8. புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 3/3 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்
(புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 2/3 தொடர்ச்சி) 8. புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 3/3 ‘கலப்பு மணம் ஒன்றே நல்வழிக்குக் கைகாட்டி’ என்று கலப்பு மணத்தை ஆதரிக்கும் கவிஞர், விதவைத் திருமணத்தையும் முதன் முதலில் பெரிதும் வற்புறுத்திக் கவிதைப் புரட்சி செய்தவர் ஆகிறார். “வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோபாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?”– பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி, என்ற வினாவினைச் சமுதாயத்தினை நோக்கி எழுப்புகின்றார். ‘ஒரு கட்டழகன் திருத்தோளினைச் சார்ந்திடச் சாத்திரம்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 663 -670
( தமிழ்ச்சொல்லாக்கம் 654-662 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 663- 670 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 663. பிரதமை திதி – முதல்நாள் 664. துவிதியை திதி – இரண்டாம் நாள் 665. திரிதியை திதி – மூன்றாம் நாள் 666. சதுர்த்திய திதி – நான்காம் நாள் 667. பஞ்சமி திதி – ஐந்தாம் நாள் 668. சசுட்டி திதி – ஆறாம் நாள் முருகன் வரத்தில் அசுரர்கள் பிறந்து தேவர்களுக்கிடுக்கண் செய்வதையொழிக்க சிவன் தனது மனையாளிடம் மோகிக்குங்கால் அவர் கண் வழியாக ஐப்பசி மாத…
தோழர் தியாகு எழுதுகிறார் 52 : சொல்லடிப்போம் வாங்க! (7)
(தோழர் தியாகு எழுதுகிறார் 51 தொடர்ச்சி) சொல்லடிப்போம் வாங்க! (7) அன்பர் சிபி எழுதுகின்றார்:ஆழ-கடல் என்பதில் உயிரொலி மெய்யொலியோடு புணர அகரம் கெடும். இவ்விதி தாரள-இயம் என நிலைமொழியிலும் வருமொழியிலும் உயிரொலி நிற்கும் நிலைக்குப் பொருந்தா என எண்ணுகிறேன். சிபி சுட்டும் இலக்கணம் சரி என்று இலக்குவனார் திருவள்ளுவன் சொல்லி விட்டார். இந்தப் புதிய மடல் குறித்தும் அவர் கருத்தறிவோம்! சொல்லாய்வறிஞர் அருளியாரிடமும் பேசுகிறேன். அது வரை முடிவெடுப்பதைத் தள்ளி வைத்து விட்டு மற்ற சொல்லாக்கங்களில் கவனம் செலுத்துவோம்.Imperiaslism = ஏகாதிபத்தியமா? வல்லரசியமா? அல்லது…
தோழர் தியாகு எழுதுகிறார் 51:நகர்ப்புறக் குடியிருப்பு-நிலவுரிமைக் கூட்டமைப்பின் அறைகூவல்
(தோழர் தியாகு எழுதுகிறார் 50 தொடர்ச்சி) நிலவுரிமைக்காக போராடுவோம்! சென்னை பூர்வகுடி-உழைக்கும் மக்களின் நிலத்தின் மீதான உரிமை மெல்லமெல்லப் பறிக்கப்பட்டு அவர்கள் ஏதுமற்றவர்களாக மாற்றப்பட்டு வருகிறார்கள். நகரமயமாதல், ஊர்ப்புறங்களில் வேலையின்மை போன்ற காரணங்களால் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு மக்கள் இடம்பெயரத் தள்ளப்படுகின்றனர். பல்வேறு தரப்பட்ட மக்களின் வருகை தமிழ் மக்களின் ஓர்மை உணர்வையும் மண்ணின் மைந்தர்கள் என்ற ஒற்றுமை உணர்வையும் இழக்கச் செய்கிறது. தனியார்மயம் நிலத்தை வணிகப் பொருளாக்கி அதனைப் பெருமுதலாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வகை செய்கிறது. புதுத்தாராளியக் கொள்கை நகரங்களை முழுவதுமாக முதலாளர்களிடம்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 29
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 28 தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 17தருமம் வளர்த்த குன்னம் உத்தமதானபுரத்தில் நாங்கள் சில காலம் இருந்த போது என் தந்தையார் பாபநாசம் முதலிய இடங்களில் உள்ள செல்வர்களிடம் சென்று வருவார். ஒருமுறை பாபநாசத்திற் சில பிரபுக்களுடைய வேண்டுகோளின்படி சில தினங்கள் நந்தனார் சரித்திரக் கீர்த்தனங்களை அவர் பாடிப் பொருள் கூறி வந்தார். சரித்திரம் நிறைவேறியவுடன் அப்பிரபுக்கள் 70 உரூபாய் (20 வராகன்) சேர்த்துச் சம்மானம் செய்தார்கள். என் தந்தையாருடைய கதாப்பிரசங்கத்தின் முடிவில் இருபது வராகன் சம்மானம் அளிப்பதென்பது ஒரு பழக்கமாகி…
தோழர் தியாகு எழுதுகிறார் 50
(தோழர் தியாகு எழுதுகிறார் 49 தொடர்ச்சி) அன்பர்கள் எழுதுவதை வரவேற்கிறோம் அன்பர் சத்தியசீலனின் முதல் மடல் குறித்து நலங்கிள்ளி எழுதுகிறார்:“திமுகவின் ஈழ நிலைப்பாட்டில் சற்று மாற்றம் ஏற்பட்டது என்பது இந்திய முன்னாள் தலைமையமைச்சர் இராசீவு காந்தி படுகொலைக்குப் பின்னரே” என்று சத்தியசீலனே ஏற்றுக் கொள்கிறார். அப்படியானால் இராசீவு மரணத்துக்கும் திமுகவின் தமிழீழ நிலைப்பாடு மாறுவதற்கும் என்ன ஏரணப் பொருத்தம் இருக்க முடியும்? தமிழீழ நிலைப்பாட்டில் திமுகவின் கருத்து மாறி விட்டது என்ற பிறகு அந்த அமைப்பு மீது விமரிசனம் வரத்தான் செய்யும். அந்த விமரிசனங்களை…
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 27
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 26. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):27 4. குலமும் கோவும் தொடர்ச்சி சுந்தர சோழன் அரிஞ்சயனுக்குப் பின் அரசுரிமை ஏற்றான் அவன் மைந்தனாகிய சுந்தர சோழன். இவன் செங்கோல் மன்னன் என்று திருவாலங்காட்டுச் சாசனம் கூறுகின்றது. தென்னார்க்காட்டிலுள்ள சௌந்திரிய சோழபும் என்னும் ஊரும், செங்கற்பட்டைச் சேர்ந்த சுந்தர சோழ வரமும் இவன் பெயர் கொண்டு விளங்குகின்றன. இம்மன்னனைப் ‘பொன்மாளிகைத் துஞ்சிய தேவன்’ எனக் கல்வெட்டுக் கூறும். இவ்வாறு துஞ்சிய நிலையில் வானவன் மாதேவி என்னும் இவன்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 31
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 30 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 31 அவை சொற்கள் சேருங்கால் அவற்றைச் சேர்ப்பதற்குத் துணைபுரிவன, வினைச்சொல்லில் காலத்தைக் காட்டி நிற்பன, வேற்றுமை அறிவிக்கும் உருபுகளாகி வருவன, அசைகளாக நிற்பன, இசை நிறைத்து நிற்பன, தத்தம் குறிப்பால் பொருள் தருவன, ஒப்பில் வழியால் பொருள் செய்குந என எழுவகைப்படும். இவை சொற்களாக உருவாகி நிற்றல் மட்டுமன்றி, சொல்லுக்கு முன்னும் பின்னும் வரும். தம் ஈறு திரிந்தும் வரும்; ஓரிடைச் சொல்லை அடுத்தும் வரும். சொற்றொடர்களில் நின்று பலவகைப் பொருள்களை அறிவிக்கும்…
தோழர் தியாகு எழுதுகிறார் 49: சீமான் அரசியலுக்குப் பிராபகரன் பொறுப்பா?
(தோழர் தியாகு எழுதுகிறார் 48 தொடர்ச்சி) அன்பர் சத்தியசீலனுக்கு என் மறுமொழி: சீமான் அரசியலுக்குப் பிராபகரன் பொறுப்பா? “எனது நோக்கம் விடுதலைப் புலிகளை- பிரபாகரனை இழிவுபடுத்துவது அல்ல!” என்று நீங்கள் அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. “அவர்கள் மீதான மதிப்பை நான் மாற்றிக் கொண்டதாகவும் நான் எங்கும் குறிப்பிடவில்லை” என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால், சரி. ஆனால் உங்கள் முதல் மடல் எனக்கு மட்டுமல்ல, தாழி அன்பர்கள் சிலருக்கும் கூட அந்த எண்ணத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இருந்தது. உங்கள் இப்போதைய விளக்கத்தை அவர்கள் பார்வைக்கும் முன்வைக்கிறேன். இடதுசாரி அறிஞர்கள் புலிகளைக் குற்றாய்வு செய்கிறார்கள்…
தமிழ்நாடும் மொழியும் 31: பிறநாட்டார் ஆட்சிக் காலம் – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 30: பிறநாட்டார் ஆட்சிக் காலம் தொடர்ச்சி) 8. பிறநாட்டார் ஆட்சிக் காலம் தொடர்ச்சி திருமலைக்குப் பின்னர் அவனது பேரன் முதலாம் சொக்க நாதன் பட்டமேறினான். இவன் காலத்தில் திருச்சி தலைநகராய் விளங்கியது. தஞ்சாவூர் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. ஆனால் கொங்கு நாட்டில் சேலம், கோயம்புத்தூர் பகுதிகள் மைசூருக்குச் சொந்தமாயின. இவனுக்குப் பின்னர் நான்காம் வீரப்பன் பட்டம் பெற்றான். இவனது மகனே இரண்டாம் சொக்க நாதன். சொக்க நாதன் அரசனான பொழுது வயதிற் சிறுவனாக விளங்கியதால், இவனது பாட்டி மங்கம்மாள் திறம்பட நாட்டை…
தோழர் தியாகு எழுதுகிறார் 48: சொல்லடிப்போம், வாங்க! (6)
(தோழர் தியாகு எழுதுகிறார் 47 தொடர்ச்சி) சொல்லடிப்போம், வாங்க! (6) பேராசிரியர் சிவகுமார் எழுதுகிறார்: தோழர் வணக்கம். என்னுடைய மின்னஞ்சல் செய்திக் குவியலால் இயங்கவில்லை. சிலவற்றை நீக்கியபின் உங்கள் தாழி மடல்கள் பெற முடிந்தன. ‘சொல்லடிப்போம்’ வாங்க இரசித்துப் படிக்கிறேன். தாராளியம் சிறப்பான விளக்கம். நீண்ட கட்டுரைகளைத் தவிருங்கள். நல்லது. சுருக்கமாகவே எழுத முயல்கிறேன். பேராசிரியர் சிவக்குமார் கலைச் சொல்லாக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். சொல்லடிக்கும் பணியில் அவரும் தொடர்ந்து பங்கேற்க வேண்டுகிறேன். தாழி மடல் எடுத்துள்ள பணிகளில் சொல்லாக்கமும் ஒன்று. எனக்கு விருப்பமானது என்பதால் மட்டுமல்ல,…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 1
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 5 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 1 அமுதவல்லி – உதாரன், இளவரசி கூண்டுக்கிளையப் பார்த்துப் பாடுகிறாள் இசைப்பாடல் அமுதவல்லி: யாப்பநூல்சொல்ல வந்தார் கிளியே- என்றன் காப்புடைத்துக் காவல் கொண்டார் கிளியே கிளியே வாய்ப்பான நேர மிங்கே கிளியே- வீணில் வதையாக மறையு தந்தோ கிளியே கிளியே விழிகுருடர் என்று …
