நாலடி நல்கும் நன்னெறி 25 : சமயங்கள் வெவ்வேறு: உணர்த்தும் நெறி ஒன்றே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 24: நிலையான பயன் தரும் அறம் செய்க!: தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 25 சமயங்கள் வெவ்வேறு: ஆயினும் அவை உணர்த்தும் நெறி ஒன்றே! ஆவே றுருவின வாயினும் ஆபயந்த பால்வே றுருவின அல்லவாம்; – பால்போல் ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல் உருவு பலகொளல் ஈங்கு. நாலடியார் பாடல் 118 கருத்து: பசுக்கள் வெவ்வேறு வண்ணங்களை உடையனவாக இருந்தாலும் அவை தரும் பாலின் நிறம் வெண்மைதான். அதுபோல், சமயங்கள் வெவ்வேறு வகையில் இருந்தாலும் அவை அறிவுறுத்தும் அறநெறி ஒன்றே!…
வெருளி நோய்கள் 1181-1185 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1176-1180 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1181-1185 தம்பா(Tampa) மாநகரம் தொடர்பான தேவையற்ற பேரச்சம் தம்பா வெருளி.ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தம்பா மாநகரம் உள்ளது. இம் மாநிலம், மாநில மக்கள், விளைபொருள்கள், பழக்க வழக்கங்கள், தொடர்பானவை குறித்துக் காரணமற்ற பேரச்சம கொள்வர் இத்தகையோர்.00 தராசு தொடர்பிலான அளவு கடந்த பேரச்சம் தராசு வெருளி.தராசு நிறைகோல் என்றும் துலாக்கோல் என்றும் அழைக்கப் பெறும்; தட்டுத்தராசு, வில் தராசு, மின்னணு தராசு, வேதியல் தராசு எனப் பலவகைப்படும். தராசுகளில் மோசடி செய்து எடையைத்…
வெருளி நோய்கள் 1176-1180 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1171-1175 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1176-1180 தந்தையர் நாள் (Father’s Day) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தந்தையர் நாள் வெருளி.தந்தை வெருளி(Patrophobia) உள்ளவர்களுக்குத் தந்தையர் நாள் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 தந்தையின் உடன்பிறப்புகளான அத்தையர், பெரியப்பா, சித்தப்பாக்கள் ஆகியோர் மீதான தேவையற்ற பேரச்சம் தந்தையின் உடன்பிறப்பர் வெருளிதந்தையின் உடன்பிறப்புகள் காட்டும் கண்டிப்புகளால் அவர்கள் மீது வெருளி வருகிறது.00 தந்தைவழி மாமன் தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தந்தைவழி மாமன் வெருளி.தந்தைவழி மாமன் கண்டிப்பைப் புரிந்து கொள்ளாமல் அவரகள்மீது…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 08: வீட்டிலும் ஏட்டிலும் தமிழைத் தொலைக்கும் நாம் : இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 07: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 08 வீட்டிலும் ஏட்டிலும் தமிழைத் தொலைக்கும் நாம் எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’ என்பது நடைமுறையில் இருக்க வேண்டும். அதற்குத், “தமிழை என்றும் உளதாகச் செய்வதற்கு அதனை மக்களுக்குப் பயன்படும் மொழியாக ஆக்குதல் வேண்டும். பயன்படு மொழியாகுங்கால் வீட்டிலும், ஊரிலும், நகரத்திலும், நாட்டிலும், உலகத்திலும் அதனை விரும்பிக் கற்குமாறு செய்தல் வேண்டும்”. என்கிறார் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 284). ஆனால், இன்றைய…
வெருளி நோய்கள் 1171-1175 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1166-1170 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1171-1175 தண்ணீர்ப்பூசணி(Watermelon) பற்றிய அளவு கடந்த பேரச்சம் தண்ணீர்ப்பூசணி வெருளி.தண்ணீர்ப்பூசணி, ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரமாகும். இதன் பழம் தர்ப்பூசணிப் பழம், வத்தகைப்பழம், கோசாப் பழம், தர்பீசு, தண்ணீர்ப் பழம் எனவும் அழைக்கப்படும். பூசணியைப் பூசுனி, பூசனி என்றும் குறிப்பிடுவர்.00 தந்தையுடன் பிறந்த தமக்கை, தங்கை ஆகிய அத்தைமார் தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தந்தை உடன்பிறந்தாள் வெருளி.அத்தை என்று சொன்னால், தாயுடன் பிறந்த உடன்பிறந்தவரின் மனைவி என்றும் பொருள் கொள்ளப்படும். எனவே,…
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௩. திராவிட நாடும் தேர்தலும்
(உ. இந்த அடிமை வாழ்வு தேவைதானா? எண்ணிப் பார் தமிழகமே! – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௩. திராவிட நாடும் தேர்தலும் சென்னை எசு.ஏ.ஏ. திடலில் நடந்த தமிழ் நாட்டுச் சட்டமன்ற (தி.மு.க.) க.து. கட்சி உறுப்பினர்கட்கு அளித்த பாராட்டுக் கூட்டத்தில் திரு. அண்ணாதுரை அவர்கள், “திராவிட நாட்டுக் கொள்கையை நாங்கள் விடமாட்டோம். அதனைச் சட்டமன்றிலும், நாடாளுமன்றிலும் தம்பிகள் வலியுறுத்தத் தயங்கமாட்டார்கள். முப்பத்து நான்கு இலட்சம் மக்கள் திராவிட நாட்டுக் கொள்கையை ஆதரித்தே எங்கட்கு வாக்குகளை வழங்கியுள்ளனர்” என்று அழுத்தம் திருத்தமாகப் பேசியுள்ளார்….
வெருளி நோய்கள் 1166-1170 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1161-1165: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1166-1170 தசைக்கனி (Berry) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தசைக்கனி வெருளி.இதனைச் சிலர் Fructophobia என்கின்றனர். fructus என்னும் இலத்தீன் சொல்லிற்குப் பழம் எனப் பொருள். எனவே, Fructophobia என்பதைப் பழ வெருளி எனப் பொதுவாகக் குறிப்பிட வேண்டும். Mourophobia என்பது குறிப்பாகத் தசைக்கனியைக் குறிப்பது.தசைக்கனியில் வழல் நச்சம்(சப்போனின்/saponin) என்னும் நச்சுக் கலவை உள்ளது. இது குமட்டல், வாந்தி, வயிற்றுப் பிடிப்பை முதலியவற்றை ஏற்படுத்தக் கூடும். இதனால் தசைக்கனி மீது அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.00…
வெருளி நோய்கள் 1161-1165: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1156-1160:தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1161-1165 புனைவுரு கதைப்பாத்திரமான சோனிகன்(Sonic) குறித்த வரம்பற்ற பேரச்சம் சோனிகன் வெருளிசப்பானியக் காணொளி ஆட்டத்தின் பெயரே ‘சோனிக்கு’ (Sonic, the Hedgehog). இப்பெயரில் திரைப்படமும வந்துள்ளது. இவ்வாட்டத்தை ஆடுபவர்களுக்கும் இதனை ஆடும் சிறுவர்களால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என அஞ்சும் பெற்றோர்களுக்கும் சோனிகன் வெருளி வருகிறது.‘க்‘ எழுத்தில் சொல் முடியாது. எனவே, ‘சோனிக்’ என்பது அன் விகுதி சேர்த்து சோனிகன் எனப்பட்டது.00 ஞாயிற்றுக்கிழமை குறித்த வரம்பற்ற பேரச்சம் ஞாயிற்றுக் கிழமை வெருளி.விடுமுறை நாள் என்பதால் வரும் சோம்பல்,…
சட்டச் சொற்கள் விளக்கம் 1036-1040 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 1031-1035 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1036-1040 1036. Avyavaharika அறநெறியற்ற Avyavaharika debts – அறநெறியற்ற கடன்கள் – மது, சூதாட்டம், பிற ஒழுக்கக் கேடான செயல்களால் ஏற்படும் கடன்கள் – இந்துச் சட்டத்தில் குறிக்கப்பெறுகிறது. 1037. Award தீர்வம் தீர்வளிப்பு தீர்ப்பு வழங்கு award என்றால் பொதுவாக நாம் விருது என்றும் சில நேரங்களில் பரிசு என்றும் கருதுகிறோம். ஆனால், வழங்கல் என்னும் பொருள் உண்டு. எனவே, சட்டத்துறையில் வழங்கப் பெறும் தீர்ப்பினைக் குறிக்கிறது. தீர்வு…
வெருளி நோய்கள் 1156-1160: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1151-1155: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1156-1160 சோளம்(corn)மீதான மிகையான பேரச்சம் சோள வெருளி.நீரிழிவு, உடல் பருமன், செரிமானக் கோளாறு, வாந்தி, அரிப்பு, மயக்கநிலை, பறித் தொல்லை(Flatus) முதலியன சிலருக்கு ஏற்படலாம். இதனால் சோள வெருளி கொள்வோர் உள்ளனர்.சோளம் என்பதற்கான கிரேக்கச் சொல்லே Kalampoki.00 சோளத் தோசை(tortilla)பற்றிய அளவற்ற பேரச்சம் சோளத் தோசை வெருளி.சோள வெருளி உள்ளவர்களுக்குச் சோளத்தோசை வெருளி வர வாய்ப்பு உள்ளது.Tortilla என்னும் இசுபானியக்கூட்டுச்சொல்(தோசை என்னும் பொருள் கொண்ட tort(a) + மென்மை என்னும் பொருள் கொண்ட ஒட்டுச்சொல் illa)…
கொடுத்ததைத் திரும்பக் கேட்காதே! – இலக்குவனார் திருவள்ளுவன், தாய் இதழ்
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 30 **** “கொடுத்ததைத் திருப்பிக் கேட்பதைவிட இறப்பது மேல்” இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய கொடுத்தவை தாவென் சொல்லினும் இன்னா தோநம் இன்னுயிர் இழப்பே. – சாத்தனார், குறுந்தொகை 349, அடிகள் 5-7 தலைவி கூற்று திணை: நெய்தல் கொடைத்தன்மை குறித்த பண்பாட்டை உணர்த்துவது இப்பாடல் வரிகள். பொருள்: தாம் அடைந்த வறுமைத் துன்பத்துக்கு அஞ்சி, நம்மிடம் இரப்பவர்க்கு அவர் விரும்பிய பொருளையும் அவருக்குத் தேவையானவற்றையும் கொடுத்து, அதன்பின், அவர்களுக்குக் கொடுத்தவற்றைத் திருப்பித்…
ஆளுமையர் உரை 155 & 156 ; நூலரங்கம், தமிழ்க்காப்புக் கழகம்
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௩ – 643) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 155 & 156 ; நூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 நாள்: மாசி 10, 2057 ஞாயிறு 22.02.2026 காலை 10.00 மணி அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை :…
