தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள் – தேசியக்கருத்தரங்கம்

  தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்  தேசியக்கருத்தரங்கம் சதக்கதுல்லா அப்பா கல்லூரி நாள் :  கார்த்திகை 24, 2049  / 18.12.2018 இடம் :  கல்லூரி உரையரங்கு   கட்டுரைகள் அனுப்ப வேண்டிய இறுதிநாள் : கார்த்திகை 24, 2049  / 10.12.2018   தொடர்பு : முனைவர் ச.மகாதேவன் தமிழ்த்துறைத் தலைவர் பேசி 9952140275 மின்வரி soundaramahadevan@gmail.com

குவிகம் இல்லம்: அளவலாவல் – சிட்டி வேணுகோபால்

  ஐப்பசி 25, 2049 /  ஞாயிறு / 11.11.2018 மாலை 4.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம்: அளவலாவல் – சிட்டி வேணுகோபால் எழுத்தாளர் சிட்டி பெயர்த்தி  திருவாட்டி கிருத்திகா ஆனந்து இல்லம் அடைய

மலேசியாவில் உலகத் திருக்குறள் மாநாடு – கருத்தாடல் கூட்டம், சென்னை

  ஐப்பசி 24, 2049 சனிக்கிழமை 10.11.2018 காலை 10.00 முதல் நண்பகல் 1.00 வரை ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம், தரமணி (M.S.Swaminathan Research Centre) மலேசியாவில் உலகத் திருக்குறள் மாநாடு – கருத்தாடல் கூட்டம் மலேசியாவில் 2019 ஆம் ஆண்டு பிப்பிரவரி 22,23,24 இல் உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. தொடர்பான ஆதரவிற்காகவும் கருத்துரை தெரிவிக்கவும் நடைபெறும் கூட்டம்.  தலைமை:  தமிழ்ச்செம்மல் ப.முத்துக்குமாரசுவாமி(வ.உ.சி.பெயரனார்) ஆர்வலர்கள் வருக. இங்ஙனம் மநாநாட்டுக்குழுவினர் கவிஞர் உடையார்கோயில் குணா தமிழ்த்தாய் அறக்கட்டளை,மாரியம்மன் கோயில், தஞ்சாவூர் 613501 பேசி 75300…

திருவாட்டி தாமரைச்செல்வி செங்குட்டுவன் படத்திறப்பும் நினைவேந்தலும்

  ஐப்பசி 24, 2049 சனிக்கிழமை 10.11.2018 காலை 11.00  இந்திய அலுவலர்கள் சங்க அரங்கம், இராயப்பேட்டை திருவாட்டி தாமரைச்செல்வி செங்குட்டுவன் படத்திறப்பும் நினைவேந்தலும்    

நன்னன் நினைவு நாளும் செம்மல் படத்திறப்பும்

ஐப்பசி 24, 2049 சனிக்கிழமை 10.11.2018 காலை 10.00  முத்தமிழ்ப்பேரவை, அடையாறு புலவர் மா.நன்னன் முதலாம் ஆண்டு நினைவு நாள் அவர் மருகர் செம்மல் (எ) கோவிந்தன் படத்திறப்பும் நினைவேந்தலும்  

வீறுகவியரசர் முடியரசன் படைப்புலகம் – தேசியக்கருத்தரங்கம்

  கார்த்திகை 29, 2049 / சனிக்கிழமை  / 15.12.2018   நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம்  இணைந்து நடத்தும் தேசியக் கருத்தரங்கம், கோவிலூர், காரைக்குடி   தலைப்பு : வீறுகவியரசர் முடியரசன் படைப்புலகம்   தொடர்பு : பேரா.ம.கார்மேகம் தமிழ்த்துறைத்தலைவர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி கோவிலூர் 630307  பேரா.சே.செந்தமிழ்ப்பாவை இயக்குநர் தமிழ்ப்பண்பாட்டு மையம் அழகப்பா பல்கலைக்கழகம் தலைவர், வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் காரைக்குடி 630003 pavaisenthamizh17@gmail.com  

தமிழைக் காக்குமா தமிழக அரசு? – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழைக் காக்குமா தமிழக அரசு? – இலக்குவனார் திருவள்ளுவன்   தமிழ்நாட்டில் எல்லாக் கட்சியின் ஆட்சிகளிலும் தமிழ் வளர்ந்தும் உள்ளது; தளர்ந்தும் உள்ளது. எனினும் எந்த ஆட்சியிலும் தமிழ் எல்லா நிலைகளிலும் பயன்பாட்டு மொழியாக மாற்ற எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதைய அரசு, இருக்கின்ற பயன்பாட்டு நிலைகளிலும் தமிழைத் தொலைத்து வருகின்றது. பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி தொலைக்கப்பட்டு வருகிறது. மாணாக்கர் எண்ணிக்கை குறைகிறது என்றால் அதை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறில்லாமல் தமிழ்வழிப்பள்ளிகளை அரசு ஆங்கில வழிப்பள்ளிகளாக மாற்றுகிறது.  அரசு மழலைப்பள்ளிகள்…

தமிழ்நெறிக்காவலர் அறவாணர் நீதிபதி மகாதேவனுக்குப் பாராட்டுகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்நெறிக்காவலர் அறவாணர் நீதிபதி மகாதேவனுக்குப் பாராட்டுகள்! தமிழ்ப்பகைவர்களே! வெளியேறுங்கள்!   தாய்மொழியில் இறைவனை வணங்குபவர்களுக்குத்தான் இறையருள் முழுமையாகக் கிட்டும்.  தமிழர்கள் பிற மொழியில் தம் சார்பாக யாரோ கடவுளை வாழ்த்த, அதைப்புரியாமல் செவிகொடுத்துக் கேட்டுத் தீவினை புரிந்து வருகின்றனர். எனவேதான், இறையருள் இல்லாமல் இன்னலுற்று வருகின்றனர். இறைவனைத் தமிழில் வணங்க வேண்டும் என்பதற்காகத் தமிழ்ப்பாடல்களைப் பாடி இறைநெறி பரப்பியவர்களுள் ஒருவர் நம்பியாரூரன்; சுந்தரமூர்த்தி நாயனார் என்று அழைக்கப் பெறுகிறார். திருமுனைப்பாடியில் திருநாவலூர் எனும் ஊரில் 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாரூரன் சிவபெருமானைப்பற்றி 38,000…

திருக்குறள் மனுதருமத்தின் சாராமா?- நாகசாமி நூலுக்கு எதிருரை

ஐப்பசி 21, 2049 / புதன்கிழமை / 07.11.2018  மாலை 6.30 – இரவு 8.30 நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றம் பெரியார் திடல், சென்னை 600 007 திருக்குறள் மனுதருமத்தின் சாராமா?- நாகசாமி நூலுக்கு எதிருரை சிறப்புப்பொதுக்கூட்டம் தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வரவேற்பு:  கவிஞர் கலி.பூங்குன்றன் கருத்துரை: முனைவர் மறைமலை இலக்குவனார் எழுத்தாளர் பழ.கருப்பையா பேரா.சுப.வீரபாண்டியன் திராவிடர் கழகம்

தமிழ் வளர்ச்சியில் இதழ்களின் பங்கு – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் வளர்ச்சியில் இதழ்களின் பங்கு   தமிழ்வளர்ச்சியில் முதன்மைப் பங்கு வகிப்பன இதழ்கள். இன்று அச்சு இதழ்கள் குறைந்து விட்டன. ஆனால், மின்னிதழ்கள் பெருகி விட்டன. அச்சிதழ்கள் அதே வடிவத்திலும் கூடுதல் பக்கங்களுடனும் அச்சிதழ் இன்றி மின்னிதழாக மட்டும் என்றும் மூவகை மின்னிதழ்கள் உள்ளன. இவை உடனுக்குடன் படிப்பவர்களைச் சென்றடைகின்றன.  செய்திகளையும் படைப்புகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் இதழ்களில் பெரும்பான்மையன தமிழைக் கொண்டு சேர்ப்பதில்லை. காட்சி ஊடகங்களால் தமிழ் அழிந்து கொண்டிருக்கும் இக்காலக்காட்டத்தில் இதழ்களாவது தமிழைக் காக்க வேண்டும். இப் பணிகளால் காட்சி ஊடகங்களையும்…

ஆரிய ஆபாசப் பண்டிகையே தீபாவளி! – ஈ.வெ.இரா., குடியரசு

ஆரிய ஆபாசப் பண்டிகையே தீபாவளி! தீபாவளிப் பண்டிகை என்பது ஆரியர்களின் புராணக் கதைகளில் வரும் ஒரு குட்டிக் கதை. அக்கதையின் கருத்து தேவர்கள் அசுரனைக் கொன்றதாகவும், அக் கொலை யானது உலகத்துக்கு நன்மை பயக்கும் கொலை யென்பதும், அதற்கு ஆக மக்கள் அந்தக் கொலைநாளைக் கொண்டாட வேண்டும் என்பதுமாகும். பொதுவாகத் தீபாவளி என்கின்ற சொல்லுக்கு விளக்கு வரிசை. அஃதாவது வரிசையாக விளக்குகள் வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயருள்ள பண்டிகையில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி…

அரசியலில் நல்லிணக்கம்—உடனடித் தேவை! – மறைமலை இலக்குவனார்

அரசியலில் நல்லிணக்கம்—உடனடித் தேவை! ‘உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடு’ என்னும் பெருமையைப் பெற்றது நம் நாடு. இங்கே பல்வேறு கட்சிகள் இயங்கிவருகின்றன. புதிது புதிதாக உருவாகியும் வருகின்றன. மக்கள்நலன் என்னும் குறிக்கோளை அடைவதற்கு அவை திட்டமிடுகின்றன. அவை மேற்கொள்ளும் வழிகள்தான் வேறுபட்டவை. மக்கள் நலனுக்காக உழைக்கப் பாடுபடும் கட்சிகளுக்கிடையே போட்டி இருக்கலாம்; பொறாமை இருக்கவேண்டிய தேவை இல்லை. கருத்து மாறுபடலாம்; ஆனால் பகைமை கொள்ளக் காரணமே இல்லை. புதுதில்லியில் ஏதேனும் ஒரு விழா என்றால் அனைத்துக் கட்சியினரைய்ம் ஒன்றாகக் காணலாம். விடுதலை நாள்…