திருமலை மன்னரின் அரிய சிற்பங்கள் கண்டுபிடிப்பு

  மதுரை உசிலம்பட்டி அருகே மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னன் வேட்டைக்குச் செல்லும் அரிய சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ம.திருமலை தெரிவித்துள்ளார். “தமிழக அரசு நல்கைத் திட்டமான “தென்கல்லக நாட்டின் தொன்மையும் சிறப்பும்” என்ற ஆய்வுத்திட்டக் களப் பணிக்காக, தமிழ்ப் பல்கலைக் கழகக் கல்வெட்டியல்-தொல்லியல்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பா.செயக்குமார்  கள ஆய்வுமேற்கொண்டார். அப்பொழுது மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கொடிக்குளத்தில், திருமலை(நாயக்க) மன்னரின் (கி.பி.1623- 1659) அரிய சிற்பங்கள் கண்டறியப்பட்டன எனத் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் திருமலை…

சிங்கப்பூரில் முத்தமிழ் விழா

   தமிழ் மொழித் திங்கள் விழாவின் அங்கமாக சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏப்பிரல் 5, 2014 அன்று உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் முத்தமிழ் விழாவினை மிகச் சிறப்பாக நடத்தியது.   தமிழ் வாழ்த்துடன்  விழா தொடங்கியது. சிங்கப்பூர் சுற்றுப்புற நீர் வளத்துறை அமைச்சர் விவியன் பாலகிருட்டிணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அடுத்த அங்கமாகக் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் உரை நிகழ்த்தினார். பின்னர் மாணவமணிகள் கலந்து கொண்ட மாறு வேடப்…

வளைகுடா வானம்பாடிகளின் ஏப்பிரல் கூட்டம்

      குவைத் வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா 11-04-2014 வெள்ளி அன்று மாலை 5.00 மணி முதல் மங்கப் விழா அரங்கில் மிகச்சிறப்பாக நடந்தது. விழாவிற்குப் பெருமை சேர்க்கும் விதமாக  திரு.நீலமணி, திரு.பால் மனுவேல் திரு. அரவணைப்பு இளங்கோவன் ஆகிய மூன்று முனைவர்கள் கலந்துக்கொண்டு பெருமை சேர்த்தனர். வழக்கம் போல் மண்ணிசைப்பாடல்கள், மெல்லிசைப்பாடல்கள், தனிக்கவிதை வாசித்தல், சிறப்புச் சொற்பொழிவுகள் எனப் பல நிகழ்வுகளை ஆண்களும், பெண்களும் சேர்ந்து மிகச் சிறப்பாகச் செய்தனர். நிகழ்ச்சிக்குப் பல அமைப்பின் நண்பர்களும், குவைத்…

இணைவதை யாராலும் தடுக்க முடியாது – கலாநிதி இராம் சிவலிங்கம்

புலத்தில் வாழும் இலட்சியவாதிகளும், தன்மானத் தமிழர்களும் இணைவதை யாராலும் தடுக்க முடியாது — கலாநிதி இராம் சிவலிங்கம்     விலங்குகள் அகற்றப்பட்டு விடுதலையான எம் ஈழத் தாயின் மடியிலே; உங்களோடு சேர்ந்து நானும் அயர்ந்து உறங்க வேண்டும் என்ற ஆவலில்தானே எமது அரசியல் போரை முன்னெடுத்துச் செல்லவல்ல தகைமையும், தகுதியும் கொண்ட தன்மானத் தமிழரை இணைந்து  செயற்பட வருமாறு பல முறை அறைகூவினேன். நீதி வேண்டும் உலகம் எமக்காகப் போராடும்போது,  எமது பங்கை நாம் செய்யத் தவறினால், எமது குடிவழி எம்மை மதிக்குமா…

மாமூலனார் பாடல்கள் – 14 : சி.இலக்குவனார்

 (பங்குனி 23, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி) கச. மொழிபெயர் தேயத்தராயினும்  நல்குவர் – தோழி – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  ( பிரிவின்கண் வேறுபட்டுள்ள தலைவியும் தோழியும்)  தோழி: ஏடி! இவ்விதம் வாட்டமுற்று வருந்துகின்றாய். மேனி பொலிவு அழிந்துவிட்டதே.  தலைவி: நீகூட இதன் காரணத்தைக் கேட்டுத்தான் அறிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளாயோ?  தோழி: இல்லையம்மா! சென்றவர் திரும்பும் வரையில் ஆற்றியிருத்தல்தானே நமக்கு அழகு.  தலைவி: ஆமாம். அவர் எந்த நாட்டுக்குச் செல்வதாகக் கூறினார்….

தமிழ்ப் பெருங்காவலர் வள்ளல் கா.நமச்சிவாயர் – சிறுவை நச்சினியார்க்கினியன்

  வள்ளல் கா.நமச்சிவாயர் என்று விளித்தால்தான் தமிழ் உள்ளங்கள் குளிரும் ஏன்?  வள்ளல் என்று சொன்னால் மட்டும் சில உள்ளங்களுக்கு முழு நிறைவு அளிக்காது. அவரைத் தாயினும் சாலப் பரிந்தூட்டும் தயாளனுக்கே அறிந்தோர் ஒப்பிடுவர். பௌராணிகக் காலத்தில் தோன்றி இருந்தால் தமிழ் அன்னையே இம்மண்ணுலகில் சில நாள் தங்க எண்ணி வந்தனள் எனக் கூறி இருப்பர். இக் கூற்றுகள் அனைத்தும் உயர்வு நவிற்சியின் பாற்பட்டன அல்லவே அல்ல; முற்றிலும் உண்மை. காரணங்கள் ஆயிரம் ஆயிரம்; உவமைகளோ நூற்றுக் கணக்கின. ஆனால் அந்த வள்ளல் இப்புவியில்…

தமிழி – உரோமன் எழுத்துப்பெயர்ப்பு – 2 : முனைவர் இராம.கி

  இக்கருத்தரங்கில் தமிழ்ப்பின்னங்கள், குறியீடுகளை ஒருங்குறியிற் சேர்ப்பது கருதி, தமிழ்ப்பெயர்களை ஒரேவகை உரோமன் எழுத்தில் [அதாவது உயர் கட்டெழுத்தையும் (upper case letters), தாழ் கட்டெழுத்தையும் (lower case letters) கலக்காது அந்தந்த தனிக்கட்டெழுத்தில்] எப்படிக் குறிப்பதென்ற கேள்வியெழுந்திருக்கிறது. அதை முடிவு செய்வதற்காக பேராசிரியர் மு.பொன்னவைக்கோ, துணைவேந்தர், தி.இரா.நி.பல்கலைக்கழகம் பேரா.வி.செயதேவன், முதன்மைப் பதிப்பாசிரியர், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி சீராய்வுத் திட்டம் பேரா.முருகையன், பேராசிரியர்(ஓய்வு), அண்ணாமலைப்பல்கலைக்கழகம் முனைவர் மா.பூங்குன்றன்,  பதிப்பாசிரியர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் முனைவர் மு.கண்ணன், பதிப்பாசிரியர்,செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்…

தொல்காப்பிய விளக்கம் – 11: முனைவர் சி.இலக்குவனார்

தொல்காப்பிய விளக்கம் – 11 (எழுத்ததிகாரம்)   தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (பங்குனி 23, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி)  ‘வல்லின மெல்லினமாறுகை’ (Convertablilty of surds and sounds) பழந்தமிழில் இல்லையென்பார் இந்நூற்பாவின் பொருளை நோக்குதல் வேண்டும். ஒலிப்பு வகையான் எழுத்தொலி சிறிதளவு மாறுபடுவதைக் கண்ட ஆசிரியர் தொல்காப்பியர், ஐயம் அறுத்தற்காகவே இந்நூற்பாவை இயற்றியுள்ளார்.   ஒலிப்பு வகையான் எழுத்தொலி சிறிது மாறுபடினும் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று கூறப்பட்ட தம் இயல்புகளில் மாறுபடா…

திருக்குறளில் உருவகம் – 5: பேராசிரியர் வீ. ஒப்பிலி

   (பங்குனி 23, தி.பி.2045 / 06 ஏப்பிரல் 2014   இதழின்  தொடர்ச்சி)    இனி நீர் உருவகமாகப் பயன்படும் மற்ற குறட்பாக்களை எடுத்துக் கொள்வோம். நீர் தூய்மையை உண்டாக்கும் தன்மையுடையது. புறத்தே தோன்றும் அழுக்கை நீக்கும் நீர் அகத்தே தோன்றும் வாய்மையின் உருவகமாகிறது. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் (298)   வாய்மையின்மையால் நேரும் கேட்டினையும், அப்போது நீர் பயன்படாது போவதையும் ‘மாக்பெத்து’ என்ற நாடகத்தில் சேக்சுபியர் எடுத்துக் காட்டுகிறார். அகத் தூய்மையைக் குறிக்கும் போதெல்லாம் அக்கவிஞரும் நீரை…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ படித்தேன்! இன்புற்றுக் களித்தேன்! – முனைவர் குமரிச் செழியன்

  இலக்கியத்திலிருந்து பெறப்படுவதுதான் இலக்கணம் என்றாலும் இலக்கியத்தின் அழகுக்கும் இளமைக்கும் கட்டுக்கோப்பு குலையாமல் காப்பதற்கும் இலக்கணம் முக்கியமானது. எனவே, இலக்கியத்திலிருந்து இலக்கணமும், இலக்கணத்தின் வழியே இலக்கியமும் வளம் பெற்று வளர்ந்த சிறப்பு தமிழ் மொழிக்கே உரியது. எனவே, இலக்கியம், இலக்கணம் என்பவை தூய தமிழ்ச் சொற்களே. எழுத்துக்களே இல்லாத மொழியில் சொல்கள் எப்படி இருந்திருக்க முடியும். எனவே, இலட்சியமே இலக்கியமாயிற்று என்பாரின் கூற்று வெறும் பேத்தலே. அது போல்தான் இலக்கணமும் என்க. இலக்கணம் என்றும் தமிழ்ச்சொல்தான் இலட்சணமாயிற்று என்க.  தொல்காப்பியத்தின் சொல்கள் பல வடமொழி…

தமிழி – உரோமன் எழுத்துப்பெயர்ப்பு – 1 : முனைவர் இராம.கி

  ஒருங்குறியிற் தமிழ் – தேவைகளும், தீர்வுகளும் (Tamil in Unicode – requirements and solutions) என்ற கருத்தரங்கு மார்ச்சு 5 இல் தமிழிணையக் கல்விக்கழகத்தில் நடந்தது. அப்போது சென்னையில் நான் இல்லாததால் என்னாற் கலந்து கொள்ள இயலவில்லை. அதுபற்றித் தமிழிணையக் கல்விக்கழக நெறியாளரிடம் முன்னரே தெரிவித்திருந்தேன். அந்தக் கருத்தரங்கில் தமிழ்ப் பின்னங்கள், குறியீடுகள் – பெயரிடலும் கீற்றுகளும் [Tamil Fractions and Symbols – Naming and Glyphs] தமிழ் அனைத்தெழுத்துக் குறியேற்றம் [Tamil All Character Encoding (TACE-16)] ஓரிந்தியா…

‘‘தாய்மொழி விழிப்புணர்வு’’ – கவிஞர் சொ.நா.எழிலரசு

தமிழே குறி குறளே நெறி தமிழா! அறி தமிழுக்கு முதல் அகரம் தனிச்சிறப்பு ழகரம் ழகரம் பேசு சிகரந் தொடும் பேச்சு பிழையாகப் பேசாதே களையெனத் தழைக்காதே தமிழுடன் ஆங்கிலம் சோற்றுடன் கல் நீக்கிடு தனித்தமிழ் பேசு தமிழே நம் மூச்சு தமிழ்ப் பேசா வாய் தாங்கிடும் மெய் பொய் தமிழ் வாழ வாழ் தவறினால் தமிழ் பாழ்   ‘‘ழகரமாமணி’’ கவிஞர் சொ.நா.எழிலரசு செயலர், பொதுச்செயலர், தனித்தமிழ்ப் பயிற்றகம், தமிழ் ழகரப்பணி மன்றம், துரைப்பாக்கம், சென்னை.