மனிதம் – கமலா சரசுவதி

மனிதம் தலை சுமந்து உயிர்காக்கும், தன்மையது நல் மனிதம் ! உயிர் கொடுத்து உயிர்காக்கும், உணர்வே நல் மனிதம் ! செருக் கொழிக்கும் சிந்தையது, சிகரம் கொள்ளும் மனிதம் ! முருகவிழும் மொட்டுப் போலே முகிழும் மனங்கொள் மனிதம் ! துயரம் நிறைந்தோர் துயரேதீர்க்க, துடிக்கும் மனமே மனிதம் ! தோல்வியுற்றோர் துவளா நிலையைத் தோற்றுவித்தல் நல் மனிதம் ! வீட்டுப்பெண்கள் கொண்ட கருத்தை விரும்பிக் கேட்டல் மனிதம்! கொல்லும் பகையே என்றபோதும், கொஞ்சம் மன்னித்தல் அதுமனிதம் !   – கமலா சரசுவதி…

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9 : பெங்களூரு முத்துச்செல்வன்

(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 1/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9   தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ள ‘பிராமணீய நாயக’த்தின் பயன்கள் தேவைப்படாத பெரியாரியலார், இந்துத்துவத்தை நிலைநாட்டத் துடிக்கும்  பிராமணச் சூழ்ச்சிகளை உடனுக்குடன் தயக்கமும் மயக்கமும் இன்றித் தோலுரித்துக் காட்ட முற்படுகின்றனர். இன்றைக்கும் திராவிடர் கழகத்தின் தேவையை உணர்த்துவதாக அவ்வரிகள் அமைந்துள்ளன.   இந்துத் தேசியத்தின் ஒரு கூறாகிய சமற்கிருதத் திணிப்புக் குறித்துத் தந்தை பெரியாரின் கருத்துகளைப் பார்ப்போம்.   “இந்த நாட்டில் பலகாலமாகச் ‘சமற்கிருதம்’…

திருக்குறள் அறுசொல் உரை – 104. உழவு : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை – 103. குடி செயல் வகை தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 104. உழவு  உலகையே வாழ்விக்கும், உயிர்த்தொழில் உழவின் உயர்வு, இன்றியமையாமை.     சுழன்றும் ஏர்ப்பின்ன(து) உலகம், அதனால்,       உழந்தும் உழவே தலை.      உலகமே உழவின்பின்; துயர்தரினும், தலைத்தொழில் உழவையே செய்.   உழுவார் உலகத்தார்க்(கு) ஆணி,அஃ(து) ஆற்றா(து)       எழுவாரை எல்லாம் பொறுத்து. எல்லாரையும் தாங்கும் உழவர்; உலகத்தேர்க்கு அச்சுஆணி ஆவர்.   உழு(து)உண்டு வாழ்வாரே வாழ்வார்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙா] – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி  பேராசிரியர் சி.இலக்குவனார் [ங]  1.முன்னுரை  – முற்பகுதி தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙா] 1.முன்னுரை – பிற்பகுதி   தேவை உறுநருக்கு உதவுவதும் கடமை தவறுநர்க்கு இடித்துரைப்பதும் போராளியின் கடமைதானே. மாணாக்கர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் அவர் பரப்பிய தமிழுணர்வு தமிழ் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. பரப்புரைகளில் இலக்கியச் சிறப்புகளுடன் தமிழுக்கு ஏற்பட்டுள்ள தீங்கையும் காக்கும் கடப்பாடு ஒவ்வொருவருக்கும் உள்ளதையும் விளக்கினார் பேராசிரியர். “தமிழ், தமிழினம், தமிழிலக்கியம் இவற்றில் ஒன்றுபோம் எனில் மற்றவும் ஒழியும்.” (பாவேந்தர் பாரதிதாசன்) என்பதையே எல்லா இடங்களிலும் தொடக்கம் முதலே வலியுறுத்தினார்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.28.அறிவுடைமை

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.27. தொடர்ச்சி)   மெய்யறம் மாணவரியல் 28.அறிவுடைமை 271. அறிவு மறமொரீஇ யறத்தின்பா லுய்ப்பது. அறிவுடைமை தீயொழுக்கத்தை விலக்கி நல்லொழுக்கத்தை நோக்கி நம்மைச் செலுத்தும் இயல்பு உடையது. அறிவெஞ் ஞான்று மற்றங் காப்பது. அறிவுடைமை எப்பொழுதும் அழிவில் இருந்து பாதுகாக்கும் இயல்பு உடையது. அறிவு பகைவரா லழிக்கப் படாதது. அறிவு பகைவர்களால் அழிக்க முடியாதது. அறிவினை யுடையா ரனைத்து முடையர். அறிவினை உடையவர்கள் அனைத்தையும் உடையவர்கள் ஆவர். அறிவில் லாதார் யாதுமில் லாதார். அறிவில்லாதவர்கள் எதுவுமே இல்லாதவர்கள் ஆவர். அறிவிற்…

1 9 10