(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 949-968-தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 969-978

  1. அவதாரம்
    அவதாரம் என்பதற்குக் கீழிறங்குதல் என்பது பொருள். உயர்நிலையிலுள்ள ஒருவர், பிறர் நலன் நாடி உலகில் தோன்றுவதைத்தான் அவதாரம் எனக் கூறுகின்றோம்.
    நூல் : பெரியாழ்வார் பெண்கொடி (1947), பக்கம் : 176
    நூலாசிரியர் : பண்டிதை எசு. கிருட்டிணவேணி அம்மையார்.
  2. சம்சார நெளகா – வாழ்க்கைப் படகு
    பிரகதி பிக்சர்சு & ஃச்டார் கம்பைன்சு தயாரித்த சம்சார நெளகா அல்லது வாழ்க்கைப் படகு (தமிழ்)
    புத்தகம் : சம்சார நெளகா அல்லது வாழ்க்கைப் படகு
    ⁠பாட்டுப்புத்தகம் (1948), பக்கம் 1
    நூலாசிரியர் : நடிகர் பி. ஆர். பந்துலு
  3. சுந்தரேசன் – எழிலன் (1948)
    சுந்தரேச துரை என்ற இயற்பெயர் கொண்ட வானம்பாடி எழிலன் வானம்பாடி என்னும் புனை பெயர்களில் எழுதினார். வானம்பாடி என்னும் பெயரில் 1948இல் வார இதழ் நடத்தினார். பின்னர் 1973இல் கவிதா மண்டலம் என்னும் கவிதை ஏட்டைத் தொடங்கி 3 ஆண்டுகள் நடத்தினார்.
    இதழ் : இளந்தமிழன் சனவரி மார்ச்சு 1989), பக்கம் 10
    சிறப்பாசிரியர் : தி. வ. மெய்கண்டார்.
  4. சுவாமி அருணகிரிநாதர் – செம்மலை அண்ணலாரடிகள்
    நூல் : மக்களின் கடமை (1948), பக்கம் – 1
    ஆக்கியோன் : சுவாமி அருணகிரிநாதர் என வழங்கும் செம்மலை அண்ணலாரடிகள்
  5. இராசரத்தினம் – அரசுமணி
    திருவல்லிக்கேணியில் உள்ள கெல்லெட்டு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் புலவர் அரசுமணியின் இயற்பெயர் இராசரத்தினம் என்பதாகும். அப்பெயரை அரசுமணி என்று 1948ஆம் ஆண்டில் இவர் மாற்றி வைத்துக் கொண்டார்.
  6. Power House – மின் மனை
    19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மைசூர் நாட்டு சருக்கார் தங்கள் நாட்டில் உள்ள சீவநதிகளின் இயற்கையான நீர் வீழ்ச்சிகளின் உதவியால் மின்சாரச் சக்தியைத் தயாரிக்க முன் வந்தனர். சிவசமுத்திரம் என்ற இடத்தில் உள்ள காவிரியின் நீர் வீழ்ச்சியண்டை 1902இல் மின்மனை (Power House) ஒன்றை நிறுவி மின்சாரத்தை தோற்றி, அங்கிருந்து 92 கல் தூரத்தில் உள்ள கோலார் தங்க வயல்களுக்குக் கொண்டு போய், விளக்கெரிக்கவும், யந்திரங்களை இயக்கவும் உபயோகித்தனர். இச் சக்தியைக் கொண்டு நடத்த பல தொழிற்சாலைகளையும் ஏற்படுத்தி, இந்தியாவுக்கு, ஏன் ஆசியாவுக்கே வழி காட்டினார்கள்.
    நூல் : திராவிட நாடு (முதல் பாகம்) (1949),
    ⁠அமைப்பியல், பக்கம் – 72
    நூலாசிரியர் : அ. கு. பாலசுந்தரனார், பி.ஏ., எல்.டி.
    ⁠(ஆசிரியர், சிந்தாதிரிப்பேட்டை
    ⁠⁠உயர்நிலைப் பள்ளி, சென்னை)
  7. பிரிவு உபசாரப் பத்திரிகை – பிரிவு விடை இதழ் (1545)
    சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியரும், தமிழ்த் துறைத் தலைவருமாயிருந்த பேராசிரியர் மொ. அ. துரையரங்கனார் அவர்கள் பி.ஓ.எல், எம்.ஓ.எல். –
    மதுரைத் தியாகராய கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகச் சென்றபோது பாராட்டி அளித்த சென்றபோது பிரிவு விடை இதழ்.
    பச்சையப்பன் கல்லூரித் தமிழ் மாணவர்கள்
    சேத்துப்பட்டு
    18 10.1949 இதழ் : இதழ் இணக்கம் (1949), மலர் : 3, இதழ் 9
    ஆசிரியர் : வித்துவான் மொ. அ. துரை. அரங்கசாமி, பி.ஓ.எல்,
  8. Projector – ஒளியுருவ இயந்திரம்
    இராபருட்டு பால் என்ற அறிஞன் முதன் முறையாக கினிடோசு கோப்பையும் படவிளக்கையும் இணைத்து ஒளியுருவத்தைத் திரையில் விழச்செய்தான். அதைத்தான் எல்லாரும் வேடிக்கைப் பார்த்தனர். அநேகமாக பால், பேசாத திரைப்படத்தை(சினிமாவை)க் கண்டுபிடித்து விட்டான் என்றே கூற வேண்டும். இதே சமயத்தில் பிரான்சு நாட்டில் (உ)லூமிரி சகோதரர்களும் அமெரிக்காவில் (இ)லாதம் (Latham) என்பவனும் ஒளியுருவ இயந்திரம் கண்டுபிடித்தனர்.
    நூல் : களஞ்சியம் (1949), பக்கம் , 54
    நூலாசிரியர் : இரா. நெடுஞ்செழியன் எம்.ஏ.,
  9. மெளன முத்திரை – சொல்லாக் குறி
    978.ஆனந்தம் – சிவப்பேற்றின்பம்
    நூல் : கவிஞன் உள்ளம் (1949)
    நூலாசிரியர் : வித்துவான் ந. சுப்பு ரெட்டியார், பி.ஏ. பி.எஸ்ஸி.
    ⁠எல்.டி., தலைமையாசிரியர் சமீந்தார்
    ⁠உயர்நிலைப் பள்ளி, துறையூர்.

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்