வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 3/4 : இலக்குவனார் திருவள்ளுவன்

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 3/4 அருட்செல்வர் கிருபானந்த வாரியார் நான்காவதாக வா.வேங்கடராமனின் அருட்செல்வர் கிருபானந்த வாரியாரின் திருக்குறள் தொண்டு – ஒரு கண்ணோட்டம் என்னும் கட்டுரை இடம் பெற்றுள்ளது. வாரியாரின் பிறப்பு வளர்ப்பு பணிகளைக் குறிப்பிடும் கட்டுரையாளர் கி.வா.ச. அவரை 64 ஆவது நாயன்மார் எனப் புகழாரம் சூட்டியதன் பொருத்தத்தை விளக்குகிறார். பன்னிரு திருமுறைகள், சைவக்காப்பியங்கள், சைவச்சித்தாந்தச் சாத்திரங்கள் எனச் சைவ நூற்புலமை மிகக் கொண்டிருந்த வாரியார், சைவக் கருத்துகளைக் கூறும் இடங்களில் எல்லாம் திருக்குறள் மேற்கோளைத் தவறாமல் கையாண்டுள்ளார் என்கிறார்…

பாடுவேன் இவரை! – பேரறிஞர் அண்ணா

பாடுவேன் இவரை! எவரைப் பாடமாட்டேன்? வாழ்வின் சுவை தன்னை வகையாய்ப் பல்லாண்டு உண்டு, உடல் பெருத்து ஊழியர் புடை சூழ தண்டு தளவாடமுடன் தார் அணிந்து தேர் ஏறும் அரசகுமாரர் அருளாலய அதிபர் தமைக் குறித்து அல்ல. பாடுவேன் இவரை குடிமகனாய் உள்ளோன் ஊர்சுற்றும் உழைப்பாளி தோள்குத்தும் முட்கள் நிறை மூட்டைதனைச் சுமப்போன் தாங்கொணாப் பாரந்தன்னைத் தூக்கித் தத்தளிப்போன் களத்தில் பணிபுரிவோன் உலைக் கூடத்து உழல்வோன் ஏரடிப்போன் தூக்கம் தொட்டிழுக்கும் துயர் கக்கும் கண் கொண்டோன் குளிர் கொட்ட மழை வாட்ட குமுறிக் கிடந்தோர்…

உதவிய உள்ளங்கள் – பேரரசி முத்துக்குமார்

உதவிய உள்ளங்கள்  “மணியாகி விட்டது. நிகழ்ச்சி முடிவதற்குள் போகணும்பா…..சீக்கிரம் வண்டியை ஓட்டுங்கள்……இல்லை என்றால் இசையரசி ஆசிரியர் என்னைத்தான் திட்டுவார்கள்,” என்று தமிழரசன் கூறினான்.      “இரு…இரு…இது என்ன ‘ஃபார்முலா 1’ வண்டியா? வேகமாக போவதற்கு?” என்றார் அவன் அப்பா அமுதன்.      திரு. அமுதன் ஊர்தி, சாலையில் போய்க் கொண்டிருந்தது. அப்போது…. யாரோ வயதான மூதாட்டி ஒருவர் அவர்களின் ஊர்தியின் முன் மயக்கமாகி ‘தொப்’ என்று விழுந்தார். இருவரும் பயந்து விட்டனர். வாகனத்தை விட்டு இறங்கி அந்த மூதாட்டியின் முகத்தில் தாங்கள் கொண்டு வந்த…