ஓவியக்கலை – விபுலானந்த அடிகள்

ஓவியக்கலை ஓவு என்னும் சொல்லுக்கு “அழகு பொருந்துமாறு செய்தல்” அல்லது “ஒன்றைப்போல எழுதுதல்” என்னும் பொருள். இதனடிப்படையில் ஓவி என்னும் சொல் ஓவியத்தைக் குறித்துள்ளது. பின்னர் அம் என்னும் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து ஓவம் என்பது ஓவியத்தைக் குறித்துள்ளது. ஓவு அர் ஓவர் என்பது ஓவியரைக் குறித்துள்ளது. ஓவி அம் ஓவியம் என்னும் சொல்லாட்சி பின்னர் நடைமுறையில் வந்துள்ளது. ஓவியத்தை வரைபவர் பின்னர் ஓவியன் அல்லது ஓவியர் எனப்பெற்றனர். நேர்கோடு, வட்டம், முக்கோணம் ஆகிய மூன்று மூலவடிவங்களினின்று தோன்றிய உருக்கள் எண்ணிறந்தன. எல்லா வகையான…

தாளநுட்பங்களைப் பழங்காலத்திலிருந்தே அறிந்து வைத்துள்ளனர்! – அ.நா.பெருமாள்

தாளநுட்பங்களைப் பழங்காலத்திலிருந்தே அறிந்து வைத்துள்ளனர்!    இன்றைய நிலையில் தாளத்தைப் பற்றி நன்கு அறிவதற்கு ஏற்ற முறையில் தாள சமுத்திரம், சச்சப்புட வெண்பா, தாள தீபிகை, தாளமும் அனுபவமும் ஆகிய நூல்கள் தமிழில் அச்சுப்பதிப்பாகக் கிடைக்கின்றன. வாத்திய மரபு என்ற நூல் சுவடிவுருவில் கிடைத்துள்ளது. இவை அனைத்தும் தமிழர் இசையிலுள்ள தாளத்தின் வகைகளையும் அவற்றின் அமைப்புக் கூறுகளையும் மிகச் சிறப்பாக விளக்குகின்றன. இவை தவிர, பத சங்கிரகம் என்ற பழைய நூல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் பதிப்பித்து வெளியிடப் பெற்றுள்ளது. இது நாட்டியம், தாளம் ஆகியவற்றை…

பாராட்டப்பட வேண்டிய வா.மு.சே. – வல்லிக்கண்ணன்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்   பாரதிக்குப் பிறகு தமிழில் கவிதை இலக்கியம் வளரவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். இது சரியான நோக்கு இல்லை.  பாரதிக்குப் பின் கவிதை வளர்ச்சி பற்றிப் பேசுகிறவர்கள் கூடப், பாரதிதாசன். கண்ணதாசன், பட்டுக் கோட்டை கலியாண சுந்தரம் என்ற ஒரு சில பெயர்களை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் முழுமையான பார்வை ஆகாது.  பாரதிக்குப் பின்னரும் நல்ல கவிதை எழுதுகிறவர்கள் பலர் தோன்றியுள்ளனர். இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் அவர்களுடைய பெயர்கள் பரவலாகப் பேசப்படுவதில்லை. குறிப்பிட்டுச்…

வே.சுப்பிரமணியம் அஞ்சலிக்கூட்டமும் பண்டாரவன்னியன் குறும் பட வெளியீடும்

  வே.சுப்பிரமணியம் அஞ்சலிக்கூட்டமும் பண்டாரவன்னியன்  குறும் பட வெளியீடும் சித்திரை 17, 2048 / ஏப்பிரல் 30, 2017 மாலை 3.00 முதல் இரவு 8.00 வரை அ/மி. கனகதுருக்ககை யம்மன் ஆலயம், இலண்டன் சாகித்தியஇரத்தினா, காலம் சென்ற  முல்லைமணி கலாநிதி வே.சுப்பிரமணியம் அவர்களுக்கான அஞ்சலிக்கூட்டமும் அவரின் படைப்பான வன்னி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன்  குறும் பட வெளியீடும்

பாரதிதாசனின் தமிழ் உணர்வு

    பாரதிதாசனின் தமிழ் உணர்வு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் என்பது அவரது எழுத்துகள் அனைத்திலும் துடிப்பாக இடம் பெறுவதைக் காணலாம். தமிழ் மொழியில் ஈடுபாடு தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் முப்பரிமாணங்களில் பாரதிதாசன் கவிதைகள் முத்தமிழை முழுமையாக வலம் வந்திருக்கின்றன. உலகக் கவிஞர்களிலேயே ஒரு மொழியை உயிருக்குச் சமமாக நினைத்துப் பாடியவர் பாரதிதாசன் ஒருவராகத்தான் இருக்க முடியும். அந்த அளவிற்குத் தமிழ் மொழியை நேசித்தார். காதலி ஒருத்தி தன் காதலனோடு கொஞ்சிப் பேசும் மொழிகூடத் தமிழ் மொழியாகத்…

மக்கள் திலகம் எம்ஞ்சிஆர்! 2/2 – கருமலைத்தமிழாழன்

(மக்கள் திலகம்  எம்ஞ்சிஆர்  1/2 தொடர்ச்சி)   மக்கள் திலகம்  எம்ஞ்சிஆர்!  2/2    அரிதரிது   மானிடராய்ப்   பிறத்த  லென்றார் அதனினும்கூன்   குருடின்றிப்   பிறத்த  லிங்கே அரிதென்றார் !   அதனினுமே   அரிதாம்   என்றார் அழகாக  எம்ஞ்சிஆர்போல்  பிறத்த  லென்றார் அரிதென்றார்   அதனினுமே   அவரைப்  போல அள்ளியள்ளிக்   கொடுக்கின்ற  மனித  நேயம் பெரிதாக   உள்ளவர்கள் !   ஔவை   சொல்லின் பெருமைக்குக்   காட்டிவர்போல்  உள்ளோ  ரரிதே !   சீர்திருத்தப்   புரட்சிகளைச்   செய்த  தாலே சிறப்பாக   நல்புரட்சித்   தலைவ  ரென்றார் ஊர்மக்கள்   மீதன்பு   செய்த   தாலே உயர்வாக  …

உயிர்த்தொடர்கள் (அகரவரிசையில்) : சந்தர் சுப்பிரமணியன்

உயிர்த்தொடர்கள் (அகரவரிசையில்) அந்நாளில் சீருள் – பூஞ் செந்தேனைக் கொண்டோள் ஔவை! பண்பாடி ஈர்க்கும் – பூம் பெண்வேங்கைச் சொற்கோ ஔவை! தன்வாழ்வில் மீளும் – ஊழ் வென்றேழ்மை கொன்றோள் ஔவை! பண்வானின் மீனுன் – பூ வெண்மேன்மைப் பொற்போ ஔவை?  – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன்

தமிழ்த்தாய் வணக்கம் 21-23 : நாரா. நாச்சியப்பன்

(தமிழ்த்தாய் வணக்கம் 16-20  தொடர்ச்சி) தமிழ்த்தாய் வணக்கம் 21-23   பூவுலகில் பேரறிஞர் புத்தாக்கம் செய்வதெலாம் நாவுலவு செந்தமிழில் நல்ல பெயரிட்டுக் கூற வியலாதாம் ! கோணல் மனங்கொண்டார் சீறா துறாரே தெளிவு (21)   நல்ல தமிழிருக்க நாடிப் பிறமொழியை வல்லே வழங்கி வழக்காடும் – புல்லர்களைச் சேரா திருக்கநான் செந்தமிழே என்தாயே ! வாராய் துணையாக வா. (22)   அறிவு பயத்தலால் அன்பு வளர்த்துச் செறிவு நிறைத்தலால் செந்தேன். இறுகியாங்கு என்றும் சிறத்தலால் என்தாய்த் தமிழின்வே றொன்றும் கொளாதென் உளம். (23) –பாவலர்…

தமிழுக்கான கட்டற்ற கணியங்கள்(மென்பொருட்கள்) – நிரல் திருவிழா

தமிழுக்கான கட்டற்ற கணியங்கள்(மென்பொருட்கள்) – நிரல் திருவிழா நீங்கள் கட்டற்ற கணியங்கள்(மென்பொருட்கள்) உருவாக்கத்தில் பங்கு பெற விரும்புகிறீர்களா? தமிழுக்கு உங்கள் நிரலாக்கத் திறன் மூலம் ஏதேனும் பங்களிக்க ஆர்வமுண்டா? பிற கட்டற்ற கணியம்(மென்பொருள்) பங்களிப்பாளர்களைச் சந்திக்க வேண்டுமா? இதோ ஒரு வாய்ப்பு. தமிழுக்கான கட்டற்ற கணியங்கள்(மென்பொருட்கள்) – நிரல் திருவிழா சித்திரை 10 / ஏப்பிரல் 23, 2017, ஞாயிறு காலை 10.00 – மாலை 5.00 மணவை முத்தபா நினைவகம், அறிவியல் தமிழாய்வு அரங்கு,ஏ.ஈ. 103, 6ஆேவது தெரு, 10-ஆவது  முதன்மைச் சாலை,…

சுந்தரச் சிலேடைகள் 9: சிவனும் தென்னையும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 9  சிவனும்  தென்னையும்   நீண்டிருக்கும், நீர்தரும் நீள்முடி கொண்டிருக்கும், ஆண்டிக்கும்  வாழ்வளிக்கும் ,அன்பிருக்கும்,-தோண்டிடத்தான் வேரிருக்கும் ,தொல்லை வெளியேறும்  நற்றென்னை பாரில்  சிவனுக்கு ஈடு. பொருள் :- சிவன் – தென்னை. 1)இறைவன் புகழ்  நீண்டது. அதற்கு எல்லை கிடையாது. தென்னையும் நீண்டு வளர்ந்திருக்கும். 2) சிவனை வணங்கத் திரு நீர் எனச் சிறப்பிக்கத்தகும் கங்கை நீர் கிடைக்கும். தென்னை இளநீர் தரும். 3 ) சிவன் நீண்ட சடைமுடி கொண்டிருப்பான். தென்னையும்  நீண்ட தோகைகளை முடியாகக் கொண்டிருக்கும்….

திருக்குறள் அறுசொல் உரை : 124. உறுப்பு நலன் அழிதல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 123. பொழுது கண்டு இரங்கல் தொடர்ச்சி)       திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால்  15.கற்பு இயல் 124.உறுப்பு நலன் அழிதல் பிரிவைப் பொறாத தலைவியது கண்,தோள் நெற்றிஅழகு கெடுதல்.   (01-07 தலைவி சொல்லியவை)         .      சிறுமை நமக்(கு)ஒழியச், சேண்சென்றார் உள்ளி,       நறுமலர் நாணின கண். பிரிவால் அழகுஇழந்த கண்கள், அழகுக்குவளை கண்டு வெட்கும்.   நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்,       பசந்து பனிவாரும் கண். நிறம்மாறி நீர்சிந்தும் கண்கள்,…

மக்கள் திலகம் எம்ஞ்சிஆர்! 1/2 – கருமலைத்தமிழாழன்

  எம்ஞ்சிஆர் நூற்றாண்டு விழா  கவியரங்கம் இடம் —  எம்ஞ்சிஆர். பல்கலைக்கழகம்  மதுரவாயில்  சென்னை நாள் :  பங்குனி 30, 2048 / 12 – 04 -2017 தலைமை –  கவிமுரசு  ஆலந்தூர் கோ. மோகனரங்கம் தலைப்பு – மக்கள் திலகம்  எம்ஞ்சிஆர் பாடும் கவிஞர் – பாவலர் கருமலைத்தமிழாழன் தமிழ்த்தாய்  வணக்கம் கடல்பொங்கி நிலம்மூழ்கி அழிந்த போதும்           களப்பிரரின் இருட்கால ஆட்சி தம்மில் இடம்சிறிதும் கொடுக்காமல் தடுத்த போதும்           இனிமையான பாசுரங்கள் பாடா வண்ணம் கடலுக்குள் கல்கட்டிப் போட்ட…