4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 1/5

(தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 3/3 – சி. பா. தொடர்ச்சி) 4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 1/5 மனிதன் வாழ்க்கையில் பெறும் பேறுகள் பல நல்ல மனைவி வாய்ப்பதும், பண்பு சான்ற குழந்தைகள் வாய்ப்பதும் ஒருவனுக்கு வாய்க்கும் பேறுகளுள் சிறப்பானவைகளாகும். பெறும் பேறுகளுள் சிறந்த பேறு நல்ல மக்கள் வாய்ப்பதேயாகும் என்பதனைத் திருவள்ளுவர், “பெறுமவற்றுள் யாமவறிவ தில்லை அறிவறிந்தமக்கட்பேறு அல்ல பிற” (குறள். 70) என்று குறிப்பிட்டுள்ளார். பொருட்செல்வம், செவிச் செல்வம், கல்விச்செல்வம் முதலான செல்வங்களிலும் குழந்தைச் செல்வமே சிறப்பு வாய்ந்ததாகும்….

தமிழ்ப்பரப்புரைக் கழகம் : இலக்குவனார் கனவை நனவாக்கும் முதல்வருக்குப் பாராட்டு

தமிழ்ப்பரப்புரைக் கழகம் : இலக்குவனார் கனவை நனவாக்கும் முதல்வருக்குப் பாராட்டு –  இலக்குவனார் திருவள்ளுவன் கடந்த ஆண்டு சட்டமன்றத் தொடரில் 31.8.2021 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான நல்கைக் கோரிக்கையின்போது மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு “அயல்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும்” என அறிவித்திருந்தார். 06.01.22 அன்று தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்குவதற்குத் தொடர் செலவினமாக உரூ.1 கோடி நிதி ஒப்பளிப்பு அளித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது  நேற்று…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 417-420

(தமிழ்ச்சொல்லாக்கம்: 411-416 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 417-420  (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 417. தரித்திரர்       –          இல்லார் 418. காந்தன்          –          நாயகன் 419. அந்தரியாக பூசை –          உட்பூசை நூல்   :           அட்டரங்க யோகக்குறள்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 9

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 8 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 3. பழந்தமிழ் தொடர்ச்சி   ஆங்கில மொழியில் பிரித்தானியச் சொற்கள் எந்த அளவு கலந்துள்ளனவோ அந்த அளவு திராவிட  (தமிழ்)ச் சொற்கள் சமசுக்கிருதத்தில் கலந்துள்ளன. ஆனால் இவ்வுண்மை நெடுங்காலமாக  உணரப்பட்டிலது. (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், பக்கம் 714)   மேனாட்டு மொழியியல் அறிஞர்கள் இந் நாட்டு மொழிகளைக் கற்று ஆராய்ந்து ஆரிய மொழியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட திராவிட மொழிச் சொற்களைத் தொகுத்து எடுத்து அறிவித்துள்ளனர். அதன் பின்னர்தான் ஆரியம் கடன் கொடுக்குமேயன்றிக் கொள்ளாது என்ற கொள்கை…

தருமபுரம் சுவாமிநாதன் நூற்றாண்டு விழா

இசைப் பேரறிஞர் திருமுறைக் கலாநிதி அரசவைக் கலைஞர் தருமபுரம் ப.சுவாமிநாதன் அவர்களின் நூற்றாண்டு விழா புரட்டாசி 20-22, வெள்ளி, சனி, ஞாயிறு, 2053 / 07, 08,09.10.2022 நல்வாழ்வு திருமண மண்டபம், இராயப்பேட்டை, சென்னை 14

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 7

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 6 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 7 மருத நிலம்‌ தொடர்ச்சி ஓடை     இயற்கையான நீரோட்டத்திற்கு ஓடை என்பது பெயர். மயிலோடைஎன்னும் அழகிய பெயருடைய ஊர் நெல்லை நாட்டிலும், பாலோடைஇராமநாதபுரத்திலும், செம்போடை தஞ்சை நாட்டிலும் விளங்கக் காணலாம்.  மடை     கால்வாய்களிலும், குளங்களிலும் கட்டப்பட்ட மதகுகள் மடையென்று பெயர் பெறும். மடையின் வழியாகவே, தண்ணீர் வயல்களிற் சென்று பாயும். இத் தகைய மடைகள் அருகே சில ஊர்கள் எழுந்தன. நெல்லை நாட்டிலுள்ள பத்தமடை என்னும் பத்தல்…

சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்”  நூல் 3/3

(சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் நூல் 2/3தொடர்ச்சி) “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” – நூலாய்வு 1) காற்று: உயிரினம் வாழ்வதற்கு இன்றியமையாதது காற்று. இந்த அறிவியல் உண்மையை உணர்ந்தமையால் காற்று என்பதற்கு, ‘உயிர்ப்பு’ என மற்றொரு பெயரையும் நம் முன்னோர்கள் வைத்தனர். காற்று அங்கும் இங்கும் அசைவதால் ‘சலனம்’ எனப்பட்டது. உலவியதால் ‘உலவை’ எனப்பட்டது. வடக்கில் இருந்து வரும் காற்று வடந்தை எனப்பட்டது. அது வாட்டும் தன்மையால் வாடை எனப்பட்டது. மேற்கே இருந்து வருவதால் அது மேல் காற்று, எனப்பட்டது. அது கோடைகிழக்கே…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 411-416

(தமிழ்ச்சொல்லாக்கம்: 408-410 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 411-416 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 411. கீர்த்தனை – பாட்டு கீர்த்தனை என்பது வடமொழிச் சொல்லாயினும் தமிழில் பாட்டென்னுஞ் சொல்லோடு வேற்றுமையின்றிப் பயின்று தொன்றுதொட்டு வழங்கி வருகிறது. பாட்டென்னுஞ்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 71

(குறிஞ்சி மலர்  70 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 25 தொடர்ச்சி இவரைக் காண வேண்டும் என்று நேற்றும் அதற்கு முன் தினங்களிலும் எவ்வளவு ஏங்கிக் கொண்டிருந்தேன். எவ்வளவு தாகமும் தாபமும் கொண்டிருந்தேன். பார்த்த பின்பும் அவற்றை வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். படிப்பும், அறிவும், மனம் கலந்து அன்பு செலுத்துவதற்குப் பெரிய தடைகளா! இவரிடம் என் அன்பையெல்லாம் கொட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவள் ஏதேதோ அறிவுரை கூறுவது போல் பேசிவிட்டேன். எனக்கு எத்தனையோ அசட்டு இலட்சியக் கனவுகள் சிறு வயதிலிருந்து உண்டாகின்றன. அதை இவரிடம் சொல்லி இவருடைய…

சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்”  நூல் 2/3

(சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் நூல் 1/3தொடர்ச்சி) “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” – நூலாய்வு சொற் சிக்கனம் என்பது மொழிக்குச் சிறப்பாகும் என்று எடுத்துரைக்கும் கட்டுரையாளர், ஒரு சொல் குறிப்பிட்ட ஒரு துறையில் ஒரு பொருளை மட்டும் விளக்கும் வகையிலும் பிற துறைகளில் வெவ்வேறு பொருளை விளக்கும் வகையிலும் அமையலாம். அதேநேரம் ஒரு துறையில் ஒரு சொல்லே வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருள்களில் கையாளும் நிலை இருக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறார். எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் Post என்னும் சொல் light post என்னும்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.6 -1.7.10.

(இராவண காவியம்: 1.7.1-1.7.5. தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் 6.      பொருவள மின்றியே புகல டைந்தெனப்                பெருவள மிக்கதன் பெயரின் மேம்படும்                ஒருவள நாட்டினை யுண்டு வந்திடத்                திருவுளங் கொண்டதத் தீய வாழியும்.         7.      அவ்வள நாட்டினும் அரிய தாகவே                குவ்வளத் தமிழர்கள் கொண்டு போற்றிடும்                இவ்வுல கத்திலா வினிமை மிக்கிடும்                செவ்விய தமிழுணத் தேர்ந்த வக்கடல்.         8.      இனிமையி னுருவினள் இயற்கை வாழ்வினள்               …