தமிழ் அமைப்பினரே இப்படிஎன்றால் எப்படித்தான் தமிழ் வாழும்? – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் அமைப்பினரே இப்படிஎன்றால் எப்படித்தான் தமிழ் வாழும்?   எல்லா விழா அழைப்பிதழ்களிலும் பிறமொழிக் கலப்பும் பிறமொழிஒலிக்கான அயல் எழுத்துகளும் கலந்து  கிடக்கின்றன. தமிழ் அமைப்பினர், தமிழ்த்துறையினர் நடத்தும் விழாக்களின் அழைப்பிதழ்களாவது (நல்ல)தமிழில் அமைய வேண்டாவா? இல்லையே! தமிழ் ஆண்டையும் குறிப்பிடுவதில்லை. முதலெழுத்துகளைத் தமிழில் குறிப்பிடுவதில்லை. கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தாமல் பெயர்களைக் குறிப்பதில்லை.   நுண்மாண் நுழைபுலம் மிக்கவர்களும் கிரந்தஎழுத்துகளின் கலப்பால் தமிழ், தான் பேசப்படும் பரப்பை இழந்துள்ளதையும் இழந்து வருவதையும் உணராமல் கிரந்தம் தேவை என்கின்றனர். அவ்வாறிருக்கும்பொழுது ஆர்வத்தால்  தமிழ் நிகழ்ச்சிகளை நடத்துவோரிடம்…

கொடூரமாகக் கொல்லப்பட்ட சுவாதியும் சாதிக்கண்ணாடியரும் – இலக்குவனார் திருவள்ளுவன்

கொடூரமாகக் கொல்லப்பட்ட சுவாதியும் சாதிக்கண்ணாடியரும்  கடந்த ஆனி 10, 2047 / சூன் 24,2016 அன்று சென்னையிலுள்ள நுங்கம்பாக்கம் தொடரிநிலையத்தில் பொறியாளர் ச.சுவாதி கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்களையும்  கொலைசெய்தவரை விரைவில் கைதுசெய்துள்ள காவல்துறைக்குப் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.    பொறி.சுவாதியுடன் பேசிக் கொண்டிருந்த ஒருவரே வாயில் / தாடையில் / கழுத்தில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். பின்னாலிருந்து அரிவாளால் வெட்ட முற்படும்பொழுது கழுத்தில்படாமல் வாயில் அறுத்திருக்கலாம் என முதலில் பலரும் கருதினர். ஆனால்  கொலைக்குற்றவாளி எனக்  குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள இராம்குமார்,…

காதல் கொள்வோரே கிட்டாதாயின் வெட்டென மறப்பீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

காதல் கொள்வோரே கிட்டாதாயின் வெட்டென மறப்பீர்!     காதல் என்பது வாழ்வியல் அறம். ஆனால், இரு மனமும் ஒத்து, நல் ஒழுக்கத்துடன் சிறந்து வாழும்பொழுதுதான் காதல் என்பது அறமாகிறது. உண்மைக்காதல் அவ்வாறுதான் இருக்கும். ஆனால், ஆசை, ஈடுபாடு, ஈர்ப்பு, முதலியவற்றையும் காதலாக எண்ணுவதுதான் குழப்பங்களுக்கும் குற்றங்களுக்கும் காரணமாய் அமைகின்றது. மாந்த இனம் எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதே காதல் உணர்வும் தோன்றியுள்ளது. காதல் தோன்றியபொழுதே ஒரு தலைக்காதலும் தோன்றியுள்ளது. ஆனால், முன்பெல்லாம் ஒரு தலைக்காதல்வயப்பட்டவர்கள், காதல் நிறைவேறத் தங்களைத்தான் வருத்திக் கொண்டார்கள். இப்பொழுது தான்விரும்பி…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 32: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 31 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 32 1.6 படையல் கவிதைகள்   தன்னை ஆதரித்து, உதவி செய்த பெருமைக்குரியவர்களுக்கு தாம் இயற்றிய நூல்களைப் படையலாக்கியுள்ளார் இலக்குவனார். இந்நூல்களின் முகப்பில் படையல் கவிதையை வெளியிட்டுள்ளார் கவிஞர்.   விருதுநகர் கல்லூரிப் பணியின்றும் வெளியேற்றப்பட்ட பின் கவிஞரை ஆதரித்தவர் புதுக்கோட்டை வள்ளல் எனப்படும் அண்ணல் பு.அ. சுப்பிரமணியனார். அவருடைய தம்பி கோவிந்தசாமி, அண்ணன் கருத்து அறிந்து செயல்படுபவர்.   அன்னாருக்குத் தாம் எழுதிய ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.15. இரவு விலக்கல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.14. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 15. இரவு விலக்கல் (இரவு-யாசித்தல்) இரவென் பதுபிறர் தரவொன் றேற்றல். இரவு என்பது பிறர் நமக்குத் தருவதை ஏற்றுக் கொள்ளுதல் ஆகும். இரவினிற் றாழ்ததொன் றிலையென மொழிப. இரத்தலை விட தாழ்ந்தது வேறொன்றில்லை என்று கூறலாம். இரவினிற் களவு மேற்றமா மென்ப. இரத்தலை விட களவு செய்தல் சிறந்தது என்று கூறலாம். இரந்திடப் படைத்தவன் பரந்தழி கென்ப. உயிர்களை இரந்து வாழுமாறு படைத்தவன் (இறைவன்) பல இடங்களுக்கும் சென்று இரந்து அழிவானாகுக. இரந்துயிர் வாழ்தலி…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 13 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 12 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 13 13. தன்மதிப்பைப் பொன் போல் போற்று!  அனைத்திலும் ஒருவருக்கு அடிப்படையான தேவை தன்மானம் பேணித் தன்மதிப்புடன் வாழ்வது. சாதிப் பிரிவுகள் மக்களைத் தன்மதிப்பிழக்கச் செய்து தாழ்வுபடுத்துகின்றன. எனவேதான் பாரதியார், “சாதிப்பிரிவுகள் சொல்லி – அதில் தாழ்வென்றும் மேலென்றும்” கொள்ளும் போக்கைக் கண்டித்துச் “சாதி நூறு சொல்லுவாய் போ போ போ” என விரட்டுகிறார். சில வகுப்பார் அடிமையாய் உழைப்பதற்கே பிறந்தவர் என்றும், ஒரு வகுப்பார் அவர் உழைப்பில் தாம் பிழைக்கப் பிறந்தவர்…

ஆய்வுகூடக் கட்டடம் – முன் நுழைவாயில் திறப்பு விழா, மட்டகளப்பு

வகுப்பறைகளுடன் கூடிய ஆய்வுகூடக் கட்டடம்  முன் நுழைவாயில் திறப்பு விழா   மட்டகளப்பு களவாஞ்சிகுடி பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசியப் பாடசாலையில் வகுப்பறைகளுடன் கூடிய ஆய்வுகூடக் கட்டடம் – முன் நுழைவாயில் திறப்பு விழா  ஆனி 16, 2047  / சூன் 30, 2016 அன்று நடைபெற்றது. இந். நிகழ்விற்கு தலைமை விருந்தினராக மாநிலக்கல்வி அமைச்சர் வே. இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாகப் பாராளுமன்ற உறுப்பினர்களான கோ. சீ.இயோகேசுவரன், ஞா.சிறிநேசன், ச.வியாழேந்திரன் மாகாணஅவை உறுப்பினர்கள். கல்வி அதிகாரிகள். கல்வி அமைச்சின் பாடசாலை…

திகைக்கச் செய்யும் திருக்குறள் திலீபன் : நினைவாற்றல் பயிலரங்கம்

திகைக்கச் செய்யும் திருக்குறள் திலீபன்:   நினைவாற்றல் பயிலரங்கம் தேவகோட்டை: தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் திருக்குறள் தீலீபனின் நினைவாற்றல் பயிலரங்கம் நடைபெற்றது.     இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியர் சிரீதர் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடி தங்கசாமி,    நடராசபுரம் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    திருக்குறள் தீலீபன் மாணவர்களின் முன்பு “புராணக்கால வரலாற்றிலிருந்து காணப்படும் பலவகைக் கலைகளுள் நினைவாற்றலை மனத்தில் நிறுத்தி அதைக் கவனத்தில் கொண்டு, மீண்டும் நினைவுபடுத்திக் கூறும்…

ஞாலப்போட்டி(ஒலிம்பியாடு)களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள்

ஞாலப்போட்டி(ஒலிம்பியாடு)களில் (அறிவியல் பிரிவு) கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள்    கொழும்பு கல்வி அமைச்சில் ஞாலப்போட்டி(ஒலிம்பியாடு)களில்  (அறிவியல் பிரிவு) கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் தலைமை விருந்தினராகக் கல்வி அமைச்சர் அகிலவிராசு காரியவசம், மாநிலக் கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் ஆகியோர் கலந்துகொண்டனர். அமைச்சர்கள் மங்கள விளக்கேற்றுவதையும் சான்றிதழ்கள் வழங்குவதையும் கலந்து கொண்ட மாணவர்களையும் படங்களில் காணலாம். மாநிலக்கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணனின் உரையில்,  ஒரு நாட்டில் தேர்தல் முடிந்த பின்பு அந்த…

மா ஓகையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா

மா ஓகையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா    தேவகோட்டை: தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேவகோட்டையில் கந்தசட்டிக் கழகம் சார்பாக நடைபெற்ற மா ஓகையில்(யோகா) கலந்துகொண்டதற்குப் பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.    விழாவில் ஆசிரியை சாந்தி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கந்தர்சட்டிக் கழகம் சார்பாக நடைபெற்ற மா ஓகையில்  கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் கழகத்தின் சார்பாகச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளியில் இருந்து…

முத்திரை வெளியீடும் நூற்றாண்டு விழாவும்

முத்திரை வெளியீடும் நூற்றாண்டு விழாவும் யாழ்ப்பாணம் மாவட்டம் புலோலி புற்றலை மகா வித்தியாலயத்தின் (1916-2016) நூற்றூண்டு விழா வித்தியாலயத்தின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார். இதன் போது முத்திரை வெளியீடும், நூல் வெளியீடும், சிறப்பிப்பும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]