்பேத்கரின் அரசியல் சுவடுகளில் நின்று தமிழகத்தில் செயல்பட்ட பட்டியலின மக்களின் கூட்டமைப்பு, குடியரசுக் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், அம்பேத்கரை முன்வைத்து இன்று மக்களை திரட்ட வேண்டிய தேவை குறித்தும் விவாதம். ஒடுக்கப்பட்டோர் இதழ்களின் வரலாறு, அவை முன்வைத்த விவாதங்கள், கைக்கொண்ட விவாதக் களங்கள், இவற்றுடன் அம்பேத்கரின் இதழியல் பணியைப் பேசும் அமர்வாகவும் இது இருக்கும்.

பட்டியலின மக்களின் கூட்டமைப்பு, குடியரசுக் கட்சியின் செயல்பாடுகள் : தாலின் இராசாங்கம்

ஒடுக்கப்பட்டோர்(தலித்) இதழியல் – அம்பேத்கரும் பிறரும் : பாலசுப்பிரமணியம்

சித்திரை 1 /ஏப்பிரல் 14   செவ்வாய்:   சாதியை ஒழிப்பது எப்படி? என்பது தொடர்பான கட்டுரை, ஆவணப்படம்/குறும்படம் மற்றும் ஒளிப்படப் போட்டிகளுக்காண பரிசளிப்பு நிகழ்ச்சி

சித்திரை 6 / ஏப்பிரல் 19 ஞாயிறு : சாதி ஒழிப்பு என்பதன் முதன்மையைக் கலை, இலக்கிய, நாடக வெளிகளில் நிறுவுவதிலுள்ள அறைகூவல்கள் : சுகிர்தராணி, அ. மங்கை, ஓவியர். க. நடராசு

சித்திரை 12 / ஏப்பிரல் 25 சனி : அம்பேத்கரின் சமஉடைமையம்(சோசலிசம்) : மார்ச்சியத்தைத் தொடர்ந்து விவாதத்துக்கு உட்படுத்திய அம்பேத்கரின் சமஉடைமையம்(சோசலிசம்), இன்றைய சூழலில் இடதுசாரிகள் அம்பேத்கரின் அரசியல் சிந்தனையை உள்வாங்கி விவாதப்படுத்த வேண்டியதன் தேவை – இவற்றை விளக்கும், அலசும் அமர்வு

பா. சம்பத் (தீண்டாமை ஒழிப்பு முண்ணனி)

செந்தில் (இளந்தமிழகம்)

எனது படைப்புகளில் பெண் கதாபாத்திரங்களின் இடதுசாரித் தன்மை : சிரீதர கணேசன்

சித்திரை 13 / ஏப்பிரல் 26  ஞாயிறு  :   சாதி ஒழிப்பு என்பதன் முதன்மையைக் கலை, இலக்கிய, நாடக வெளிகளில் நிறுவுவதிலுள்ள அறைகூவல்கள் :

சு. தமிழ்ச்செல்வி

மதிவண்ணன்

முகில்

ஒருங்கிணைப்பாளர் :   

வ. கீதா

ஏற்பாட்டுக் குழு:

அமுதரசன் | செந்தில்நாதன் | ஆர். பி. அமுதன் | ஆர். ஆர். சீனிவாசன்|     கருணா பிரசாத் | தயாளன் | இனியன் | ராம்

மற்றும் பனுவல் – முகுந்தன், சரவணன், அர்சுணன், வெங்கடேசுவரன், உமா, நந்தினி, பாசுகர்

ஏற்பாடு:

பனுவல் புத்தக விற்பனை நிலையம்
அருந்தினை – இயற்கை விளை பொருள் அங்காடி
மூன்றாம் அரங்கு – நாடக்குழு, சென்னை
தடாகம் பதிப்பகம்
காடு :  காட்டுயிர் – சூழலியல் இருமாத இதழ்

சமூக நீதி நிகழ்வுகளுக்கு உதவ விரும்புவோர் பனுவல் புத்தக நிலையத்துடன் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட நிகழ்வுக்கு தங்களாலான பண உதவியை செய்யலாம்.

தொடர்புக்கு :

பனுவல் புத்தக விற்பனை நிலையம்
112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர்,
சென்னை 600 041.

தொடர்புக்கு : 89399 – 67179 / 044-4310-0442