சட்டச் சொற்கள் விளக்கம் 631-640 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 621-630 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 631-640
631. Acting incumbent | மாற்றுப் பணிப் பொறுப்பாளர் மாற்றுப் பொறுப்பாளர் பொறுப்பு நடப்புப் பதவியாளர் நடப்புப் பதவியாளர் நடைமுறைப்பதவியில் மாற்றாள் முறையில் பணியிடத்தை வகிப்பவர். பதவியில் உரியவர் இருக்கும் பொழுதே பயிற்சிக்குச் செல்லல் போன்ற காரணங்களால் பணியைத்தொடர்ந்தாலும் பதவியிடப்பணி தொய்வின்றித் தொடர்வதற்காகப் பொறுப்பு வழங்கப்படுபவர். |
632. Acting Judge | பொறுப்பு நீதிபதி நீதிபதி விடுப்பில்/மாறுதலில்/ஓய்வில் சென்றிருந்தால் அல்லது இதுபோன்ற சூழலில் நீதிபதிப் பதவியில் இடைக்காலமாக அமர்த்தப்படுபவர் பொறுப்பு நீதிபதியாவார். இப்பணியமர்த்தம் குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்படும். இந்திய அரசியல் யாப்பு கூறு 224 காண்க: Acting chief justice |
633. Acting Judicially | நீதித்துறை வழிச் செயற்படல் எந்த ஒருவரும் சட்டத்தின்படியும் தரப்பாரின் இசைவுடனும் கேட்டல், சான்றுகளை ஆராய்தல் போன்ற பணிகளை ஆற்றல். |
634. Acting on behalf of | சார்பாகச் செயற்படல் ஒருவரின் சார்பாக அவர் ஆற்ற வேண்டிய பணியை ஆற்றுதல். |
635. Acting within the scope of the authority | அதிகார வரம்பிற்குள் செயற்படல் ஒரு பொது அதிகாரி அல்லது பொது ஊழியர் தன் அதிகாரத்திற்கு உட்பட்ட தனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை ஆற்றுதல். |
636. Acting judge | பொறுப்பு நீதிபதி நீதிபதி பணியிடத்தில் உரிய நீதிபதி விடுப்பில் இருந்தாலோ மாறிச்சென்றிருந்தாலோ முழு நேர நீதிபதி நியமிக்கப்படும் வரை அல்லது மாற்று ஏற்பாடு செய்யும் வரை அப்பதவிப்பொறுப்பில் உள்ள நீதிபதி, பொறுப்பு நீதிபதியாவார். காண்க: Acting chief justice |
637. Acting Service | மாற்றாள் பணி காண்க: Acting incumbent |
638. Acting upon the licence | உரிமத்தின் மீது செயற்படுதல் ஒருவர் மற்றொருவருக்கு அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிறருக்கு, வழங்குநரின் அசையாச் சொத்து தொடர்பில் செயலாற்ற உரிமை வழங்கல் அல்லது தொ டர்ந்து செய்யும் உரிமையை வழங்கல். [இந்தியத் துய்ப்புரிமைச் சட்டம் (Indian Easement Act) 1982, பிரிவு 52] |
639. Actio | செயல் அல்லது செயற் பொருத்தம் இலத்தீன் சொல். |
640. Actio Personalis Moritur Cum Persona | ஆளர் வழக்கு ஆளுடன் முடியும் ஒருவரின் வழக்கு அவர் முடிவுடன் முடியும்/ செயலுக்கான தனிப்பட்ட உரிமை அதற்குரியவருடன் இறந்துவிடுகிறது. இறத்தல் என்பதற்குச் சாவு என்பதுடன் காலாவதி(expire) என்னும் பொருளும் உண்டு. இறந்து விடுகிறது என்னும் நேர் பொருளை உரியவர் இறந்ததும் முடிந்து விடுகிறது என்ற பொருளில் பயன்படுத்த வேண்டும். எனவே, ஆள்நிலை வழக்கு, ஆளுடன் முடியும். இது வரையறுக்கப்பட்ட பயன்பாடு உள்ளது என உச்சநீதிமன்றம் கூறுகிறது. அவதூறுக்கான சேதங்களுக்கான நடவடிக்கைகள், தாக்குதலுக்கான நடவடிக்கைகள் அல்லது மறு தரப்பாருக்கு மரணத்தை ஏற்படுத்தாத பிற தனிப்பட்ட காயங்களுக்கான நடவடிக்கைகள், தரப்பாரின் மரணத்திற்குப் பிறகு வழங்கப்பட்ட தணிப்புதவியைத் துய்க்க முடியாத அல்லது வழங்குவது அற்பமாக இருக்கும் மற்ற செயல்கள் – கிரிசா நந்தினி தேவி & பிறர் எதிர் பிசேந்திர நரேன் சௌத்திரி (MANU/SC/0287/1966: AIR 1967 SC 1124: 1967 (1) SCR 93.) – இந்திரராசா & பிறர் எதிர் சான் ஏசுரத்தினம் வழக்கு சொத்தினங்களுக்குக் கணக்கு காட்டவேண்டியவர் மரணம், அச்சொத்தினங்களுக்கான பொறுப்பைப் பாதிக்காது. – கிரிசா நந்தினி தேவி & பிறர் எதிர் பிசேந்திர நரேன் சௌத்திரி, MANU/SC/0287/1966: AIR 1967 SC 1124: 1967 (1) SCR 93. “நடவடிக்கை தனிப்பட்டவரின் தனிப்பட்ட செயலாகும்” என்ற கொள்கையின் அடிப்படையில் இறந்தவருடன் இறந்தவரின் தனிப்பட்ட செயலுக்கான காரணத்தைத் தவிர்த்து, தனி உரிமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்ற அனைத்து நடவடிக்கைக் காரணங்களையும் அத்தகையவருடன் தரப்பாரின் குமுக(சமூக) சட்ட நிலைப்பாடு முடிந்ததாகக் கூற முடியாது – யல்லவா எதிர் சாந்தவ்வா, (MANU/SC/0016/1997: AIR 1997 SC 25: 1997 (11) SCC 159.) இறுதிமுறியை(உயிலை) நிறைவேற்றுபவரின் மரணம் ஏற்பட்டால், அவரது இறப்பிற்கு முன் அவரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்குச் “செயலுக்கான தனிப்பட்ட உரிமை அதற்குரியவருடன் இறந்துவிடுகிறது” என்பது பொருந்தாது. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply