தமிழ் வளர்ச்சியும் தளர்ச்சியும் – இலக்குவனார் திருவள்ளுவன், நக்கீரன்

தமிழ் வளர்ச்சியும் தளர்ச்சியும்     மக்கள் நலத்திட்டங்களிலும் மொழி வளர்ச்சியிலும் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் முன்னோடியாகவும் பல திட்டங்களைச் செயற்படுத்திவருவது தமிழக அரசுதான். இந்த வகையில் தி.மு.க., அதிமுக ஆகிய இரண்டு திராவிடக்கட்சிகளின் ஆட்சிப் பொறுப்பாளர்களும் இவற்றிற்குக் காரணமான அலுவலர்களும் பணியாளர்களும் பாராட்டிற்குரியவர்களே!   திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்   அரசின் தமிழ்ப்பணிகள், தமிழ்வளர்ச்சி இயக்ககம் முதலான அரசின் துறைகள், உலகத்தமிழராய்ச்சி நிறுவனம் முதலான அரசுசார் நிறுவனங்கள், தமிழ்ப்பல்கலைக்கழகம் முதலான பல்கலைக்கழகங்கள், ஆசியவியல் நிறுவனம் முதலான நல்கைநிதியுதிவி பெறும் நிறுவனங்கள் மூலம் சிறப்பாக  நடைபெறுகின்றன.   நம் மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு எனச் சூட்டப்பட்டது(1968), தலைநகர் எல்லா…

செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பு! அயல்நாட்டுத்தமிழறிஞர்களுக்கு அவமதிப்பு!

செம்மொழித்தமிழுக்கான 2014-2015,  2015-2016 ஆம் ஆண்டுகளுக்குரிய குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு :- 2014-2015 தொல்காப்பியர் விருது – முனைவர் அ.தட்சிணாமூர்த்தி இளம் அறிஞர் விருதுகள் முனைவர் அ.சதீசு முனைவர் செ.முத்துச்செல்வன் முனைவர் ப.திருஞானசம்பந்தம்  முனைவர்  மா.வசந்தகுமாரி முனைவர் கோ.சதீசு 2015- 2016 தொல்காப்பியர் விருது – முனைவர்  இரா.கலைக்கோவன் இளம் அறிஞர் விருதுகள் முனைவர் மு.வனிதா முனைவர் வெ.பிரகாசு முனைவர் சிரீ. பிரேம்குமார் முனைவர் க.பாலாசி முனைவர்  மு.முனீசு மூர்த்தி வழக்கம்போல் இவ்வாண்டுகளிலும் அயல்நாட்டுத் தமிழறிஞர்களுக்கான குறள்பீட விருதுகள் அறிவிக்கப்படவில்லை. …

ஈழத்தமிழர்களே! ஊர்ப்பெயர்களைச் சிதைக்காதீர்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஈழத்தமிழர்களே! ஊர்ப்பெயர்களைச் சிதைக்காதீர்கள்!   அயலவர்கள் அவர்களின் மொழி உச்சரிப்பிற்கேற்ப நம்  ஊர்ப்பெயர்களை உச்சரித்தனர். திருநெல்வேலியைத் ‘தின்ன வேலி’ என்றும் திருவல்லிக்கேணியை ‘டிரிப்பிளிகேன்’ என்றும் சொல்வதுபோல் எண்ணற்ற ஊர்களை இவ்வாறுதான் தவறாக நாம் தமிழிலும் ஒலித்தோம். ஒருபுறம் ஆரியமயமாக்கப்பட்ட பெயர்கள் மறுபுறம் தவறான உச்சரிப்பிலான பெயர்கள் என இருபுறமும் தாக்குதல் நடைபெற்றது. திராவிட இயக்க எழுச்சியாலும் தனித்தமிழியக்கத்தினர் தொண்டினாலும் தமிழறிஞர்களின் ஆற்றுப்படுத்தினாலும் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் தமிழ்மய மாற்றங்கள் தேவை.   இவ்வாறு நம்மிடையே குறை  வைத்துக்கொண்டு, ஈழத்தமிழர்களை மட்டும் குற்றம்…

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இலவச மருத்துவ முகாம்

  துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இலவச மருத்துவ முகாம் சித்திரை 09 /  ஏப்பிரல் 22 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற இருக்கிறது. துபாய் அல்ராசு  பெருந்தொடரியகம் (Metro station) எதிரில் அமைந்துள்ள அல் அப்ரா பண்டுவ மனையில்(clinic) இந்த மருத்துவ முகாம் நடக்கிறது. இந்த முகாமில் பொது மருத்துவம், பல்  மருத்துவம் தொடர்பான அறிவுரை வழங்கப்பட இருக்கிறது. பொது மருத்துவத்தில்  பட்டறிவு வாய்ந்த  மருத்துவர்களும் தமிழகத்தைச் சேர்ந்த  பல்மருத்துவர் நசிமா தலைமையிலான குழுவினரும்  …

பாரதியின் பாதையிலே – நிகழ்வு 11

சித்திரை 07, 2048 வியாழன் ஏப்பிரல் 20, 2017 மாலை 6.30 பாரதிய வித்தியாபவன் சிற்றரங்கம், சென்னை 600 004 பாரதிச் செம்மல் விருது பெறுநர்:  திருப்பூர் கிருட்டிணன் சிறப்புரை:  க.வி.வேங்கடபதி, மேனாள் மத்திய அமைச்சர்     பாரதியார் சங்கம் கிருட்டிணா இனிப்பகம் பாரதிய வித்தியா பவன்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உலகச் சித்தர்கள் மாநாடு

    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உலகச் சித்தர்கள் மாநாடு சித்திரை 01, 2048 / 14-04-2017அன்று  நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் விழாவ மலரை வெளியிட்டு உரையாற்றினார். மரு.பாசுகரன் தலைமை வகித்தார். தமிழ்ப் பண்பாட்டுச் சங்கப் பொதுச் செயலாளர் சித்தமருத்துவர் பாக்கம் தமிழன் (பிரதாபசிம்மன்) வரவேற்புரையாற்றினார்.  பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடப் பொறுப்பாளர் முனைவர் ஆ. மணவழகன் முன்னிலை வகித்தார்.  பி.ஏ. சத்தியநாராயணன் தொடக்கவுரையாற்றினார் வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். முன்னாள் துணைவேந்தர் டி.சி. நாராயணன், பேரா.இராமசாமி, மரு. இராமலிங்கம், மரு….

இயித்தாவில் (Jeddah) இசுலாமியச் சிறப்புத் தமிழ்மாநாடு

  சவூதி அரேபியா  இயித்தாவில் (Jeddah)  சித்திரை 01, 2048 / ஏப்பிரல் 14  வெள்ளிக்கிழமை அன்று  இயித்தா இசுலாமிய அழைப்பகம் தமிழ்ப் பிரிவு சார்பில் சிறப்பு மாநாடு  சிறப்பாக நடைபெற்றது.   நிகழ்ச்சியில்  கல்வியாளர்(மவுலவி) இப்ராகிம் மதனி, கல்வியாளர் அன்சார் உசைன் பிருதவ்வி, இசுமாயில்  சியாகி , கல்வியாளர் முசாகி  இபன்  இரசீன், கல்வியாளர் அப்துல் பாசித்துபுகாரி,  உண்மை உதயம் ஆசிரியர் மவ்லவி இசுமாயில் சலபி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். முன்னதாகக் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன….

கட்டடக் கலை உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே! – கோ.தெய்வநாயகம்

கட்டடக் கலை உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே!      தொழில்நுட்பமும் கலைநுட்பமும் இணைந்து உருவாக்கப்படுவதே கட்டடக்கலை. இதன் செம்பொருள் உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே. உலகின் தலைசிறந்த கட்டடக்கலை வல்லுநர்களாகத் தமிழர் விளங்கி உள்ளனர். எனவேதான் பிரித்தானியக் கலைக் களஞ்சியம் தமிழர்களைத் தலைசிறந்த “”கோயிற் கட்டடக் கலைக் கட்டுநர்கள்” எனக் குறிக்கின்றது. வாழ்வியல் மற்றும் சமயஞ்சார் கட்டடக் கலையின் எழிலார்ந்த வடிவாக்கங்களைத் தமிழர்கள் தொன்றுத் தொட்டே ஆளுமையுடன் படைத்துச் சிறந்தமையை இன்றும் தமிழகத்தின் ஊர்களிலும் கோயில்களிலும் கண்டு மகிழலாம். முனைவர்…

16–ஆவது தமிழிணைய மாநாடு- காலக்கெடு நீட்டிப்பு

16–ஆவது தமிழிணைய மாநாடு- காலக்கெடு நீட்டிப்பு சிறந்த கட்டுரைகள் படைக்கும் மாணவர்களுக்கோ இளம் ஆய்வாளர்களுக்கோ பயணப்படியாக   கனடிய வெள்ளி 500 என நால்வருக்கு சிறப்பு உதவித்தொகைகள் வழங்கப்படும். ஆய்வரங்கக் குழுவின் முடிவே இறுதியானது.  இது தவிர சிறந்த கட்டுரைகளுக்கெனப் பல பரிசுகள் உள்ளன

பாடல் வகைகள்

பாடல் வகைகள்   குழந்தைப் பாடல்கள்: தாலாட்டுப்பாடல்கள்: விளையாட்டுப் பாடல்கள்: வேடிக்கைப் பாடல்கள் தொழிற்பாடல்கள் தெம்மாங்குப் பாடல்கள் மணப்பாடல்கள்: வாழ்த்துப் பாடல்கள் வசைப் பாடல்கள் பிணப்பாடல்கள்: ஒப்பாரிப் பாடல்கள் மாரடிப் பாடல்கள் களியல் பாடல்கள் வழிபாட்டுப் பாடல்கள் கோலாட்டுப் பாடல்கள் குறிகாரன் பாடல்கள் குடுகுடுப்பைப் பாடல்கள் கோடங்கிக் காரன் பாடல்கள் திருவிளக்குப் பாடல்கள் துளசிவழிபாட்டுப் பாடல்கள் வருணன்வழிபாட்டுப் பாடல்கள் மாரியம்மன் வழிபாட்டுப் பாடல்கள் வள்ளி வழிபாட்டுப் பாடல்கள் பிள்ளையார் வழிபாட்டுப் பாடல் அம்பாள் பாடல் வண்டியோட்டிப் பாடல் களையெடுப்போர் பாடல் கதிர்அறுப்போர் பாடல் சூடடிப்போர்…

16 ஆவது உலகத்தமிழிணைய மாநாடு – முழக்கம், இலச்சினைக்கானபோட்டிகள்

அன்புடையீர், வணக்கம். 16-ஆவது உலகத் தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும் கனடாவில் புகழ்மிகு தொராண்டோ மாநகரில் ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய நாள்களில் நடக்கவிருக்கின்றது. இவ்வாண்டு கனடாவின் 150 ஆண்டுநிறைவும் ஆகும்.  மாநாட்டின் கருத்து முழக்கங்கள் அல்லது உள்ளுறைத் தலைப்புகள் ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும் (Deep Learning)என்பதும் தமிழில் தரவு அறிவியல் (Data Science)என்பதும் ஆகும்.  தமிழ்க்கணிமை ஆய்வுலகில்  இயற்கைமொழியியல் ஆய்வுகள் பெருகிவருகின்றன.  ஒளிவருடி எழுத்துணரி நுட்பம், எழுத்துரையிலிருந்து ஒலிவடிவப் பேச்சுரையாக்குவது, திராவிடமொழிகளுக்கிடையே இயந்திர மொழிபெயர்த்தல், மொழியியல் நோக்கில்…

கூத்து வகைகள்

கூத்து வகைகள்   1. குரவை 2. துணங்கை 3. வெறியாட்டு 4. கொடுகொட்டி 5. பாண்டரங்கம் 6. கபாலம் 7. வள்ளிக்கூத்து 8. வாளமாலை 9. துடிக்கூத்து 10. கழல்நிலைக் கூத்து 11. உரற் கூத்து 12. மற்கூத்து 13. குடக்கூத்து 14. மரக்கால்கூத்து 15. தோற்பாவைக் கூத்து 16. ஆரியக் கூத்து (கயிறாட்டம்) 17. தேசிக் கூத்து 18. வடுகுக் கூத்து 19. சிங்களக் கூத்து 20. சொக்கக் கூத்து 21. அவிநயக் கூத்து 22. கரணக் கூத்து 23. வரிக்…