ஈரோடு தமிழன்பன் 80ஆவது பிறந்த நாள் விழா – ஒளிப்படங்கள்

சென்னையில் புரட்டாசி 11, 2045 / 27.09.2014  அன்று நடந்த   ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் 80ஆவது பிறந்த நாள் விழா, கவிஞர் கவிமுகில் நூல்கள் வெளியீட்டு விழா, கவியரங்கம் பல்வகை விருதுகள் வழங்கிய விழா  ஒளிப்படங்கள்   படங்களைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்.    

தகர்க்கப்படும் வரலாற்றுப் பாறைகள் – அழிக்கப்படும் வரலாறு – நடவடிக்கை எடுக்காத தொல்லியல்துறை

இந்திய வரலாற்றை அறிவியல் முறையில் ஆய்வு செய்வதற்கும் உண்மையான வரலாற்றைக் காலவாரியாக எடுத்துக்கூறுவதற்கும் தொல்லியல் சான்றுகளே மிகுந்த துணைபுரிகின்றன. மக்களின வரலாற்றில் எளிய மக்களின் வாழ்வையும், நடுத்தர, உயர்குடி மக்களின் வாழ்வையும் தொல்லியல் சான்றுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், அகழாய்வுகள் முதலியன ஒவ்வொரு காலக் கட்டத்திலும் வாழ்ந்த மக்களின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. நானும் எனது நண்பர்களும் விடுமுறைக்காக மேற்குமலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள சுருளி அருவிக்குச் சென்று திரும்பும்போது எங்களைப் பதறவைத்தவை வெடிவைத்துத் தகர்க்கப்பட்ட பாறைகள். ஆம்!…

நான் சாகலாம்; நாங்கள் சாகக்கூடாது – நூல் வெளியீடு

தமிழ் மகள் பவித்திராவின் “நான் சாகலாம்.. நாங்கள் சாகக் கூடாது” நூல் எதிர் வரும்  புரட்டாசி 19, 2045  / அக்டோபர் 5 அன்று வெளிவர இருக்கின்றது

வன்கொடுமைத்தடுப்பு மாநாடு, திருச்சிராப்பள்ளி

புரட்டாசி 19, 2045 / 5.10.2014   பேரன்புடையீா், வணக்கம்! சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கம், அக்டோபா் 5 ஞாயிற்றுக் கிழமை திருச்சி மையப் பேருந்து நிலையம் அருகிலுள்ள ரோசன் மகாலில் ஏற்பாடு செய்துள்ள சாதி மறுப்புத் திருமணத்தில் பெண்கள் மீதான வன்கொடுமைத் தடுப்பு மாநாடு குறித்த அழைப்பிதழ் இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளோம்.அம்மாநாட்டில் தாங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கனிவுடன் வேண்டுகிறோம். நன்றி. கண.குறிஞ்சி ஒருங்கிணைப்புக்குழு சாதிமறுப்பு மக்கள் கூட்டியக்கம், தமிழ்நாடு.