போடுமலையில் அரிய உருளை வடிவக் கல்வட்டம்.

போடுமலையில் அரிய உருளை வடிவ கல்வட்டங்கள் கண்டெடுப்பு! எகிப்து நாட்டின் ஈமச் சின்னங்களை ஒத்திருப்பதாக ஆய்வாளர் தகவல்   கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான போடுமலையில், 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான அரிய வகை உருளை வடிவக் கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. வடிவத்தில் எகிப்து நாட்டின் ஈமச் சின்னங்களை ஒத்திருக்கும் இந்த உருளை வடிவக் கல்வட்டங்களை, பண்டைய தகடூர் நாட்டின் பெருமைக்குரிய சின்னங்களின் வரிசையில் இணைத்துக் கொள்ளலாம் என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் த. பார்த்திபன். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே சித்தேரி மலையின் தொடர்ச்சியாக உள்ள…

தூண்டில் திருவிழா

தூண்டில் திருவிழா  பள்ளி விடுமுறை நாட்களில் தூண்டிலோடுதான் சுற்றுவோம். கண்மாய், ஊருணி, ஏரி, குளம், குட்டை, ஏந்தல், தாங்கல் எனப் பல்வேறு நீர்நிலை அமைப்புகள் வருடம் முழுதும் தண்ணீர் நிரம்பி இருந்த பொற்காலம் அது. பசுமைச் சூழலில் மரமேறுதலும் கவட்டையும் நம் மரபு விளையாட்டாக இருக்கும் வரை பறவைகள் பற்றிய தொடக்கநிலை அறிவு நம்மிடம் இருந்தது. பின் வேளாண்மை, மேய்ச்சல், மீன்பிடி போன்ற பாரம்பரிய தொழில்களில் ஈடுபடுகிற போது இயற்கை பற்றிய அறிவு விரிவடையும். இயற்கையோடு இயைந்து வாழும் சமூகத்தின் மரபு அறிவியல் வளர்ச்சியின் இயல்பு…

தமிழையே கருதி உறுதி கொண் டெழுவீர் ! – சுத்தானந்த பாரதியார்

எண்ணுறும் போது தமிழையே  யெண்ணீர் இசைத்துழி தமிழையே  யிசைப்பீர் பண்ணுறும் போது தமிழ்ப்பணி தனையே பழுதறப் பண்ணியின் புறுவீர் உண்ணிடும் போதும் உறங்கிடும் போதும் உயிருளந் துடித்திடும் போதும் பண்ணினு மரிய தமிழையே  கருதிக் காரிய வுறுதி கொண் டெழுவீர் ! கவியோகி சுத்தானந்த பாரதியார்

மின்னூலில் வெற்றிச் சக்கரம் – சிறுகதைகள்

வெற்றிச் சக்கரம் – சிறுகதைகள் தமிழ்த்தேனீ மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com உரிமை – பொதுப்படைப்பு  கிரியேட்டிவ் காமன்சு (Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0). எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். மின்னூலாக்கம் – மேலட்டை உருவாக்கம் – தமிழ்த்தேனீ rkc1947@gmail.com பதிவிறக்க* http://freetamilebooks.com/ebooks/vetri-chakkaram-short-stories/

நடைமுறைப் புத்தாண்டில் உறுதி கொள்வீர்!

உறுதி கொள்வீர்! – கவிஞர் முடியரசன் முதலோடு முடிவில்லாப் பெருமை, நான்கு மொழிபெற்றும் மூப்பில்லா இளமைத் தன்மை, அதனோடு மிகுமினிமை, காலஞ் சொல்ல அமையாத பழந்தொன்மை, தனித்தி யங்கி உதவுநிலை, வளர்பண்பும், எளிமை, யாவும் உயர்தனிச்செந் தமிழுக்கே உண்டாம்; மேலும் புதுமைபெற முடிசூடி அரசு தாங்கப் புலவரெலாம் இளைஞரெலாம் உறுதி கொள்வீர்! தெலுங்குமொழி பிறமொழிகள் உயர்தல் காண்பார் தேன்மொழியாம் தமிழ்மொழியை வாழ்க என்றால் கலங்குகின்றார் ஒருசிலர்தாம்; உயிரா போகும்? கலங்கற்க! தமிழ்வாழ்ந்தால் யாரும் வாழ்வர்; புலங்கெட்டுப் போகாதீர்! ஆட்சி செய்யப் புன்மொழிகள் வேண்டாதீர்! தமிழின்…

இனப்படுகொலையாளி சகத்து தயாசுக்கு (Jagath Dias) சுவிசில் அரசப் பிடியாணை (Warrant)!

இனப்படுகொலையாளி சகத்து தயாசுக்கு (Jagath Dias) சுவிசில் அரசப் பிடியாணை (Warrant)! முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் முதன்மைக் காரணர்களில் ஒருவரான படைத்துறைப்பணித் தலைவர் சகத்து தயாசுக்கு(Major General Jagath Dias) எதிராக ௨௦௧௧ (2011) ஆம் ஆண்டு ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது நேரடியாக தயாசு மீது தொடுக்கப்படவில்லை. மாறாக, இனப்படுகொலையாளி சகத்து தயாசை இலங்கைத் தூதராகப் பணியமர்த்திய யேர்மனிய அரசு மீதே மனித உரிமை மீறல்கள் குறித்துக் குற்றம் சுமத்தப்பட்டு இவ்வழக்கு தொடுக்கப்பட்டது. இதன் விளைவாக சகத்து…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 04 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 03 தொடர்ச்சி) 04 வலிமையை வளர்த்திடுக!   ஆண்மை என்பது ஆண் தன்மை எனக் கருதுவது தவறாகும். உடல் வலிமையுடன் உள்ளத்தின் வலிமையும் கொண்ட ஆளுமைத் திறனே ஆண்மையாகும். வலிமை என்பது பேடிகை வாள்போல் இருந்து பயனில்லை. வீரமும் துணிவும் இணைந்தே இருக்க வேண்டும். எனவே, பாரதியார் வலிமை, வீரம், துணிவு முதலியனவற்றைப் பல்வேறு இடங்களில் வலியுறுத்துகிறார். மின் மெலியதைக்கொல்லும் வலியதனிலே வலிமை சேர்க்கும் அது நம் வலிமையயை வளர்த்திடுக (பக்கம் 430 / வசனகவிதை) வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம்…

தமிழ் ஆரியத்திற்கும் தாயே! – பேரா.சி.இலக்குவனார்

இந்திய மொழிகளின் தாயாம் தமிழ் ஆரியத்திற்கும் தாயே!             இவ்வாறு தமிழுக்கே உரிய இடைச்சொல் உரிச்சொல்களை ஆராய்கின்ற முறைமை வடமொழி நூலாராம் யாசுகருடைய நிருத்தத்தில் காணப்படுகின்றதாம். ஆகவே யாசுகரைப் பின்பற்றித் தொல்காப்பியர் கூறியிருப்பர் என அறிஞர் சுப்பிரமணிய சாத்திரியார் கருதுகிறார். (History of grammatical theories in Tamil : pages 198, 301) யாசுகருடைய காலம் தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்டமையின், அவ்வாறு கருதுதல் பொருந்தாது. யாசுகர் தொல்காப்பியரைப் பின்பற்றி நூல் செய்திருத்தல் கூடும் என்று கூறினால் மிக மிகப் பொருந்துவதாகும். ஆனால் சாத்திரியார்…

என்றும் உள்ளனவற்றை முதற் பொருள் என்றதன் சிறப்பு வியப்பிறந்தது – பேரா.சி.இலக்குவனார்

  என்றும் உள்ளனவற்றை முதற் பொருள் என்றதன் சிறப்பு நோக்கின் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தது. ” முதல் எனப்படுவது நிலம் பொழுதும் இரண்டின்                  இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே ” என்பர் ஆசிரியர். உலகத்திற்கு முதன்மையாக இருப்பன இவையே யன்றோ ! இவை யாரால் எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டன என்று வரையறுத்துக் கூற முடியாத இயல்பினவாக இருக்கின்றன. இடமும் காலமும் என்றும் உள்ளனவாதல் வேண்டும். ஆகவே என்றும் உள்ளனவற்றை முதற் பொருள் என்றதன் சிறப்பு நோக்கின் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தது ஆகின்றது. பேரா.சி.இலக்குவனார்:…

மட்டக்களப்பு விடிவு காண வாருங்கள்! – ஞா.கிருட்டிணப்பிள்ளை

மட்டக்களப்பு விடிவு காண வாருங்கள்!   “மட்டக்களப்புக்கு விடிவு காண வாருங்கள்” என்னும் தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டக் கிழக்கு மாகாண அவை உறுப்பினர் ஞா.கிருட்டிணப்பிள்ளை துண்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.   அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோரின் விவரங்கள், கைப்பற்றப்பட்ட எமது மக்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றச் சிக்கல் ஆகியவற்றுக்கு நாம் முதன்மையாக முகம் கொடுக்கும் வேளையில், நிலையான அரசியல் தீர்வுக்கான நகர்வையும், எமது அரசியல் பயணத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கிற வகையில் தெரிவிக்காமல் செய்து வருகின்றோம் என்பதை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்.  மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 9 இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 8 தொடர்ச்சி) 09   தமிழ்நாட்டின் தலைநகரின் பெயரைத் தமிழில் சென்னை என அழைக்க 1996இல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாணை பிறப்பிக்கவே 50 ஆண்டுகள் ஆகி விட்டன. எனினும் இன்னும் பலர் சென்னை என்றே அழைப்பதில்லை. பல்கலைக்கழகம், உயர்நீதிமன்றம், மருத்துவமனை முதலான அரசு நிறுவனங்களை அல்லது அரசின் துறைகளைக் கூட நம்மால் சென்னை எனக் குறிப்பிட இயலவில்லை.   பிற நாடுகள் அல்லது நகரங்கள் பெயர் மாற்றம் நடக்கும் பொழுது உடனே அவை நடைமுறைக்கு வந்துவிடுகின்றன. ஆனால், தமிழர்கள்…