தோழர் தியாகு எழுதுகிறார்  146:  பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை

 (தோழர் தியாகு எழுதுகிறார்  145: வேங்கைவயல் குற்றப் புலனாய்வு பற்றிய குற்றாய்வு தொடர்ச்சி)  பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் உள்ள இறையூர், வேங்கைவயல் தெருவில் பட்டியலினச் சாதி மக்களின் குடிநீர்த் தொட்டியில் சாதி ஆதிக்க வெறியினர்  மலத்தைக் கலந்த கொடூரமான வன்கொடுமை நிகழ்வு நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அன்று திண்ணியத்தில் நடந்த வன்கொடுமையின் உச்சபட்ச கொடூரம் இன்று இறையூரிலும் நடக்கிறது. “குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” என முதல்வர் சட்டப் பேரவையில் உறுதியளித்தார். ஆனால்,  சாதிவெறிக் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு மாறாக அவர்களைப் பாதுகாக்கும்…

11ஆவது உலகத்தமிழ் மாநாடு முடிந்தது. மலேசியா தமிழ் மாநாட்டின் நிலை என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்

11ஆவது உலகத்தமிழ்மாநாடு முடிந்தது. மலேசியா தமிழ் மாநாட்டின் நிலை என்ன? கடந்த வெள்ளி, சனி , ஞாயிறு (07,08,09.07.2023) சென்னையில் 11ஆவது உலகத்தமிழ்மாநாடு உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. ஆனால் மலேசியாவிவ் இதே மன்றத்தின் பெயரைப் பயன்படுத்திச் சூலை 21-23இல் 11 ஆவது உலகத்தமிழ்மாநாடு நடைபெறுவதாக அறிவித்து அதற்கான் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 11 ஆவது மாநாடு நடந்து முடிந்த பின் 12 ஆவது மாநாடுதானே நடைபெற வேண்டும். அப்புறம் ஏன் மீண்டும் 11 ஆவது மாநாடு ? முன்பே…

பூங்கொடி 5 – கவிஞர் முடியரசன்: தமிழ்த் தெய்வ வணக்கம்

(பூங்கொடி 4 – கவிஞர் முடியரசன்: கதைச் சுருக்கம் தொடர்ச்சி) தமிழ்த் தெய்வ வணக்கம் தாயே உயிரே தமிழே நினை வணங்கும் சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே தலை நி ன்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீயிங் கிலை யென்றால் இன்பமெனக் கேது. பாவால் தொழுதேத்திப் பாரில் நினையுயர்த்தும் ஓவாப் பணிசெய்ய உன்னுகின்றேன் – நாவாழும் மூவா முதலே முழுமைபெறும் செம்பொருளே சாவா வரமெனக்குத் தா. தென்பால் உகந்தாளும் தெய்வத் திருமகளே  என்பால் அரும்பி எழுமுணர்வை – அன்பால் தொடுத்தே அணிதிகழச் சூட்டினேன் பாவாய்…

தோழர் தியாகு எழுதுகிறார்  145: வேங்கைவயல் குற்றப் புலனாய்வு பற்றிய குற்றாய்வு

(தோழர் தியாகு எழுதுகிறார்  144 :சாதி என்பது வதந்தி அல்ல! தொடர்ச்சி) வேங்கைவயல் குற்றப் புலனாய்வு பற்றிய குற்றாய்வு வேங்கைவயல் திண்ணியத்தை நினைவூட்டுவதாக உள்ளது என்பது இரண்டுக்கும் பகைப்புலமாக உள்ள சாதியப் பாகுபாட்டையும் ஒடுங்கியர் (தலித்து மக்கள்) மீதான தீண்டாமை இழிவையும் மனத்தில் கொண்டு சொல்லப்பட்டது. அதே போது வரலாற்றில் இருவேறு நிகழ்ச்சிகள் நூற்றுக்கு நூறு முழுதொத்தவையாக இருப்பதில்லை. ஒவ்வொன்றையும் உருத்திட்டமாகப் பகுத்தாய (concrete analysis of concrete data) வேண்டும். திண்ணியம் பற்றிய உருத்திட்டமான தரவுகள் அனைத்தும் ஐயந்திரிபறக் கிடைத்த பிறகே அது தொடர்பான நீதிமன்றத்…

தோழர் தியாகு எழுதுகிறார்  144 : சாதி என்பது வதந்தி அல்ல! – உரோகித்து வேமுலா

(தோழர் தியாகு எழுதுகிறார் 143 : உரோகித்து வேமுலா தற்கொலைக் காரணம் – தொடர்ச்சி)  சாதி என்பது வதந்தி அல்ல! – உரோகித்து வேமுலா ஐதராபாத்து பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்திற்காகப் படித்துக் கொண்டிருந்த உரோகித்து சக்கரவர்த்தி வேமுலா  2016 சனவரி 17ஆம் நாள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சி நாடெங்கும் கிளர்ச்சியையும் கோபத்தையும் தூண்டிற்று. மீயுயர் கல்வி நிறுவனங்களில் ஒடுங்கியர்(தலித்து)களுக்கும் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கும் இழைக்கப்படும் அநீதியை வெளிக் கொணருவதற்கு அது தூண்டுதலாக அமைந்தது. 257 பேர் உயிரிழந்த மும்பை குண்டுவெடிப்புகளில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட  யாகூபு மேமனுக்குத்  தூக்குத் தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்த உரோகித்திற்கும் அகில பாரதிய வித்யார்த்தி…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  756 – 763

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 751 – 755 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  756 – 763 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 756. Wireless Telegraph –              கம்பியிலாத் தந்தி 757. Aeroplane –              விண்ணூர் பொறி 758. Type writing Machine           –              எழுத்தடிக்கும் இயந்திரம் 759. Тypes       –              அச்செழுத்துக்கள்…

தமிழுக்கு நிதி ஒதுக்குக! உரிய காலத்தில் அளித்திடுக!

11ஆவது உலகத்தமிழ் மாநாட்டு நிறைவு விழா தமிழுக்கு நிதி ஒதுக்குக! உரிய காலத்தில் அளித்திடுக! அரசுகளுக்கு வேண்டுகோள். ஆனி 22, 23 & 24, 2054 ****சூலை 07,08& 09.2023 ஆகிய நாள்களில் சென்னையில் செம்மண்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில்  11 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் ஆசியவியல் நிறுவனமும் இணைந்து நடத்திய இம்மாநாட்டின் நிறைவுவிழா நேற்று(09.07.2023 அன்று)  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆசியவியல் நிறுவன இயக்குநர் முனைவர் சான்சாமுவேல் தலைமை வகித்தார். வேல்சு அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சிக்கல்வி…

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 6  

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 5. தொடர்ச்சி) 1882-ஆம் வருட முடிவில் என்னை என் தகப்பனார் பச்சையப்பன் கல்லூரியின் கிளைப் பள்ளிக்கூடமாகிய அப்பள்ளிக்கூடத்தின் கீழ்ப்பாகத்தில் வைக்கப்பட்டிருந்த கோவிந்த நாயுடு பிரைமெரி (Primary) பள்ளிக்கூடத்தில் சேர்ப்பித்தார். என்னை அழைத்துக்கொண்டுபோய் அதன் பிரதம உபாத்தியாயர் ஏ. நரசிம்மாச்சாரியிடம் விட்டு, “இவன் இரண்டாம் வகுப்பில் போன வருடம் படித்தான். வகுப்பில் முதலாவதாக இருந்ததாகக் கேள்விப்பட்டேன். இவனை விசாரித்து எந்த வகுப்பில் சேர்த்துக்கொள்ள முடியுமோ அப்படியே செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். நரசிம்மாச்சாரியார் ஒன்றாவது வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 44 – அத்தியாயம் 25 செங்கணத்தில் வாசம்

(என் சரித்திரம் 43 : காரிகைப்பாடம் தொடர்ச்சி) அத்தியாயம் 25செங்கணத்தில் வாசம் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் சகோதரர்களாகிய வேலையர், கருணைப் பிரகாசர் இவர்களுடைய பரம்பரையினரும் உறவினரும் அப்பக்கங்களில் பல கிராமங்களில் பள்ளிக்கூடம் வைத்திருந்தார்கள். அவர்கள் யாவரும் ஓரளவு தமிழ்ப் பயிற்சி உடையவர்கள். நல்ல பாடல்களை மனனம்செய்து அவற்றை உரிய சந்தர்ப்பங்களிற்சொல்லி எல்லோரையும் மகிழ்வித்துப் பயன்பெறுவார்கள். அவர்களும் வேறு சில வித்துவான்களும் அடிக்கடி செங்கணத்திற்கு வந்து விருத்தாசல இரெட்டியாரிடம் சம்பாசணைசெய்து சில நாட்கள் தங்கியிருந்து தங்களுக்குள்ள சந்தேகங்களை நீக்கிக்கொண்டும் பொருளுதவி பெற்றும் செல்வார்கள். சில வித்துவான்கள்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  751 – 755

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 740 – 750 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  751 – 755 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 751. Motor Cars, Buses – தற்செயலிகள் இக்காலத்தில் தற்செல்லிகள் (Motor, Cars, Buses) பெரு வழக்காக ஓரிடமிருந்து மற்றோரிடம் போவதற்கு அமைந்துள்ளன. அவற்றில் ஆட்களை விதித்த எண்ணிற்கதிகமாக ஏற்றுவது…

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 5. தெருப்பள்ளிக்கூடங்களில் படித்தது

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 4. தொடர்ச்சி) 4. தெருப்பள்ளிக்கூடங்களில் படித்தது முதல் பள்ளிக்கூடம் இப்போது நானிருக்கும் வீட்டிற்கு 100 அடி தூரத்திற்குள் ஒரு வீட்டில் நடை திண்ணையி லிருந்தது. அதில் என்னுடன் பத்து பதினைந்து பிள்ளைகள் தான் படித்தார்கள் என்று நினைக்கிறேன். அதன் ஒரே உபாத்தியாயர் மிகவும் வயது சென்றவர். அவர் நரைத்த முகம் எனக்கு வெறுப்பைத் தந்தது. அவரிடம் தான் என் அண்ணன்மார்களெல்லாம் அட்சராப்பியாசம் ஆரம்பித்தார்களாம். எனது அண்ணனாகிய ஏகாம்பர முதலியாரைப்பற்றி அவர் விசயமாக ஒரு கதை சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்…

உ .வே.சா.வின் என் சரித்திரம் 43 : காரிகைப் பாடம் தொடர்ச்சி

(உ .வே.சா.வின் என் சரித்திரம் 42 : காரிகைப் பாடம் தொடர்ச்சி) அத்தியாயம் 24 தொடர்ச்சிகாரிகைப் பாடம் தொடர்ச்சி கல்விச் செல்வமும் பொருட் செல்வமும் ஒருங்கே பெற்றிருந்தமையின் அவருக்கு நல்ல மதிப்பு இருந்தது. அடிக்கடி யாரேனும் அயலூரிலிருந்து வந்து இரண்டொரு நாள் தங்கி அவரிடம் சம்பாஷித்துச் செல்வார்கள் .அவர் கன்னையரென்னும் வீரசைவரிடம் பாடங் கேட்டவர். வீரசைவர்களுக்கும் இரெட்டியார்களுக்கும் ஒற்றுமையும் நட்பும் அதிகமாக இருந்தன. வீரசைவ வித்துவ சிகாமணியாகிய துறைமங்கலம் சிவப்பிரகாசரை அண்ணாமலை இரெட்டியார் என்னும் செல்வர் ஆதரித்துப் பாதுகாத்த வரலாற்றை அவ்விருவகையினரும் அடிக்கடி பாராட்டிச்…