(தமிழ்ச்சொல்லாக்கம் 671-676  தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 677- 682

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

677. Food Machine – உணவுப் பொறி

உற்று நோக்கினால் மக்கட்கும் ஏனைச் சிற்றுயிர்கட்கும் அவ்வப் போதும் உணவுப் பொருள்கள் உண்டாக்கிக் கொடுத்தலில் மரஞ் செடி கொடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் உணவுப் பொறியாகவோ (Food Machine) விளங்கா நிற்கும்.

நூல்        :               ஏன் புலால் மறுத்தல் வேண்டும்? (1930) பக்கம் – 55

நூலாசிரியர்         :               பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை

678. தயிலசத்து – பசையுடைப் பொருள்கள்

அழலுண் பொருள்கள் தயில சத்து (பசையு)டைப் பொருள்கள். உண்பவை – எண்ணெய், நெய் முதலியவை.

நூல்        :               சசிவன்ன போத மூலம் (1930) பக்கம் 88

நூலாசிரியர்         :               காஞ்சிநகர் ஆ. செங்கல்வராய முதலியார் (தருக்க வேதாந்த பேராசிரியர்)

679. பிராணாயாமம்          –              வளிநிலை

680. பிரத்யாகாரம்              –              தொகை நிலை

681. தாரணை      –              பொறை நிலை

682. தியானம்      –              நினைதல்

இங்கு புலன்வினை மாறி என்றமையான், இயமம், நியமம், ஆசனம் (இருப்பு), பிராணாயாமம் (வனிநிலை), பிரத்யாகாரம் (தொகை நிலை) தாரணை (பொறை நிலை), தியானம் (நினைதல்), சமாதியென்னும் எண்வகை யோகவுறுப்புக்களுள் பிரத்யாகாரம், தாரணை என்ற இரண்டையுமே யுணர்த்தினார்; இவை நனவிற் சுமுத்திக்கு முக்கிய சாதனமாதலின்.

நூல்        :               சசிவன்ன போதம் (1930) பக்கம் – 141

உரையாசிரியர்   :               காஞ்சி நகர் ஆ. செங்கல்வராய முதலியார் (தருக்க வேதாந்த போதகாசிரியர்)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்