மாணிப்பாய் சத்திய சாயி பாபா பாடசாலைக்கு அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் வருகை

  மாணிப்பாய் சத்திய சாயி பாபா பாடசாலைக்கு மாநிலக்கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் அண்மையில்  வருகை புரிந்தார்.  அதுபோது பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களுடன் பாடசாலையின்  மேம்பாடு தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார். சத்தி சாயி பாடசாலையானது தேசியக் கல்வி முறையைப் பின்பற்றுகின்றது. இப்பாடசாலை இலங்கையில் காணப்படும் சத்திய சாயி பாபா பாடசாலைகளில் ஒரு  முதன்மைப் பாடசாலையாகக் காணப்படுகின்றது. இங்கு இருமொழி கற்கை நெறி நடைபெறுவதோடு  மேலதிகக் கல்விசார் நடவடிக்கைகளில் முன்னிலை வகிக்கின்றது. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

கல்வெட்டில் முதல்திருக்குறள்

  சென்னை குறள்மலைச்சங்கம் சார்பில், ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகில்உள்ள மலையப்பாளையத்தில் உள்ள உதயகிரி முத்துவேலாயுதசாமி கோவிலில் கல்வெட்டில் முதல்திருக்குறள் எழுதப்பட்டுள்ளது.   2047 ஆனி 19  / 2016 சூலை அன்று கல்வெட்டில் முதல் குறள் திறப்பு விழா நடைபெற்றது. இவ் விழாவில் இ.வி.ஆ.மை.(இசுரோ) இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கலந்து கொண்டு கல்வெட்டில் முதல் திருக்குறளை அறங்கேற்றம் செய்து பேசினார்.   திருக்குறளை  நாள்தோறும் படிக்க வேண்டும். அதைப்புரிந்து கொண்டு, அதன்படி நாம்வாழ்க்கையில் வாழ வேண்டும். இங்கே திருக்குறள் கல்லில் பதியப்பட்டிருப்பது போல்,…

தமிழ் நாட்டவராக வாழ விரும்பாதவர்கள் முன்னோர் நாட்டுக்குச் சென்றுவிடலாம் ! – சி.இலக்குவனார்

தமிழ் நாட்டவராக வாழ விரும்பாதவர்கள்   முன்னோர் நாட்டுக்குச் சென்றுவிடலாம் !     பல நூற்றாண்டுகளாகத் தமிழ்நாட்டைப் புகலிடமாகக் கொண்டு வாழ்பவர்கள் தமிழ் நாட்டவராக, தமிழராக வாழ வேண்டியதுதான் முறைமையாகும். அங்ஙனம் வாழ விரும்பாதவர்கள், அவர்களுடைய முன்னோர் நாட்டுக்குச் சென்றுவிடலாம். அங்ஙனமின்றி இந்த நாட்டில் இருந்து கொண்டே, இந்த நாட்டை, இந்த நாட்டு மொழியை, மக்களை எதிர்த்துக் கொண்டு, அழித்துக் கொண்டு வாழ நினைத்தால், தம் அழிவுக்கே வழி தேடியவர்கள் ஆவார்கள். – தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் குறள்நெறி (மலர்: 4…

நல்லதோர் வீணை செய்தே… – தி.வே. விசயலட்சுமி

நல்லதோர் வீணை செய்தே… நாட்டு விடுதலையைத் தன் உயிர்மூச்சாகக் கருதி, வீர விடுதலை வேண்டி, வேறொன்றும் கொள்ளாது நின்ற மகாகவி பாரதியார், விடுதலையை மாற்றாரிடமிருந்து பெறுமுன், இந்திய இனம் பெண்மைக்கு விடுதலை அளிக்க வேண்டுமென விரும்பினார். பெண் விடுதலை இயக்கம் உருவானது. பாரதியார் “பெண்மை வெல்க” எனக் கூத்திட்டார். “பெண்ணறத்தினை ஆண் மக்கள் வீரந்தான் பேணுமாயின் பிறிதொரு தாழ்வில்லை” என்று எடுத்துக்கூறினார். சக்தியும், சிவனும் இணைந்து செயற்பட்டால் வெற்றி பெறுவது திண்ணம் என உணர்ந்து, விடுதலைப் போராட்ட வேள்வியிலே பெண்ணினத்தை ஈடுபடுத்த வேண்டினார். “ஆணுக்குப்…

கருமலைத்தமிழாழனின் செப்பேடு – நூலாய்வு : பொன்.குமார், இனிய உதயம்

  செப்பேடு ( மரபுக் கவிதை நூல் ) ஆசிரியர் – பாவலர்  கருமலைத்தமிழாழன் திறனாய்வு – பொன் குமார்        தமிழ்க் கவிதையின்  தொடக்கம்   மரபுக்  கவிதையே.  பத்தொன்பதாம்  நூற்றாண்டு  வரை  மரபின்  ஆதிக்கம் தொடர்ந்தது.  பாரதிக்குப்  பின்  மாற்றம்  ஏற்பட்டது.  மரபைப்  பின்  தள்ளி  புதுக்கவிதை  முன்  சென்றது.  மரபுக்  கவிதை  என்றாலே  ஒரு  சிலர்  மட்டுமே  எழுதி ஒரு சிலர்  மட்டுமே  வாசிக்கும்  நிலையில்  மரபுக்  கவிதை  இருந்ததை  மாற்றி  அனைவரும்  வாசிக்கும்  வண்ணம்  மரபுக்  கவிதையை  எழுதி …

புதுச்சேரி ஆளுநர் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை மதிக்க வேண்டும் – தனித்தமிழ் இயக்கம்

புதுச்சேரி ஆளுநர்  தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை மதிக்க வேண்டும் – தனித்தமிழ் இயக்கம்  ஆண்டுதோறும் சிலப்பதிகாரவிழாவைப் புதுச்சேரியில் தனித்தமிழ் இயக்கம் நடத்திவருகிறது. இவ்வாண்டு ஆனி 16, 2047 / சூன் 30, 2016 இல் புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் சிலப்பதிகார விழா நடைபெற்றது.  தனித்தமிழ்இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில் முனைவர் கனகராசு வரவேற்புரை நிகழ்த்தினார். சிலப்பதிகாரம் பற்றிய பா வரங்கில் மு.பாலசுப்பிரமணியன், இரா.தேவதாசு, ஆறு.செல்வன், சண்முகசுந்தரம், இரா. இள முருகன், நட.இராமமூர்த்தி ஆகிய பாவலர்கள் கலந்து கொண்டனர். புரவலர் கி.கலியபெருமாள் செயல்அறிக்கை படித்தார்….

மகோற்சவ கிரியா தத்துவ விளக்கம் – நூல் வெளியீடு, இலண்டன்

நூல் வெளியீடு –  மகோற்சவ கிரியா தத்துவ விளக்கம் தொகுப்பு – சைவப்புலவர் சிவத்திரு பால.இந்திரக் குருக்கள் , சிட்னி முருகன் கோவில் அவுத்திரேலியா இடம் –          வால்தம்சுடௌ / வோல்தம்சுரோ கற்பகபதி கற்பக விநாயகர் ஆலயம்   ஆடி 31, 2047 / 15-08-2016 திங்கள்கிழமை  கொடியேற்றம் நேரம் –         பகல் 12-30மணி அளவில் நூல் வெளியீடு நடைபெறும் தொடக்கவுரை-   தத்துவாமிர்தமணி சிவத்திரு பா.வசந்தக் குருக்கள் வாழ்த்துரை –    சிவாகமச்செல்வர் சிவத்திரு கைலை நாக நாதக் குருக்கள், தலைமைக்குரு, இலண்டன் திருமுருகன்…

தகவலாற்றுப்படை : தொடர் சொற்பொழிவு-15

தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் தகவலாற்றுப்படை (திட்டத்தின் கீழ்) தொடர் சொற்பொழிவு-15 “திரௌபதி அம்மன் வழிபாட்டில் சமயம் எனும் அமைப்பு” என்னும் தலைப்பில் பேராசிரியர் இரா. சீனிவாசன் (பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை.)  உரையாற்றுகிறார்.    ஆனி 31, 2047 / 15.07.2016, வெள்ளிக்கிழமை                  மாலை 4.00 மணி   தமிழ் இணையக் கல்விக்கழகம், கலையரங்கம்  அனைவரும் வருக!   பேராசிரியர் இரா. சீனிவாசன் குறித்து  ஆய்வாளர், பதிப்பாசிரியர், ஆசிரியர், கல்வியாளர், இதழ் ஆசிரியர், நாட்டார்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.16. மயக்குவ விலக்கல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.15 தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 16. மயக்குவ விலக்கல் (மயக்குவ-போதைப்பொருட்கள்) மயக்குவ வறிவினை மயக்கும் பொருள்கள். மயக்குவ என்பவை அறிவினை மயக்கும் பொருட்கள் ஆகும். அவைகள் கஞ்சா வபின்முத லாயின. அவை கஞ்சா, அபின் போன்றவை. அறிவுதம் முயிரே யாதியே யுலகே. நம்முடைய உயிர், கடவுள், உலகம் எல்லாமாக அறிவுதான் உள்ளது. அறிவினை மயக்குத லவற்றை யழித்தலே. அறிவினை மயக்குவது என்பது இம்மூன்றையும் அழிப்பது ஆகும். அறிவினை மயக்குவா ரருமறம் புரிவர். அறிவினை மயக்கும் பொருட்களை உட்கொண்டவர் தீய செயல்களைச்…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 14 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 13 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 14    நாமே தெய்வம்! நன்கறிக! தன்மதிப்புடன் வாழத் தன்னம்பிக்கை வேண்டும். அதனால் ‘நாம் அனைவருமே தெய்வம்’ எனப் பல இடங்களில் கூறுகிறார்.         “வீரர்தம் தோளினிலும் – உடல்         வியர்த்திட உழைப்பவர் தோள்களிலும்” (பாரதியார் கவிதைகள்: பக்கம் 154 | திருமேகனைச் சரண் புகுதல்) தெய்வம் இருப்பதாகக் கூறுகிறார். “செல்வம் என்றொரு செய்கை எடுப்போர்         செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்         கைவருந்தி உழைப்பவர் தெய்வம்” (பாரதியார் கவிதைகள்:…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 33: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 32 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 33:   புதுக்கோட்டை மருத்துவர் இராமச்சந்திரன் அவர்கட்குப் படைக்கப்பட்ட ‘அன்புப் படையல்’ என்னும் கவிதை 1962 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. பத்தொன்பது அடிகளையுடையது. நிலைமண்டில ஆசிரியப் பாவால் ஆகியது. கவிஞர் எழுதிய ‘பழந்தமிழ்’86 என்னும் மொழியாராய்ச்சி நூலை மருத்துவருக்குப் படைத்துள்ளார்.   மருத்துவர் வி.கே. இராமச்சந்திரன் யாவரிடமும் இன்முகம் கொண்டு இனிய சொல் பேசுபவர். தாய் போன்ற அன்புள்ளம் கொண்டவர். வாழ்வுக்கு இடையூறாய் அமையும் நோயின் முதல்…

1 9 10 11 13