பணியின்மையிலும் நேர்மையில் குன்றாத இலக்குவனார்

பணி இல்லாத பொழுதும் மனச் சான்றுக்கு ஏற்ப நேர்மையாய் வாழ்ந்த பேராசிரியரின் சால்பிற்குச் சான்றாக ஒரு நிகழ்ச்சி     திருவெறும்பூர் முக்குலத்தோர் உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாம் படிவம் (பத்தாம்வகுப்பு) வரைதான் பள்ளியில் நடத்தப் பட்டது. பேராசிரியர் வந்த பின்பு தான் பள்ளி இறுதி வகுப்பு எனப்படும் (ஆறாம்படிவ)பதினொன்றாம் வகுப்பிற்கான இசைவைப் பெற்றார். இதுவும் மக்கள் நலனையே நாடும் அவரது உயரிய பண்பைக் காட்டும். அப்பொழுது பள்ளிக்கல்வி இயக்குநராக இருந்த திரு நெ.து. சுந்தர வடிவேலு அவர்களைச் சந்தித்துப் பள்ளிக்கு ஆறாம் படிவத்தின் (பதினொன்றாம்…

தமிழ்த் தேசிய முன்னோடிப் போராளி

தமிழ்த் தேசிய முன்னோடிப் போராளி இலக்குவனார் சங்க இலக்கியம் வார ஏட்டின் மூலம் இலக்கியப் பணி ஆற்றுவதோடு நின்றுவிட வில்லை பேராசிரியர். ‘தமிழர்களின் தேசிய மொழி தமிழே ‘என்பதை உரைத்து வந்த பேராசிரியர் ‘சங்க இலக்கியம்’ இதழ் வாயிலாக வும் அதனை உணர்த்தினார். இந்தியம் என்றும் திராவிடம் என்றும் இல்லாத இயங்களைப் பிறர் இயம்பப் பேராசிரியரோ தமிழ்த்தேசியம் என்பதை வலியுறுத்தினார். இந்திய விடுதலைக்கு ஈராண்டுகளுக்கு முன்பிருந்தே “உரிமை ஞாயிறு தோன்றுகின்றது. உறங்காதே தமிழா! உன்றன் நாடும் உரிமைபெற்றிட உழைத்திடு தமிழா!  என்று தமிழக விடுதலை…

இலக்குவனார்க்கு வழங்கப்பெற்ற பட்டங்களும் அடைமொழிகளும்

  இலக்குவனார்க்கு வழங்கப்பெற்ற பட்டங்களும் அடைமொழிகளும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்க்கு நகர்தோறும் தமிழ் அமைப்புகள் பட்டங்கள் வழங்கியுள்ளன. சிறப்பு அடைமொழி குறித்தும் இலக்குவனாரை அழைத்துள்ளனர். நூற்றுக்கணக்கில் உள்ள இவற்றுள் சிலவற்றைக் காண்போம்! இவையே பேராசிரியரின் அரும் பணிகளையும் ஆழ்ந்த புலமையையும் தமிழ் காக்கும் போர்க் குணத்தையும் மக்களால் போற்றப்பட்ட சிறப்பையும் நமக்கு உணர்த்தும். அளப்பரிய தொண்டாற்றிய பெருமகனார் ஆற்றல் களஞ்சியம் இதழியல் செம்மல் இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி இந்தி எதிர்ப்புப் போருக்கு மூலவர் இருபதாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள் இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் இருபதாம்…

புழுதிவாக்கம் – இலக்கியக் கூட்டம் கார்த்திகை 21, 2045 திசம்பர் 7, 2014 கவியரங்கம் கருத்தரங்கம்

தமிழ்இலக்கிய மன்றம் புழுதிவாக்கம் கார்த்திகை 21, 2045 /  திசம்பர் 7, 2014 கவியரங்கம் கருத்தரங்கம்

தேனி மாவட்டத்தில் மூடப்படாத சாலையோரக்கிணறுகள்

தேனி மாவட்டத்தில் மூடப்படாத சாலையோரக்கிணறுகள்   தேனி மாவட்டத்தில் திறந்த வெளி சாலையோரக் கிணறுகளால் பேரிடர் ஏற்படும் கண்டம் உள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, கெங்குவார்பட்டி, புல்லக்காபட்டி பகுதிகளில் சாலையோரத்தில் ஏராளமான கிணறுகள் உள்ளன. இக்கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்பட்டன. இப்பொழுது கிணறுகளில் நீர் நிரம்பி வழிகிறது. பெரும்பாலான கிணறுகள் சாலையோரத்தில் திரும்பும் இடத்தில் அமைந்துள்ளன.   இருசக்கர வாகனங்கள், மிதியூர்திகள்(ஆட்டோக்கள்), சீருந்துகள், போன்றவை இப்பகுதியில் நாள்தோறும் கடந்து செல்கின்றன. இவ்வாறுள்ள சாலையோரக்கிணறுகளினால் இவ்வாறு கடந்து செல்வோர் தவறி  விழுந்து பலர்…