(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 911-915-தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 916- 930

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார்.238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

916. Assignment Card – குறிப்புத்தாள் அட்டை

917. Assignment Chart – குறிப்பு விளக்க அட்டை

பாடசாலை வேலை யாவற்றையும் தனிப்பயிற்சி மூலம் நடத்த முடியாது. போனாலும், வேலையின் பெரும் பாகத்தை இம்முறையின் மூலம் நடத்தலாம். தனிப்பயிற்சி வேலையின் திறமையான பகுதி குறிப்புத் தாள்களை உபயோகிப்பதேயாகும். ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு குறிப்புத்தாள் அட்டையும் (Assignment card) ஆசிரியரிடம் ஒரு குறிப்பு விளக்க அட்டையும் (Assignment Chart) இருக்க வேண்டும்.

நூல்        :               தாய்மொழி போதிக்கும் முறை (1942), பக்கம் – 23

நூலாசிரியர்         :               வி. கே. சேசாத்திரி, பி.ஏ., எல்.டி.,

                                ⁠(சென்னை கல்வி இலாகா)

918. Individual Method – தனிப்பயிற்சி முறை

919. Assignment        – குறிப்புத்தாள்

920. Oral       –    வாய்மொழி

921. List of words     –     சொற்பட்டியல்

922. Vocabulary      –    சொல்லகராதி

923. Flash – Card       –  மின்னட்டை

924. Punctuation Marks –  மாத்திரைப் புள்ளிகள்

925. Creative Expression     –   ஆக்கச் சொல்வன்மை

நூல்        :               தாய்மொழி போதிக்கும் முறை (1942)

                                ⁠அரும்பத அகராதி, பக்கங்கள் – 2, 3

நூலாசிரியர்         :               வி. கே. சேசாத்திரி, பி.ஏ., எல்.டி.,

                                ⁠(சென்னை கல்வி இலாகா)

926. Circus – அலைக்களம்

வியாசம் – வாய்மொழி வியாசத்துக்கும் பிறகு எழுதும் வியாசம் சுயமான சொல் வன்மையின் அவசியம் – சம்பாசணை, சம்வாதம், மாணவர்களால் பொறுக்கி எடுக்கப்பட்ட பழக்கமான விசயங்களில் பிரசங்கங்கள் – (2-ம்) ஒரு மழை நாள் அனுபவம், பொருட் காட்சிச் சாலையைப் பார்வையிடுதல், அலைக்களம்.

நூல்        :               தாய்மொழி போதிக்கும் முறை (1942), பக்கங்கள் – 7, 8

நூலாசிரியர்         :               வி. கே. சேசாத்திரி, பி.ஏ., எல்.டி.,

                                ⁠(சென்னை கல்வி இலாகா)

927. Degree – மாத்திரை

வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் இந்தச் சில்லாவிலுள்ள மற்ற பாகங்கள் காற்றும் மழையுமின்றி வருந்தும் போது இங்கே இந்த நல்ல காற்றும் இளமழையுங் கிடைக்கின்றன. மழை பெய்தாலும் பெய்யாவிடினும் இக்காலக் கருமேகங்களினூடே பச்சை மரங்கள் கொடிகள் முகந்து வீசுகினற காற்றானது சூரிய வெப்பத்தை 15 மாத்திரை (Degree) வரை குறைத்து மனதுக்கு இரம்மியமானதும் உடலுக்கு உகந்ததாகவுமுள்ள ஒரு அரிய சீதோசுண நிலையைக் கொடுக்கின்றது.

நூல்        :               திருக்குற்றாலத் தல வரலாறு (1943), பக்கங்கள் : 9, 10

நூலாசிரியர்  :    ஏ. சி. சண்முக நயினார் பிள்ளை, பி.ஏ., பி.எல்.

                                ⁠(திருக்குற்றால நாதசுவாமி கோயில் தருமகர்த்தர்)

928. Beauty Spot – அழகின் உறைவிடம்

ஐரோப்பியர்களே முதன் முதல் உடல்நலங் காரணமாக இங்கு வந்ததால் தங்கள் பெல்சிய நாட்டிலுள்ள ஃச்பா என்னும் ஆரோக்யத் தலம் போன்று நீர்வளம் நிரம்பி உடல் நலம் கொடுக்கும் தலமென்று இவ்வூரை வியந்து தென்னாட்டு ஃச்பா என்ற புனை பெயரிட்டனர்.

(Famous Spa of the South) இயற்கை அழகைக் கண்டு மகிழ்ந்து அழகின் உறைவிடம் (Beauty Spot) என்றும் புகழ்ந்தனர்.

மேற்படி நூல் : திருக்குற்றாலத் தலவரலாறு (1943), பக்கம் – 13

929. Radio – ஒலிபரப்பி

சில வருடங்களுக்கு முன் இவ்வூரில் நகர பரிபாலன சபை (பஞ்சாயத்து) நிறுவப்பட்டு இப்போது திருவாளர் இலஞ்சி மிட்டாதார் ஐ.கே.சுப்பிரமணிய பிள்ளையவர்கள் பி.ஏ., தலைமையில் பொதுமக்களின் சுகாதார நன்மைகளைப் பற்பல விதங்களில் கவனித்து வருகின்றது. பொதுமக்கள் நன்மைக்காக ஒரு ஒலிபரப்பி (Radio)யும், நல்ல புத்தகங்களடங்கிய வாசக சாலையும் வைத்திருக்கிறார்கள்.

மேற்படி நூல் : திருக்குற்றாலத் தலவரலாறு (1943), பக்கம் – 17

930. Department of Epigraphy – கல்வெட்டுப் பதிவு நிலையத்தினர்

இத்தலத்தைப் பற்றிய கல்வெட்டுகள் ஏராளமாக உள்ளன. இவற்றைத் தென்னிந்தியக் கல்வெட்டுப் பதிவு நிலையத்தினர் (Department of Epigraphy) எடுத்து எழுதியிருக்கின்றனர். அவை 1895ஆம் வருடத்து 203, 204 எண்களுள்ள கல்வெட்டுகளாக எழுதப்பட்டு தென்னிந்திய சிலா சாசனங்கள் பகுதி 5இல் 767, 768ஆம் எண்களாக வெளிவந்துள்ளன.

மேற்படி நூல்       :               திருக்குற்றாலத் தலவரலாறு (1943), பக்கங்கள் : 42, 43,

                                ⁠(திருக்குற்றால நாதசுவாமி கோயில் தருமகருத்தா)

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்