சாதிவெறி ஆணவப்படுகொலை எதிர்ப்பு மாநாடு, கோயம்புத்தூர்

சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016 காலை 10.00 முதல் இரவு 9.00 வரை கோயம்புத்தூர்   சுடர் ஏற்றம்  படத்திறப்பு   பறைஇசை கருத்தரங்கம் சாதி மறுப்பு மக்கள்கூட்டியக்கம்

கோணகலை கீழ்ப்பிரிவுத் தோட்டத்தில் அடிக்கல் நாட்டு விழா

  பதுளை மாவட்டத்தில் பசறை கோணகலை கீழ்ப்பிரிவுத் தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 48 குடும்பங்களுக்கு 7 நிலவை காணியில் தனி வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றது.   மலைநாட்டுப் புதியசிற்றூர்கள், உட்கட்டமைப்பு வசதிகள், சமுதாயமேம்பாட்டு அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பதுளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேசு, அரவிந்தகுமார் ஆகியோரும் தொழிலாளர் தேசியச் சங்கத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர்  இராசமாணிக்கம்  முதலான பகுதி அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும்விருது வழங்கும் விழா

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் விருது வழங்கும் விழா  தேவகோட்டை: பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் விருது வழங்கும் விழா  பங்குனி 25,   2047 / ஏப்பிரல் 07, 2016 அன்று நடைபெற்றது.  விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கமுதி நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரித் தாளாளர் அகமது யாசின் முன்னிலைவகித்தார்.   விசாலயன்கோட்டை சேது பாசுகரா வேளாண்மைக் கல்லூரித் தாளாளர் சேதுகுமணன் சிறப்புரையில்,  8ஆம் வகுப்பு மாணவி தனம்,  7ஆம் வகுப்புமாணவி தனலெட்சுமி ஆகியோரின்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 3.தாய்தந்தையரைத் தொழுதல்

மெய்யறம் (மாணவரியல்) [வ. உ. சிதம்பரம்(பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.] 3.தாய்தந்தையரைத் தொழுதல் தாயுந் தந்தையுந் தம்முதற் றெய்வம். நம்முடைய முதல் தெய்வம் தாயும், தந்தையுமே ஆவர். அவரிற் பெரியர் யாருமிங் கிலரே. அவர்களைவிடப் பெரியவர் இவ்வுலகில் யாரும் இல்லை. 23. அவரடி முப்பொழு தநுதினந் தொழுக. நாள்தோறும் மூன்று பொழுதும் அவர்தம் அடிகளைத் தொழுதல் வேண்டும். அவர்பணி யெல்லா மன்பொடு செய்க. அன்புடன் அவர்களுக்குப் பணிவிடை செய்தல் வேண்டும். அவருரை யெல்லா மறிந்துளங் கொள்க. அவர்களின் அறிவுரைகளை அறிந்து…

எழில் இலக்கியப் பேரவை

  பங்குனி 28, 2047 / ஏப்பிரல் 10, 2016 மாலை 4.00 ஆவடி   எழில் இலக்கியப் பேரவை பாவேந்தர் பிறந்தநாள் 36ஆம் திங்கள் சிறப்புக் கருத்தரங்கம் குறள் அமுதக் கட்டுரைகள் நூல் வெளியீட்டு விழா

நா.கணேசன் சிறப்புச்சொற்பொழிவு : நிகழ்ச்சிப்படங்கள்

[பங்குனி 19, 2047 /ஏப்பிரல் 01, 2016  பிற்பகல் 3.00 தமிழ்த்துறை, சென்னைப்பல்கலைக்கழகம் பொழிவு :  விண்கலங்கள் ஆய்வறிஞர் முனைவர் நா.கணேசன்: சங்கக்காலக்கலைகளில் மழுவாள் நெடியோன் தலைமை : முனைவர் அ.பாலு வாழ்த்துரை : கவிஞர் ஈரோடு தமிழன்பன் வரவேற்புரை : முனைவர் ய.மணிகண்டன் [பெரிதாகக்காணப் படங்களை அழுத்தவும்!]

பிரதிலிபி – அகம் : கருத்தரங்கு – பரிசளிப்பு

   பிரதிலிபி – அகம் இணைந்து நடத்தும் “தமிழ் மொழியில் தொழில்நுட்பம்” குறித்தான கருத்தரங்கு ‘ஞயம்பட வரை’ போட்டியின் பரிசளிப்பு விழா பங்குனி 27, 2047 /  ஏப்பிரல் 9, 2016, மாலை 5.30 முதல் 8 மணி வரை  புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை  (டிசுகவரி புக் பேலசு)  , சென்னை  

அமுதசுரபி ஆண்டு விழா

  அமுதசுரபி ஆண்டு விழா பங்குனி 27, 2047 / ஏப்பிரல் 09, 2016 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடம் :  தவுட்டன் உணவகம்( Doveton Cafe), 5- புரசைவாக்கம் நெடுஞ்சாலை, புரசைவாக்கம், சென்னை நூல்கள் வெளியீடு செப்பேடு பாவலர் கருமலைத்தமிழாழன் மரபுக் கவிதை நூல். அன்புள்ளமே முனைவர் கோமதி கேசவன் புதுக்கவிதை நூல். நம் அமுதசுரபி மாத இதழ் அமுதசுரபி கவிதைகள் முகப்புத்தகத்தில் தேர்ந்தெடுத்த 100 கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பு. கவிதை அரங்கம், கலந்துரையாடல்,…

பாடம் கற்கும் முறை – பவணந்தி முனிவர், நன்னூல்

பாடம் கற்கும் முறை   நூல் பயில் இயல்பே நுவலின், வழக்கு அறிதல் பாடம் போற்றல்; கேட்டவை நினைத்தல், ஆசாற் சார்ந்து அவை அமைவரக் கேட்டல், அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல், வினாதல், வினாயவை விடுத்தல், என்றுஇவை கடனாக் கொளினே மடம்நனி இகக்கும் நன்னூல் 41   நூல் பயில் இயல்பு நுவலின் – நூலைக் கற்றலின் இயல்பைச் சொல்லின், வழக்கு அறிதல் – உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஆகிய இருவகை நடையையும் ஆராய்ந்து அறிதலும், பாடம் போற்றல் – மூலபாடங்களை மறவாது…

மாணவத் தோழர்களே! இளம் போத்துகளே! – வே.ஆனைமுத்து

மாணவத் தோழர்களே! இளம் போத்துகளே! தமிழைக் காப்போம் வாருங்கள்! தமிழால் வாழ்வோம் வாருங்கள்! அன்பார்ந்த மாணவத் தோழர்களே! கட்டிளங் காளைகளே! இளம்போத்துகளே! 18 அகவைக்கு மேல் 35 அகவை வரை உள்ள ஆடவரும் மகளிருமே மக்கள் தொகையில் அதிகம் பேர், எப்போதும் இந்த விழுக்காடு அதிகம் மாறுவது இல்லை. தமிழ்நாட்டு மக்கள் தொகை 7.5 கோடி. இவர்களில் தமிழ் பேசுபவர்களே அதிகம் பேர். தெலுங்கையும், மலையாளத்தையும். உருதுவையும், இந்தி, மார்வாரியையும் பேசுவோர் எல்லோரும் 7, 8 விழுக்காட்டினர் இருக்கக்கூடும். தமிழ்மொழியில் கடலளவு பழந்தமிழ் இலக்கியங்கள் உண்டு. அவை பெரிதும் பாடல்கள்….

புறநானூற்று அறிவியல் வளம் -இலக்குவனார் திருவள்ளுவன்

புறநானூற்று அறிவியல் வளம்     அண்மை நூற்றாண்டுகளில் கண்டறியப்பட்ட அறிவியல் உண்மைகள் பலவும் சங்க இலக்கியங்களில் உள்ளன.  சங்கக் காலத்தில் பிற நாட்டினர் அறியாத அறிவியல் உண்மைகள் பலவற்றையும் பழந்தமிழறிஞர்கள் அறிந்திருந்தனர். ஆனால், நமக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த (ஏன், பின்னரும் இருந்த) அறிவியல் நூல்கள் கிட்டில. ஆனால், இலக்கியங்களில் ஆங்காங்கே அறிவியல் உண்மைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. உண்மைகளை உவமைகளாகவும் எளிய எடுத்துக்காட்டுகளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள இலக்கியச் செய்திகள், அறிவியல் உண்மைகளைத் தமிழ் மக்களும் நன்கு அறிந்திருந்தனர் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியெனப் புரிய…

நூலழகு பத்து – பவணந்தி முனிவர், நன்னூல்

நூலழகு பத்து சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நவின்றோர்க்கு இனிமை, நனிமொழி புணர்த்தல், ஓசை உடைமை, ஆழம் உடைத்து ஆதல், முறையின் வைப்பே, உலகம் மலையாமை, விழுமியது பயத்தல், விளங்கு உதாரணத்தது ஆகுதல், நூலிற்கு அழகு எனும் பத்தே. சுருங்கச் சொல்லல் – சொற்கள் வீணாக விரியாது சுருங்கிநிற்கச் சொல்லுதலும் , விளங்கவைத்தல் – சுருங்கச் சொல்லினும் பொருளைச் சந்தேகத்துக்கு இடமாகாது விளங்க வைத்தலும் , நவின்றோர்க்கு இனிமை – வாசித்தவருக்கு இன்பத்தைத் தருதலும் , நன்மொழி புணர்த்தல் – நல்ல சொற்களைச் சேர்த்தலும்…