வெருளி நோய்கள் 1391 -1395: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1386 -1390: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1391 -1395
- தொடைக்கறி வெருளி – Choiromeriphobia
தொடைக்கறி குறித்த வரம்பற்ற பேரச்சம் தொடைக்கறி வெருளி.
Choiromeri என்னும் கிரேக்கச் சொல்லிற்குப் பன்றியின் தொடைப்பகுதி எனப் பொருள்.
பொதுவாக இறைச்சி வெருளி(Carnophobia) உள்ளவர்களுக்குத் தொடைக்கறி வரும் வாய்ப்பு உள்ளது.
00 - தோப்பி வெருளி – Zephophobia / Zythophobia
தோப்பி (Beer) அல்லது வாற்கோதுமைக் கள் தொடர்பான அளவில்லாப் பேரச்சம் தோப்பி வெருளி.
தோப்பியில் மதுசாரம்(ஆல்கஃகால்) கலந்திருப்பதால் உடலுக்குப் பெருங்கேடு விளையும் எனப் பேரச்சம் கொள்வர்.
zythos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தோப்பி(beer).
பழந்தமிழகத்தில் நெல்லால் சமைத்த கள்ளைத் தோப்பி(beer) என்றனர். இப்பொழுது வாற்கோதுமைக் கள்ளையும் தோப்பி(பீர்) என்கின்றனர்.
00 - தோணி வெருளி – Porthmeiophobia
தோணி (ferry) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தோணி வெருளி.
தோணி திசைமாறிப் போகும், கவிழ்ந்து விடும், உயிருக்குக் கண்டம்(ஆபத்து) இருக்கு்ம் என்பனபோன்ற கவலைகளை உருவாக்கிக் கொண்டு பேரச்சம் கொள்வர்.
Porthmeio என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் தோணி எனப் பொருள்.
00 - தோரத்தி வெருளி – Dorothyphobia
புனைவுரு தோரத்தி ஆன்(Dorothy Ann) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தோரத்தி வெருளி.
வித்தைப் பள்ளிப் பெருந்து(The Magic School Bus) புத்தகத் தொடரில் வரும் பாத்திரம்.
தோரத்தி ஒரு புத்தகப் புழு. இதுவே தோரத்தி மீது பேரச்சம் வரக் காரணமாய் அமைந்து விட்டது.
00 - தோரா பாட்டி வெருளி – Grandmathoraphobia
புனைவுரு தோரா பாட்டி(Grandmathora) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தோரா பாட்டி வெருளி. பாட்டி வெருளி (giagiaphobia)உள்ளவர்களுக்குத் தோரா பாட்டி வெருளி(Grandmathoraphobia) வரும் வாய்ப்பு உள்ளது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5







Leave a Reply