சுந்தரச் சிலேடைகள் 6 : பைந்தமிழும் தாய்மையும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 6 பைந்தமிழும் தாய்மையும் சொல்ல இனிமைதரும் சோதிக்கக் கன்னலதாம் வல்ல ஒலியெழுப்ப வாய்திறக்கும்-பொல்லாங் கொழிக்கும், பொதுமையாய் ஓங்கித் திளைக்கும் எழிற்றமிழைத் தாய்மையெனச் சாற்று. பொருள் : 1)தாயைப் பற்றியும் தமிழ்மொழியைப் பற்றியும் சொல்லும்போதே இனிமையாக இருக்கும் . 2)தாயின் தாலாட்டுப் பொருள் வலிமையானதாக இருக்கும், அதுபோலத் தமிழ்ச் சொற்களும் ஆக்கமுடையதாக இருக்கும். 3)வருந்துயரமெல்லாம் தாய் தாங்கிப் பிள்ளைகளை மகிழ்வுடன் வளர்ப்பதுபோல், தமிழ்மொழியும் தன்னைப் பிழையறக் கற்றவருக்குப் பெருமையைத் தருகிறாள். தடுமாற்றத் துயரைப் போக்குகிறாள். 4) எத்தனை குழந்தைகள் பெற்றாலும்…

கறுப்புப் பூனை -சந்தர் சுப்பிரமணியன்

கறுப்புப் பூனை   கறுப்புப் பூனை கண்கள் மூடி என்ன பண்ணுது? – அங்கு என்ன பண்ணுது? – அது கடந்து போகும் எலியைத் தின்னக் காத்திருக்குது! – அங்குக் காத்திருக்குது!   சுறுசுறுப்பாய் ஓடும் எலி என்ன பண்ணுது? – அங்கு என்ன பண்ணுது? – அது தூங்கு கின்ற பூனைக் காலைப் பார்த்திருக்குது! – காலைப் பார்த்திருக்குது!   –சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள்  பக்கம் 31

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 25 & 26

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 23 & 24 தொடர்ச்சி)  திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 25 & 26 இருபத்தைந்தாம் பாசுரம் சான்றோர் ஏத்தும் வழி   முகிற்கவசக் குன்றம் மருளும் கரிமேற் பகைசாய்க்கும் வேந்தன் தான்தனித்தே வெல்லும் மிகுபோர்போல் அன்றே குடிபல்லோர் ஓம்பல் ! வகுக்கும் அரசாணை வன்சான்றோர் ஏத்தும் தகவாய்ப் புரிதலன்றித் தாழ்நிலை சாரான் ! மிகவே அறநூல் மொழிகளயும் மீறான் ! உகுநீர் குடிகாணா ஓங்குபுகழ் ஆட்சி இகமும் வழுவா வகைசெயவா, எம்பாவாய் !   இருபத்தாறாம் பாசுரம்  தமிழால்…

பொன்விழாவில் வந்தவாசிக் கிளை நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் விழா

50-ஆவது சிறப்பு பொன்விழா ‘சந்திப்பு’ நிகழ்வில் அரசுக் கிளை நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் விழா:  சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்துகுமார் வழங்கினார்      வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின்  நூலக வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற 50-ஆவது சிறப்புப் பொன்விழா ‘சந்திப்பு’ நிகழ்வில், கிளை நூலகத்திற்கு  வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்துகுமார் நூல்களை வழங்கிச் சிறப்பித்தார்.      இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். விழாவில் பங்கேற்ற அனவரையும் கிளை நூலகர் கு.இரா.பழனி வரவேற்றார்.     விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட தெள்ளாறு ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கே.ஆர்.சீதாபதி, நூலகத்தில்…

தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2 – இரா.பி.சேது(ப்பிள்ளை)

தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2   இவ்வுலகில்     முன்னணியில்  நிற்கும்  நன்னாடுகளெல்லாம் தமது தாய்மொழியைத்   தலைக்கொண்டு  போற்றுகின்றன. தமிழ்நாட்டில்  சில காலத்திற்கு  முன்னர்   அந்நிய   மொழிகளில்  பேசுவதும் எழுதுவதும் அறிவுடைமைக்கு    அழகென்றும்,    தாய்மொழியைப்   புறக்கணிப்பது தவறன்றென்றும்  அறிவாளர்  கருதுவாராயினார். ஆயினும், இப்பொழுது அத்தகைய    கொள்கைகள்    அகன்று   ஒழிய,  ஆர்வம்   நிறைந்த தமிழ்மக்கள் தமிழ்த்தாயை ஆதரிக்க தலைப்பட்டுள்ளனர். தமிழ்மொழியின்      நயமறிந்த  கவிஞரும் அறிஞரும் அம் மொழி பயிலும்  தமிழகத்தை  அன்பு  ததும்பும்  இன்ப மொழிகளாற் போற்றும் அழகு  எல்லை   யற்ற   இன்பம்  தருவதாகும். …

தமிழின்பம் தனி இன்பம் 2/3 – கவியரசர் முடியரசன்

(தமிழின்பம் தனி இன்பம் 1/3 – முடியரசன் தொடர்ச்சி)  தமிழின்பம் தனி இன்பம் 2/3     நாலடியாரும் இவ்வின்பத்துக்கு நல்லதொரு சான்று நவில் கின்றது. மேலுலக இன்பம் சிறந்ததா? தமிழின்பம் சிறந்ததா? என்றால் தமிழின்பம்தான் சிறந்தது என்று அறுதியிட்டுக் கூறுகின்றது. உலக மக்களெல்லாம் மேலுலக இன்பந்தான் சிறந்தது என்பரே என்றால், தமிழின்பத்தினும் அது இனியது என்றால் மேலுலக இன்பத்தைப் பின்னர்ப் பார்க்கலாம் என்று விடை தருகிறது நாலடி. குற்றமற்ற நூற்கேள்வி உடையவரும் தம்முடை பகை யில்லாத வரும் கூர்த்த மதியினரும் ஆகிய தமிழ்ச்…

சுவையமுதே ! தித்திக்கும் சொல்லோவியமே ! – நாரா. நாச்சியப்பன்

சுவையமுதே ! தித்திக்கும் சொல்லோவியமே !   ஆதிமுதல் தாயே! அருந்தமிழே ! நல்வாழ்த்து ! சாதிவரு முன்னே தமிழ்நாட்டில் மக்கள்   பிறந்து சமத்துவமாய்ப் பேருலகில் வாழச் சிறப்புடனே பெற்றெடுத்த செந்தமிழே நல்வாழ்த்து !   கண்ணகியைப் பெற்றெடுத்துக் கற்பின் திறங்காட்டி மண்ணுலகைச் சீர்படுத்தும் மாணிக்கச் செந்தமிழே!   ஔவைமூ தாட்டி அறம்பாடக் கூழுட்டிச் செவ்வை புறவளர்த்த செந்தமிழே நல்வாழ்த்து !   போரில் புறங்கொடுத்த புல்லன் மகனென்றால் மார்பறுக்கத் தான்துணியும் மங்கையினைப் பெற்றவளே !   தாய்நாடு வாழத் தனதருமைச் சுற்றமெலாம் போய் வீரப் போர்புரியப் போக்குந் திருமகளை   ஊட்டி…

தமிழ்த்தாய் வணக்கம் 6-10 : நாரா. நாச்சியப்பன்

(தமிழ்த்தாய் வணக்கம் 1-5 தொடர்ச்சி)   தமிழ்த்தாய் வணக்கம் 6-10   மஞ்சள் முகமலர்ந்து மாதர் கரும்புமொழி கொஞ்சி வழங்கக் குதுகலிக்கும்-நெஞ்சுடனே சங்கொலித்துப் பால்பொங்கும் தைத்திருநாள் இன்றுனது பங்கயத்தாள் சார்ந்தோம் பணிந்து! (6)   இன்னமு தாகிய என்னனே யேஉனை என்னித யாசன மேற்றினேன்-கன்னலின் செந்தமி ழாகிய தேன் கவி பாய்ந்திட வந்தருள் செய்கவே வாழ்த்து. (7)   வாழ்த்துகவி யாலிந்த் வையக முற்றுமே ஆழ்த்துவேன் இன்பநல ஆக்கமெலாம்-சூழ்ந்திடவே நன்னெறியே பாடி நலஞ்சேர்ப்பேன் எந்நாளும் உன்னருளே தாராய் உவந்து. (8)   தமிழ்படித்த தாலிவர்கள்…

1 9 10