தோழர் தியாகு எழுதுகிறார் 153 : சோசலிசப் புரட்சி எனும் குமுகியப் புரட்சி
(தோழர் தியாகு எழுதுகிறார் 152 : சறுக்கல் ஏன்? மீளாய்வு செய்யுங்கள்! தொடர்ச்சி) இனிய அன்பர்களே! இந்த மடலின் முதல் தலைப்பில் காணப்படும் கலைச் சொற்கள் பலருக்கும் புதியனவாய் இருக்கக் கூடும். அவற்றை விளங்கச் செய்யும் நோக்கில் “சோசலிசப் புரட்சி எனும் குமுகியப் புரட்சி” என்ற தலைப்பில் ஏர் 2018 நவம்பர் 7 (புரட்சி நாள்) இதழில் இடம்பெற்ற என் கட்டுரையை இப்போதைய தேவை கருதி உங்களுடன் பகிர்கிறேன். சொல்லடிப்போம் வாங்க! சோசலிசப் புரட்சி எனும் குமுகியப் புரட்சி சோசலிசப் புரட்சியைக் குமுகியப் புரட்சி என்று எழுதியிருந்தேன். ஓரிரு ஆண்டுகளாகவே இந்தத் தமிழாக்கத்தைப் பயன்படுத்தி…
இந்தி எதிர்ப்பு நாடகத்தை நிறுத்துங்கள் – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 26 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 25 – ஆட்சி நிலைக்கத் தமிழை நிலைக்கச் செய்வீர்! – தொடர்ச்சி) இந்தி எதிர்ப்பு நாடகத்தை நிறுத்துங்கள் தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.தாலின், “தமிழ்நாடு சொல் அல்ல! தமிழரின் உயிர்!” என அருமையாகக் கூறியுள்ளார். பாராட்டுகள்! ஆனால் அந்த உயிர் குற்றுயிரும் குறையுயிருமாக உள்ள வேதனையை யாரும் உணரவில்லை. தமிழரின் வாழ்க்கை மொழியாகத் தமிழில்லை. கல்வி மொழியாகவோ வழிபாட்டு மொழியாகவோ சடங்கு மொழியாகவோ வேலை வாய்ப்பு மொழியாகவோ ஆராய்ச்சி மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ அன்றாடப் பயன்பாட்டு மொழியாகவோ…
பூங்கொடி 6 – கவிஞர் முடியரசன்: விழாவயர் காதை
(பூங்கொடி 5 – கவிஞர் முடியரசன்: தமிழ்த் தெய்வ வணக்கம் தொடர்ச்சி) 1. விழாவயர் காதை தமிழகச் சிறப்பு அலையெழு நெடுங்கடல் ஆடை உடீஇய நிலமகள் தனக்கு நிறைமதி முகமெனும் நாவலந் தீவின் நாடியாய் விளங்கும் பாவலர் புகழ் தரு பண்டைத் தமிழகம் மேவலர் அணுகா வீரங் கெழுமிய காவலர் மூவர் கயல்புலி வில்லெனும் கொடிமூன் றுயர்த்திக் கோலோச் சியது ; சங்கம் நிறீஇத் தமிழ்மொழி ஓம்பிப் பொங்கும் புகழ்வரப் பொலிந்த நன்னாடு; ‘யாதும் ஊரே யாவருங் கேளிர்’ என் றோதி ஓதி உயர்ந்ததோ…
தோழர் தியாகு எழுதுகிறார் 152 : சறுக்கல் ஏன்? மீளாய்வு செய்யுங்கள்!
(தோழர் தியாகு எழுதுகிறார் 151: சித்திரம் அல்லேன் தொடர்ச்சி) சறுக்கல் ஏன்? மீளாய்வு செய்யுங்கள்! இனிய அன்பர்களே! பன்னாட்டுப் பெருமுதலின் விருப்பத்துக்கேற்ப வேலைநேரத்தை நீக்குப்போக்காக மாற்றியமைக்கும் முடிவு பரவலான கடும் எதிர்ப்பைச் சந்தித்த பின், அம்முடிவை நிறுத்தி வைப்பதாகத் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.தாலின் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். நிறுத்தி வைத்தால் மட்டும் போதாது நிரந்தரமாகத் திரும்பப் பெற வேண்டுமெனக் கோருகின்றோம். இந்தச் சறுக்கல் ஏற்பட்டதற்கான காரணங்களை மீளாய்வு செய்யவும் அடியோடு களையவும் வேண்டும். திருத்தச் சட்டத்தை முன்மொழிந்த திமுக ஆட்சியும் சரி, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 764 -767
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 756 – 763 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 764 -769 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 764. உசுணமானி – சூடளந்தான் சூரிய உசுண ஆராய்ச்சிக் கருவியை உசுணமானி என்பர். இதனை…
தோழர் தியாகு எழுதுகிறார் 151: சித்திரம் அல்லேன்
(தோழர் தியாகு எழுதுகிறார் 150 : கீழடியும் தென்முடியனூரும் தொடர்ச்சி) சித்திரம் அல்லேன் இனிய அன்பர்களே! எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் போல் எல்லாருக்கும் கிடைத்து விட மாட்டார்கள். பள்ளி செல்வதற்கு முன்பே அப்பாதான் ஆசிரியர். வீடுதான் முதல் பள்ளிக்கூடம். மிகவும் சிறு வயதிலேயே கற்கை தொடங்கி விட்டது. திருவாரூரில் வீட்டருகே இருந்த ‘பாத்திமா கான்வெண்டில்’ சேர்த்த போது எடுத்தவுடனே இரண்டாம் வகுப்பு. பிறகு இரட்டை வகுப்பேற்றம் (double promotion) கொடுத்து நான்காம் வகுப்பில் போட்டார்கள். மடப்பள்ளியில்(கான்வெண்டில்) ஆசிரியர்கள் நிருவாகிகள் பெரும்பாலும் கிறித்துவ அருட்சகோதரிகள்தாம். அப்போது…
தோழர் தியாகு எழுதுகிறார் 150 : கீழடியும் தென்முடியனூரும்
(தோழர் தியாகு எழுதுகிறார் 149 : அஞ்சலட்டை தொடர்ச்சி) கீழடியும் தென்முடியனூரும் மதுரையிலிருந்து 12 அயிரைப்பேரடி(கிலோமீட்டர்) தென்கிழக்கே சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் இரண்டு காணி(ஏக்கர்) பரப்பளவில் 18.3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க. தாலின் திறந்து வைத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூரில் பட்டியலின மக்கள் கோயிலில் நுழைந்த பின்னர் சாதி இந்துக்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அகழ் வைப்பகம் எனப்படும் இந்த அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆறு காட்சிக் கூடங்களில் பழங்கால மனிதர்களின் வாழ்வியலைச் சித்திரிக்கும் வகையிலான ஓவியங்கள், வைகைக் கரையில் வாழ்ந்த மக்களின் வேளாண்மை, நீர் மேலாண்மை…
தோழர் தியாகு எழுதுகிறார் 149 : அஞ்சலட்டை
(தோழர் தியாகு எழுதுகிறார் 148 : சுசி, கவெ: அரசியல் உயிர்!- தொடர்ச்சி) அஞ்சலட்டை இனிய அன்பர்களே! ‘சுவருக்குள் சித்திரங்கள்’ நூல் வடிவம் பெற்ற போது “அறிவுப் பாலம்” என்ற தலைப்பில் அதற்கோர் அறிமுகவுரை எழுதினேன். அதன் முதல் பத்தி இதுதான்: “செத்தும் கொடுத்தவர் சீவலப்பேரியார். சௌபாவின் பாண்டி குறித்து நான் விடுத்த மடலை வெளியிட்ட சூனியர் விகடனார் அத்தோடு விடாமல் என்னைத் தேடிப் பிடித்து, சிறை அனுபவத் தொடர் எழுதச் சொன்னார். ‘சுவருக்குள் சித்திரங்கள்’ தீட்டத் திட்டிவாசல் திறந்தது இப்படித்தான்.” இந்தச் சுருக்கத்தைக் கொஞ்சம்…
தோழர் தியாகு எழுதுகிறார் 148 : சுசி, கவெ: அரசியல் உயிர்!
(தோழர்தியாகுஎழுதுகிறார் 147 : வேண்டும்உரோகித்துசட்டம் – தொடர்ச்சி) சுசி, கவெ: அரசியல் உயிர்! இனிய அன்பர்களே! அண்மையில் நடந்த என் தொடர்பான ஒரு நிகழ்ச்சி பற்றித் தாழியில் நான் எதுவும் எழுதவில்லை. எழுத வேண்டா என்றுதான் இருந்து விட்டேன். ஆனால் எழுத வேண்டும் என்று அன்பர்கள் சிலர் எனக்கு உணர்த்தியுள்ளனர். நான் எழுதிய “சுவருக்குள் சித்திரங்கள்”, “கம்பிக்குள் வெளிச்சங்கள்” குறித்து நற்றுணை நண்பர்கள் காளிபிரசாத்து முதலானோர் கவிக்கோ மன்றத்தில் சென்ற பிப்பிரவரி 25 மாலை ஒழுங்கு செய்த கலந்துரையாடல் நிகழ்ச்சியைச் சொல்கிறேன். அந்த நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்ததோடு இந்த நூல்கள் குறித்தும்…
தோழர் தியாகு எழுதுகிறார் 147 : வேண்டும் உரோகித்து சட்டம்
(தோழர் தியாகு எழுதுகிறார் 146: பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை தொடர்ச்சி) வேண்டும் உரோகித்து சட்டம்! இனிய அன்பர்களே! தொடர்ந்து உரோகித்து வேமுலா குறித்து எழுதிக் கொண்டிருந்தேன். மீயுயர் பல்கலைக் கழகங்களில் சாதிப் பாகுபாட்டுக்கு எதிரான ‘உரோகித்து வேமுலா (VEMUOLA) சட்டம்’ இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை அப்போதே எழுப்பப்பட்டது . நான்கைந்து ஆண்டு முன்பு புதுவை பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்க அழைப்பின் பேரில் அங்கு சென்று பேசும் வாய்ப்பைப் பெற்றேன். அப்போது உரோகித்து வேமுலா குறித்துப் பேசியதோடு உரோகித்து வேமுலா சட்டத்தின்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 45 : பழந்தமிழும் தமிழரும் 5
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 44 : பழந்தமிழும் தமிழரும் தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 5 குழந்தையைப் பெற்று வளர்த்தல் தாய்க்கு உரிய பெரும் பொறுப்பாக இருந்துளது. அப் பொறுப்பை அக்காலப் பெண்டிர் நன்கு உணர்ந்திருந்தனர். நாம் என்ன பிள்ளைபெறும் எந்திரமா? என்று வெறுத்து மணவாழ்க்கையை விட்டுவிடவில்லை. அப் பொறுப்பை உணர்ந்த அன்னையொருத்தி மிகப் பெருமையுடன் கூறிக்கொள்ளுவதை நோக்குங்கள். ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நல்நடை நல்கல் வேந்தற்குக்…
தமிழ் மாநாடும் தமிழக அரசும் – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் மாநாடும் தமிழக அரசும் உலகத்தமிழாராய்ச்சி மன்றம் ஆசியவியல் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய 11ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு இனிதே நிகழ்ந்து முடிந்தது. போதிய காலமின்மை, போதிய பணமின்மை ஆகியவற்றால் இடர்ப்பாடுகளை எதிர்நோக்கினாலும் மாநாடு சிறப்புடன் முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நிறைவு விழாவின்போது சட்டக்கதிர் சம்பத்து அவர்கள் “அரங்கு நிறைய ஆராய்ச்சியாளர்கள் அமைதியாக அமர்ந்திருப்பதே மாநாட்டின் வெற்றிக்கு அடையாளம்” என்றார். அஃது உண்மைதான். பொதுவாகக் கருத்தரங்கம் அல்லது மாநாட்டிற்கு வருபவர்கள் அமர்வின்பொழுது முழுமையாக இருப்பதில்லை. அல்லது எல்லா நாள் அமர்வுகளிலும் பங்கேற்பதில்லை. ஆனால், இந்த…
