தோழர் தியாகு எழுதுகிறார் 85

(தோழர் தியாகு எழுதுகிறார் 84 தொடர்ச்சி) அருளியார்: எப்போதும் என்னுடன்! அருளியாருடன் உரையாடி முடித்து விடைபெறும் போது “விடாப்பிடியாக உங்கள் பணிகளைச் செய்யுங்கள், நீங்கள் அப்படிச் செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்றார். சிரித்துக் கொண்டே “நாம் செய்வோம்” என்று சொல்லி விடைபெற்றேன். அவர் முதன்முதலாக இப்படிச் சொன்னதை நான் மறக்கவில்லை, அவரும் மறக்கவில்லை. 1986-87-88? சரியாக நினைவில்லை. தஞ்சாவூரில் என் கல்லூரிக் கால ஆங்கிலப் பேராசிரியர் சேசாத்திரி அவர்களைப் பார்க்க நண்பர் மோகன் (அமரன்)  என்னை அழைத்துப் போயிருந்தார். கிட்டத்தட்ட இருபது ஆண்டு…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 32- மகமதியரும் கிருத்துவரும்

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 31. தொடர்ச்சி)                    ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 32 மகமதியரும் கிருத்துவரும் வாலாசா     தமிழ் நாட்டிலுள்ள வட ஆர்க்காட்டு வட்டத்தில் மகமதியத் தலைவர்கள் பெயரால் அமைந்த ஊர்கள் சில உண்டு. கருநாடக நவாபுகளில் ஒருவன் முகம்மது அலி என்பவன். அவனுக்கு வாலாசா என்னும் பெயரும் உண்டு. அப் பெயர் ஆர்க்காட்டிலுள்ள வாலாசா பேட்டைக்கு அமைந்துள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாலாசாவின் அமைச்சனால் அந்நகரம் உண்டாக்கப்பட்டதென்று சரித்திரம் கூறும். பதினெட்டுப் பேட்டைகளை உடையதாக அமைந்த அந் நகரம்…

தோழர் தியாகு எழுதுகிறார் 84: தாராளவியமா? தாராளியமா? தாராளிகமா?

(தோழர் தியாகு எழுதுகிறார் 83 தொடர்ச்சி) சொல்லடிப்போம் வாங்க! (9) தாராளவியமா? தாராளியமா? தாராளிகமா? இனிய அன்பர்களே! நவ தாராளவாதமா? புதுத் தாராளியமா? என்பதிலிருந்து இந்த உரையாடல் தொடங்கியது நினைவிருக்கும். நவ தாராளவாதம் வேண்டா என்று தொடக்கத்திலேயே தள்ளி விட்டோம். அதுதான் வேண்டும் என்றோ, அதுவே இருக்கட்டும் என்றோ யாரும் கட்சி கட்டவில்லை. ‘நவ’ என்பது புது எனப் பொருள் தரும். கலைச் சொல்லாக்கத்தில் பாதி தமிழாகவும் பாதி வேற்று மொழியாகவும் இருக்கலாகாது. நவ என்ற வடமொழிச் சொல்லை தாராளம் என்ற தமிழ்ச்சொல்லோடு சேர்க்க…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 36: பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 35 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’  36 8. பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்- தொடர்ச்சி   இன்றுள்ள இந்திய மொழிகளுள் ஆரியம் ஒழிந்த பிறவெல்லாம் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகே இலக்கியங்களைப் பெற்றுள்ளன.   வட இந்திய மொழிகள் எனப்படுவன அசாம் மொழி, வங்காள மொழி, குசராத்தி மொழி, காசுமீரி மொழி, இந்தி மொழி, மராத்தி மொழி, ஒரியா மொழி, பஞ்சாபி மொழி, உருது மொழி என ஒன்பதாம்.   அசாம் மொழியில் இலக்கியம் என்று கூறத்தக்கதாய்த் தோன்றியது கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான்.  …

தோழர் தியாகு எழுதுகிறார் 83: இன ஒதுக்கல்

(தோழர் தியாகு எழுதுகிறார் 82: கடற்கோள் நினைவுகள் தொடர்ச்சி) “இது துயருற்ற மக்களுக்கு எதிரான விலக்கல்! இன ஒதுக்கல்!!” இனிய அன்பர்களே! ‘பொருளியலில் நலிந்த பிரிவினர்’ (பொநபி) என்று சொல்லி இடஒதுக்கீடு வழங்கும் அரசமைப்பு 103ஆம் திருத்தச் சட்டம் செல்லுமா? என்ற வழக்கில் செல்லாது என்று சிறுபான்மைத் தீர்ப்பு வழங்கிய நீதியர் எசு. இரவீந்திர பட்டு அவர்களது தீர்ப்பினைச் சுருக்கித் தமிழாக்கம் செய்யும் வேலையை ஒருவழியாக முடித்துள்ளேன். இந்தத் தீர்ப்பின் சில பகுதிகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் முன்பே உங்கள் பார்வைக்குப் படைத்திருந்தேன். சட்ட நோக்கிலும்…

தமிழ்நாடும் மொழியும் 36: செந்தமிழும் கொடுந்தமிழும் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி

(தமிழ்நாடும் மொழியும் 35: தமிழின்தொன்மையும்சிறப்பும் – தொடர்ச்சி) 2. செந்தமிழும் கொடுந்தமிழும் செந்தமிழ் என்றால் என்ன? கொடுந்தமிழ் என்றால் என்ன? அவைவழங்கும் நாடுகள் யாவை? தமிழை இவ்வாறு பிரிப்பது முறையா? முதலில் யார் இப்பிரிவினைக் குறித்தது? இதுபற்றி அறிஞர்கள் என்ன கூறுகின்றனர்? என்பனவற்றை அடுத்து ஆராய்வோம். இன்று நின்று நிலவும் தமிழ் நூற்களில் தொன்மையான நூலெது? தொல்காப்பியம் என்க. அதிலே செந்தமிழ் கொடுந்தமிழ் என்ற பிரிவு காணப்படுகிறதா? இல்லை. ஆனால் முதன் முதலில் இப்பிரிவு நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்திலே காணப்படுகிறது. “செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதியில்”…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 1

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4   காட்சி : 5 தொடர்ச்சி) களம் : 5 காட்சி : 1 நாற்சந்தியில் பொதுமக்கள் அறுசீர் விருத்தம் முதியோன் 1 :           மண்ணாள்               வேந்தன்                  குலக்கொடிக்கு                                       மறவா           வண்ணம்                 யாப்புரைக்க                              எண்ணி                   யழைத்தார்               சூதாக                                       இளமைப்                பருவந்          தோதாக                              பெண்ணாள்              கவியின்                  தமிழாலே                                       பிணையல்               கொண்டாள்              அன்பாலே                              நண்ணும்                 அவையில்                இற்றைநாள்                                       நல்ல                      முடிவைக்                காண்குவமோ முதியோன் 2:…

தோழர் தியாகு எழுதுகிறார் 82: கடற்கோள் நினைவுகள்

(தோழர்தியாகுஎழுதுகிறார்  81 தொடர்ச்சி) கடற்கோள் நினைவுகள் இனிய அன்பர்களே! அன்பர் இயூபருட்டு நேற்று முதல் வேலையாகக் கடற்கோளை(ஆழிப் பேரலையை) நினைவு கூர்ந்து எழுதியிருந்தார். பதினெட்டாண்டு முன்பு கடந்த 2004 திசம்பர் 26ஆம் நாள் ஊருக்குள் கடல் நுழைந்து உயிர்களைச் சுருட்டிச் சென்ற அந்த நாளை எண்ணிப் பார்க்கிறேன். என் சொந்த நினைவுகள் சுருக்கமாக: திசம்பர் 26 மாலை திருவாரூரில் தமிழர் தன்மானப் பேரவை சார்பில் தந்தை பெரியார் நினைவுக் கருத்தரங்கம் – அதில் தோழர் ஏ.சி.கே.யுடன் நானும் பேச வேண்டும். தோழர் காமராசுதான் நிகழ்ச்சியை ஒழுங்கு…

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 4/5   – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

(சொல்லின்செல்வர் சேதுப்பிள்ளை 3/5 தொடர்ச்சி) 9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 4/5 ஆய்வு நூல்கள்நெல்லையில் வழக்கறிஞராக இருந்தபோதே இவரது ஆய்வுப்பணி முகிழ்ந்துவிட்டது. முதன்முதலில் 1926ஆம் ஆண்டில் திருக்குறளை ஆராய்ந்து ‘திருவள்ளுவர் நூல் நயம்’ என்ற நூலை வெளியிட்டார். இந்நூலின் மேன்மையினையும், ஆசிரியரின் ஆய்வுத் திறனின் மாண்பினையும் திரு. கா. சு. பிள்ளை அவர்கள், “உலகமெலாம் உய்வான் பொதுமறை வகுத்த ஆசிரியர் திருவள்ளுவனாரது அளப்பரிய மாண் பினைப் பாவலரும் நாவலரும் கற்றோரும் மற்றோரும் இந்நாள்வரை பொதுவகையாற் பலபடப் பாராட்டிச் சீராட்டிப் போந்தனர். ஆசிரியரது நூலின் பிண்டப்…

தோழர் தியாகு எழுதுகிறார் 81: வெண்மணியும் பெரியாரும் 2

(தோழர்தியாகுஎழுதுகிறார்  80 தொடர்ச்சி) வெண்மணியும் பெரியாரும் 2 திமுக ஆட்சி இந்தச் சம்பவத்தை எப்படி எதிர்கொண்டது? அண்ணாவால் இந்தச் சம்பவத்தை நினைத்திருந்தாலும் தடுத்திருக்க முடியாது. இது அவருக்குத் தெரிந்து நடந்தது என்றோ அவர் காவல்துறையை அனுப்பினார் என்றோ சொல்ல முடியாது. ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் “உழவர் காவல்துறை” ஆரம்பிக்கப்பட்டது. ஒருமுறை சட்ட மன்றத்தில் அண்ணா பேசும்போது, “உங்கள் தோழர்களில் சிலர் “பகலில் மார்க்குசியர்கள், இரவில் நக்சலையர்கள்” என்றே சொல்லியிருக்கிறார். வேளாண் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஏ.சி.கே., மீனாட்சிசுந்தரம் போன்றவர்களைத்தான் அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார். தொழிலாளர்களின் சார்பாக…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 688 -694

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 683-687) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 688 -694 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 688. பரசுபரம் – ஒருவர்க்கொருவர் மதங்களின் ஏற்றத் தாழ்வை யுன்னி யானை கண்ட குருடர்போல் பரசுபரம் (ஒருவருக்கொருவர்) கலகம் விளைவித்துக் கொள்ளா நிற்கும் மதசுதர்களென்பான், துயதிது தீயதிது வென்னு மாக்கள்’ என்றும், இவ்வாறு மதசுதர்கள் தத்தம் சித்தாந்தத்திற் கேற்ற தத்துவத்தைக் கொள்ளினும் அவர்கள் யாவருக்கும், விரோதமின்றி அவ்வத் தத் வமாயிலங்குபவன் இறைவன் என்பான் ‘அது வதுவா யிறை யிருக்கும்’ என்றும், அதுபோல் யாமும் மதசுதர்க ளெல்லாரோடும் விரோதமின்றி…

தோழர் தியாகு எழுதுகிறார் 80: வெண்மணியும் பெரியாரும் 1

(தோழர் தியாகு எழுதுகிறார்  79 தொடர்ச்சி) வெண்மணியும் பெரியாரும் 1 கீழவெண்மணி குறித்துப் பெரியார் மேல் எனக்கே குற்றாய்வுகள் உண்டு. பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். ஆனால் சுயசாதிப் பற்று என்பது இழிவான அவதூறு. பெரியாரைக் கனவிலும் அப்படி எண்ணிப் பார்க்க முடியாது. 2017 திசம்பரில் ‘இந்து’ தமிழ் ஏட்டுக்கு வெண்மணி குறித்து நான் தந்த செவ்வியிலேயே பெரியார் பற்றிய குற்றாய்வு உள்ளது. இதோ அந்தப் பேட்டி:— “வெண்மணி வெறும் கூலிக்கான போராட்டம் அல்ல!” – தியாகு பேட்டி வெண்மணி படுகொலைச் சம்பவத்தின் காரணமாகக், கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டுப் பொதுவாழ்வுக்குத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்…