தோழர் தியாகு எழுதுகிறார்  58: தோழர் தியாகுவை விடாது உழைக்க விடுவோம்! – நலங்கிள்ளி

(தோழர் தியாகு எழுதுகிறார் 57 தொடர்ச்சி) நலங்கிள்ளி எழுதுகிறார்: தோழர் தியாகுவை விடாது உழைக்க விடுவோம்! தோழர் தியாகு “தாழி மடல்” என்னும் இதழை மின்ம அஞ்சல் வழி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடத்தி வருகிறார். தியாகு எழுதுவது அனைத்தும் அறிவுச் சுரங்கத்தைச் சளைக்காமல் தேடும் பணியே! அதனைத் “தாழி மடல்” மீண்டும் மெய்ப்பித்துள்ளது. தாழி மடல் வாசகர்கள் தோழர் தியாகுவிடம் அவர் எழுதும் எழுத்துகள் குறித்து வினாத் தொடுக்கலாம். வினாக்களுக்கு அடுத்தடுத்த இதழ்களில் விடையிறுக்கப்படும். தாழி மடலைத் தொடர்ந்து படித்து வரும் எனக்கு…

தயிருக்குப் பொங்கிய முதல்வர் எல்லாவற்றிற்கும் பொங்க வேண்டும்!: தமிழுக்குச்செய்ய வேண்டிய ஆயிரம் 24 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒன்றிய அதிகாரிகளுக்குள்ள மொழி உணர்வு தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும் வேண்டும்! தொடர்ச்சி) தயிருக்குப் பொங்கிய முதல்வர் எல்லாவற்றிற்கும் பொங்க வேண்டும்! – தமிழுக்குச்செய்ய வேண்டிய ஆயிரம் 24 ஆவின் தயிர் உறைகளில் தஃகி என இந்தியில் குறிக்க வேண்டும் எனச் சில நாள் முன்னர்  ஒன்றிய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) அறிவித்தது. முதல்வர் மு.க.தாலின் உடனடியாக எதிர்வினையாற்றித்  “தொலைந்துவிடுவீர்கள்” என எச்சரிக்கை விட்டுள்ளார். (வழக்கம்போல் முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் மரு.இராமதாசுதான்.) முதல்வர் கண்டனம் தெரிவித்து இந்தித்திணிப்பு முயற்சிக்குத் தயிர் உறைகளில் முற்றுப்புள்ளி…

தோழர் தியாகு எழுதுகிறார்  57; வட்டியை உயர்த்தி வறியோரை வாட்டி – சமந்தா

(தோழர் தியாகு எழுதுகிறார் 56 தொடர்ச்சி) சமந்தா எழுதுகிறார்: பொருளியல்: வட்டியை உயர்த்தி வறியோரை வாட்டி… பசித்தவர் புசிக்க உணவு தர வேண்டும்.. உணவா?… தவித்த வாய்க்குத் தண்ணீர் கூடத் தராமல் காயப் போடுவதுதான் இந்தியா உட்பட அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளின் வாடிக்கையான நடைமுறையாக உள்ளது. அதன் படி, இந்தியச் சேம( ரிசர்வு) வங்கியின் ஆறு உறுப்பினர் கொண்ட பணவியல் கொள்கைக் குழு, திசம்பர் 5 முதல் 7 வரையிலான தனது இருமாதக் கொள்கைக் கூட்டத்தில் வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதமான மறு கொள்முதல் ஒப்பந்தம்(‘ரெபோ’) விகிதத்தை 0.35% உயர்த்தியுள்ளது.  ம.கொ.ஒ.(ரெபோ)விகிதம் 5.9%இலிருந்து 6.25%ஆக உயர்ந்துள்ளது. இதனால் கல்வி, வாகனம், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் உயரும். சேம…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):28

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 27. தொடர்ச்சி)   ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):28   4. குலமும் கோவும் தொடர்ச்சி சனநாத சோழன்     இராசராசனுக்கு அமைந்த விருதுப் பெயர்களில் ஒன்றாகிய சனநாதன் என்பது அவனது அரசியற் கொள்கையைக் காட்டுகின்றது.        “குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்        அடிதழீஇ நிற்கும் உலகு” என்னும் திருவள்ளுவர் கருத்துப்படி சனநாயகத்தின் உரிமையையும் பெருமையையும் இராசராசன் நன்றாக உணர்ந்திருந்தான் என்பது இவ்விருதுப் பெயரால் விளங்குவதாகும். தென்னார்க்காட்டிலுள்ள அகரம் என்னும் ஊர் சனநாத சதுர்வேதிமங்கலம் எனச் சாசனத்திற்…

தோழர் தியாகு எழுதுகிறார்  56 : சிறையச்சம் வெல்வோம்!

(தோழர் தியாகு எழுதுகிறார் 55 தொடர்ச்சி) சிறையச்சம் வெல்வோம்! புயல் மழைச் சேதம் பற்றிய என் வினவலுக்கு விடையாகத் தாழி அன்பர் பொன்முருகு கவின்முருகு எழுதுகிறார்: எனது மகன் கவின்அமுதன் சென்னையில் பாதுகாப்பாக இருக்கிறார். உசாவிக் கேட்டறிந்தேன். இம்மடலில் தாழி என்பதை முடக்கப்பட்ட இடம் என்ற பொருளில் தாழியில் பாதுகாப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ‘தாழி’ வீட்டுச்சிறை என்ற பொருளையும் தருகிறது.நல்லது அன்பரே! தாழி, சிறை என்றும் பொருள் தருமானால் மகிழ்ச்சி. அது என் தாய்வீடு. அங்குதான் நான் நானாகப் பிறந்தேன். சிறை என்பது மதில்சூழ்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 32

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 31 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’  32  சொல் ஒன்று தன்னை உணர்த்தாது தன்னோடு தொடர்புடையதனை உணர்த்தும். இதனை ஆகுபெயர் என்பர்.  தாமரை போன்ற முகம் என்பதில் தாமரை இலை, கொடி முதலியவற்றை உணர்த்தாது அதன் பூவை உணர்த்தி நிற்கின்றது. இவ்வாறு வரும் ஆகுபெயர் வகைகளை,         முதலிற் கூறும் சினையறி கிளவியும்         சினையிற் கூறும் முதலறி கிளவியும்         பிறந்தவழிக் கூறும் பண்புகொள் பெயரும்         இயன்றது மொழிதலும் இருபெயர் ஒட்டும்         வினைமுதல் உரைக்கும் கிளவியொடு தொகைஇ        …

இராமதாசின் ஆங்கிலப்பெயர்களை அழிக்கும் நல்ல முயற்சியும் வணிகர் சங்கத்தின் பொல்லா அறிவிப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன்

இராமதாசின் ஆங்கிலப்பெயர்களை அழிக்கும் நல்ல முயற்சியும் வணிகர் சங்கத்தின் பொல்லா அறிவிப்பும் . “ஒரு மாதத்துக்குள் கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்கவேண்டும். இல்லையெனில், கருப்பு மை வாளியோடும், ஏணியோடும் நாங்கள் வருவோம்” என வணிகர்களுக்குப் பாமக நிறுவனர் மரு.இராமதாசு சில நாள் முன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாராட்ட வேண்டிய முயற்சி! இதற்கு எதிர்வினையாக வணிகர் சங்கத்தலைவர் விக்கிரமராசா,  தமிழில் பெயர்ப் பலகை இல்லாத கடைகளில் மையிட்டு அழிப்போம் என்ற நிலைப்பாட்டை தவிர்க்க வேண்டும் எனவும்‌, இவ்விவகாரத்திற்கு ஒரு மாத அவகாசம் என்பது போதாது…

தோழர் தியாகு எழுதுகிறார் 55: இரோசிமா-நாகசாகி

(தோழர் தியாகு எழுதுகிறார் 54 தொடர்ச்சி) இரோசிமா- நாகசாகி:மாந்தக் குலம் மறக்கலாகாத பேரழிவுப் பெருஞ்சான்றுகள் ஒரு கற்பனை! கற்பனைதான்! உக்குரைன் போரில் வல்லரசியக் கனவுகள் கலைந்து போன நிலையில் உருசிய அதிபர் புதின் தன் அச்சுறுத்தலைச் செயலாக்கினால்… எண்ணிப் பார்க்க முடியாத பேரழிவு நேரிடும் என்பதில் ஐயமில்லை. உருசிய உக்குரைன் போரை நாம் எதிர்க்க ஒரு முகன்மையான காரணம் அது அணுவாய்தப் போராக முற்றும் ஆபத்து உள்ளது என்பதாகும். உருசியா உக்குரைன் மீது அணுவாய்தப் போர் தொடுத்தால், எவ்வளவு சிறிய அளவில் தொடுத்தாலும், எந்தச்…

தமிழ்நாடும் மொழியும் 32: பிறநாட்டார் ஆட்சிக் காலம் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி

(தமிழ்நாடும் மொழியும் 31: பிறநாட்டார் ஆட்சிக் காலம் தொடர்ச்சி) 8. பிறநாட்டார் ஆட்சிக் காலம் தொடர்ச்சி மைசூர் மன்னர்கள் மைசூர் மன்னர்கள் ஆதிக்கம் தமிழ்நாட்டில் கி. பி. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஏறத் தாழ 180 ஆண்டுகளில் மெல்ல மெல்லப் பரவிற்று. திருமலை நாயக்கர், சொக்கநாத நாயக்கர் என்பவர்கள் ஆட்கிக் காலத்தில் மைசூர் மன்னன் காந்திர அரசனது படை கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களில் பல இடங்களை வென்று, திண்டுக்கல்வரை வந்து வாகை சூடிச் சென்றது. இவனுக்குப்பின் பட்டமேறிய தொட்டதேவன் காலத்தில் சேலம், தாராபுரம் முதலிய…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4  காட்சி : 2

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 1 தொடர்ச்சி) பளிங்கு நீராழியில் அமுதவல்லியும் – அல்லியும் ; மற்ற தோழியர் கரையில் எண்சீர் விருத்தம் அமுதவல்லி:            அதோ            பாரடி            மயிலே                                       அதோ  பாரடி                                       மயிலின்        அழகு  பாரடி                              இதோ           பாரடி            இனிமை                                              இன்னும்        பாரடி                                       இருசிட்         டிணைதல்      பாரடி                              கொஞ்சம்                 பாரடி            கிளிகள்                                       கொஞ்சல்                பாரடி                                       அணிலும்                விரைதல்        பாரடி                             …

தோழர் தியாகு எழுதுகிறார் 54 : சொல்லாத கருத்து, பேசாத வார்த்தை!

(தோழர் தியாகு எழுதுகிறார் 53 தொடர்ச்சி) சொல்லாத கருத்து, பேசாத வார்த்தை! தாழி அன்பர் சிபி எழுதியதை சென்ற மடலில் கண்டோம்.“நீங்கள் அவ்வாறு கூறவில்லை, சத்தியசீலன் அவ்வாறு கூறியுள்ளார்” என்கிறார் சிபி. அவ்வாறு என்றால் எவ்வாறு?“ஈழத்தில் பிரபாகரன் ஈவெராவையோ திராவிடத்தையோ குற்றாய்வு செய்யவில்லை என்பதால் இங்கு யாரும் அதனைச் செய்யக் கூடாது என்பது ஏற்புடையதல்ல.” (தாழி மடல் 33.)ஏற்புடையதல்லாத இந்தக் கூற்று என்னுடையதன்று என்பதை சிபி ஏற்றுக் கொள்கிறார். நல்லது, நான் விடுவிக்கப்பட்ட வரை மகிழ்ச்சி. நான் தவறாகப் புரிந்து கொண்டிருந்தாலும் வருந்துகிறேன்.அப்படியானால் சத்தியசீலன்…

தோழர் தியாகு எழுதுகிறார் 53:     2022ஆம் ஆண்டிற்கான துய்ச்சர் நினைவுப் பரிசு

(தோழர் தியாகு எழுதுகிறார் 52 தொடர்ச்சி) தோழர் சமந்தா எழுதுகிறார்:2022ஆம் ஆண்டிற்கான துய்ச்சர் நினைவுப் பரிசு • ஒவ்வோராண்டும், மிகச் சிறந்த, புதுமையான மார்க்குசிய நூலுக்குத் துய்ச்சர் நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டுக்கான துய்ச்சர் நினைவுப் பரிசு கேபிரியல் வினண்டு எழுதிய “அடுத்த மாற்றம்: துருவேறிய அமெரிக்கப் புறநகரில் தொழிற்சாலையின் வீழ்ச்சியும், சுகாதாரப் பராமரிப்பின் எழுச்சியும்” (The Fall of Industry and the Rise of Health Care in Rust Belt America) என்ற நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. கேப்ரியல் வினன்ட்…