தோழர் தியாகு எழுதுகிறார் 47: நானும் தேச விரோதி!- மருதமுத்து

(தோழர் தியாகு எழுதுகிறார் 46 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! அம்பேத்துகரைக் காவிச் சிமிழுக்குள் அடைக்க இந்துத்துவக் கயவர்கள் செய்யும் முயற்சி கண்டு வெகுண்டெழுந்து பேராசிரியர் மருதமுத்து அவர்கள் அம்பேத்துகர் நினைவு நாளில் எழுதியுள்ள முகநூல் இடுகையை இன்றைய தாழி மடலில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்: நானும் தேச விரோதி! ஆம், மருதமுத்துவாகிய நான் அழுத்தந்திருத்தமாக அறிவிக்கிறேன்— நானும் தேசவிரோதி! இன்று வரை இந்துத்துவா வாதிகள் எல்லோரும் தந்தை பெரியாரைத்  தேச விரோதி என்கிறார்கள், வெள்ளைக்காரனின் கைக்கூலி என்கிறார்கள். (எச்சு.இரசாவின் நம் ஒளியலைப் பேச்சு) நேற்றுவரை தந்தை அம்பேத்துகரையும் தேசவிரோதி என்றார்கள், வெள்ளைக் காரனின்…

தோழர் தியாகு எழுதுகிறார் 46: சொல்லடிப்போம் வாங்க! (6)

(தோழர் தியாகு எழுதுகிறார் 45 தொடர்ச்சி) சொல்லடிப்போம் வாங்க! (6) பொன்முருகு கவிமுருகு எழுதுகிறார்: இயம், இசம், இயல் எல்லாமே கொள்கை அல்லது தத்துவம்  என்பதற்கான சொல்லாட்சிதானே தோழர்? தாராளியம் என்பது எப்படி அமைப்பையும், தத்துவத்தையும் குறிக்கிறது? என்பதை விளக்கப்படுத்துங்கள். இசம் என்று எழுதுவது ism என்று ஆங்கிலத்தில் சொல்வதன் ஒலிப்பெயர்ப்பு. இயல் என்பது அமைப்பாகவும் இருக்கலாம், கொள்கையாகவும் இருக்கலாம். அரசியல் (politics), பொருளியல் (economics), புவியியல் (geography) என்னும் சொற்கள் இடம் பொருள் ஏவலைப் பொறுத்து வாழ்க்கைத் துறைகளையோ அறிவுத் துறைகளையோ குறிக்கும். இசம் என்பதற்கு மாற்றாகச் சிலர்  இயலைப் பயன்படுத்துகின்றனர். காட்டாகப், பெரியாரியல் என்பது…

8. புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 2/3  – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

(புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 1/3  தொடர்ச்சி) 8. புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 2/3 நந்திக் கலம்பக ஆசிரியர் காதலனைப் பிரிந்திருக்கும் மகளிர், நிலவைப் பார்த்து, “பெண்ணிலா ஊரிற் பிறந்தாரைப் போலவரும்வெண்ணிலா வேயிந்த வேகமுன க் காகாதே!”– நந்திக் கலம்பகம்; தலைவி நிலவைப் பழித்தல். என்று குறிப்பிடுவதாகக் கவிதை படைத்துள்ளார். இவ்வாறு கவிஞர் பலர் கண்ட நிலவினைப் பாரதிதாசனின் கற்பனையுள்ளமும் காணுகின்றது; முகிழ்க்கின்றது. தேனார் செந்தமிழ்க் கவிதை: “முழுமை நிலா! அழகு நிலாமுளைத் ததுவிண் மேலே–அதுபழமையிலே புதுநினைவுபாய்ந்தெழுந்தாற் போலே……………………………………….குருட்டுவிழியும் திறந்தது போல்இருட்டில் வான…

தோழர் தியாகு எழுதுகிறார் 45: பெரியாரா? பிரபாகரனா?

(தோழர் தியாகு எழுதுகிறார் 44 தொடர்ச்சி) பெரியாரா? பிரபாகரனா? தாழி 20, 21 மடல்கள் குறித்து அன்பர் மா. சத்தியசீலன் எழுப்பியுள்ள வினாக்களை இம்மடலில் எடுத்துக் கொள்கிறேன். தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களைப் பற்றிய ‘தீரன் திண்ணியன் தேசத் தலைவன்’, தமிழீழ மாவீரர் நாள் பற்றிய ‘மாவீரர்களின் பெயரால்’ ஆகிய கட்டுரைகளையே சத்தியசீலன் குறிப்பிடுகின்றார். முதலாவது கட்டுரையை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். பிராபகரனை நான் எப்படிப் பார்க்கிறேன்? அவரது வரலாற்று வகிபாகம் பற்றிய என் புரிதல் என்ன?…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 654-662

( தமிழ்ச்சொல்லாக்கம் 648-653 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 654-662 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு.  கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 654. உத்யானம் – பூத்தோட்டம் உத்யான பத்திரிகை என்ற வடமொழியில் வெளிவரும் மாத சஞ்சிகை – ஒரே உரூபாய் சந்தாவுள்ள மாத சஞ்சிகை, திருவையாறு என்று கூறப்படும் ஊரிலிருந்து வெளிவரும். இதை ஐந்து ஆறுகளின் மத்தியில் விளங்கும் உன்னதமான உத்யானத்தில் -பூத்தோட்டத்தில் வீசும் வாசனையைக் கிரகித்து வெளிவரும். நூல்   :           சுயமரியாதை கண்டன திரட்டு (1929) பக்கம் – 8 கட்டுரையாளர்    :           நாரதர் ★ சரிகை         –           பொன்நூல் (641…

தோழர் தியாகு எழுதுகிறார் 44: சொல்லடிப்போம் வாங்க! (5)

 (தோழர்தியாகுஎழுதுகிறார் 43 தொடர்ச்சி) சொல்லடிப்போம் வாங்க! (5) தாழி அன்பர் பொன்முருகு கவின்முருகு கேட்கிறார்: குற்றாய்வு என்ற சொல் விமர்சனம் என்பதற்கான தமிழ்ச் சொல்லா? ஆமாங்க. விமர்சனம் என்பதில் இரு வகையுண்டு: (1) திறனாய்வு [review] (2) குற்றாய்வு [criticism]. Criticism and self-criticism = குற்றாய்வும் தற்குற்றாய்வும். இன்னுஞ் சிறந்த மாற்று இருப்பின் அன்பர்கள் எழுதலாம். நவ-தாராளவாதமா? புதுத் தாராளியமா? என்ற சிக்கலில் நவ-தாராளவாதம் ஒழிந்து, தாராளியமா? தாராளவியமா? தாராளிகமா? என்ற சிக்கல் மட்டும் தொடர்கிறது. அறிஞர்தம் கருத்துக்காகக் காத்துள்ளேன். இந்தச் சிக்கலை முடித்துக் கொண்டு தாராளியத்தின்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 28

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 27 தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 16 தொடர்ச்சிதானிய வருவாய் நாங்கள் குன்னத்திற்குச் சென்ற காலம் அறுவடை நாள். அவ்வூரிலுள்ளவர்கள் நவதானியங்களுள் கம்பு, சோளம், சாமை, கேழ்வரகு, தினை முதலியவற்றைத் தங்கள் தங்களால் இயன்றவளவு கொணர்ந்து எங்களுக்கு அளித்தார்கள். அவற்றில் உபயோகப்படுவன போக மிகுந்தவற்றை நாங்கள் விற்று நெல்லாக மாற்றி வைத்துக்கொண்டோம். இராமாயணப் பிரசங்கம் குன்னத்தில் நாட்டாண்மைக்காரர்கள் நான்கு பேர் இருந்தனர். அவர்களும் சிதம்பரம் பிள்ளையும் சேர்ந்து யோசித்து என் தந்தையாரைக் கொண்டு அருணாசலகவி இராமாயணத்தை இரவிற் பிரசங்கம் செய்வித்து செய்வித்துக்…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 26

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 25. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):26 4. குலமும் கோவும் தொடர்ச்சி                    சோழ நாட்டு மன்னர்  விசயாலயன்      பல்லவர் ஆட்சி நிலை குலைந்தபோது தஞ்சைச் சோழர் குலம் தலையெடுத்தது. வடக்கே சாளுக்கிய மன்னரும், தெற்கே பாண்டியரும் பல்லவ வேந்தனை நெருக்கிக் குழப்பம் விளைத்த காலம் பார்த்து விசயாலயன் என்னும் சோழன் முத்தரையரிடமிருந்து தஞ்சை நகரைக் கைப்பற்றினான். அது முதல் அவன் மரபில் வந்த தஞ்சைச் சோழர்கள் படிப்படியாக வளர்ந்தோங்கிப் பேரரசர் ஆயினர், விசயாலயன் பெயர்…

தோழர் தியாகு எழுதுகிறார் 43: சொல்லடிப்போம் வாங்க! (4)

(தோழர் தியாகு எழுதுகிறார் 42 தொடர்ச்சி சொல்லடிப்போம் வாங்க! (4) இனிய அன்பர்களே! பெங்களூருவிலிருந்து எழுதுகிறேன். விடியுமுன் வந்து சேர்ந்து விட்டேன். இன்று (04.12.2022, திருவள்ளுவராண்டு 2053, கார்த்திகை 18, ஞாயிறு) மாலை கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கம் நடத்தும் தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வில் பேசுவதற்காக வந்துள்ளேன். விழா நடக்கும் இடம் பெங்களூரு தமிழ்ச் சங்கம். அழகிய அல்சூர் ஏரிக்கரையில் தமிழ்ச் சங்க வாயிலில் பொன்னிறச் சிலை வடிவில் திருவள்ளுவர் அமர்ந்துள்ளார். கன்னட இன வெறியர்களின் எதிர்ப்பால் பல காலம் சாக்குச் சுற்றி வைக்கப்பட்டிருந்த சிலைதான் இது. இந்தச் சிலையைத்…

‘இனி’ நூல் வெளியீட்டு விழா

திராவிட இயக்கத் தமிழர் பேரவை , கருஞ்சட்டைப் பதிப்பகம் இணைந்து நடத்தும் ‘இனி’ நூல் வெளியீட்டு விழா இன்று (17-03-2023 வெள்ளிக்கிழமை, பங்குனி 03, 2054) மாலை 6.30 மணி, சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற உள்ளது.இரா.உமா தலைமையில் நடைபெறும் நிகழ்வில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், தோழர் இரா.முத்தரசன், (மாநிலச் செயலாளர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி), நக்கீரன் கோபால், (ஆசிரியர்-நக்கீரன்), இயக்குநர் கரு.பழனியப்பன், தோழர் அழகிய பெரியவன் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

ஆளுமையர் உரை 37,38 & 39 : இணைய அரங்கம் : “தமிழும் நானும்”

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.(திருவள்ளுவர், திருக்குறள் 414) தமிழே விழி!                            தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 37,38 & 39 : இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: பங்குனி 05, 2054 ஞாயிறு 19.03.2023 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00 தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: உரைச்சுடர் செல்வி ந.காருண்யா “தமிழும்…

தோழர் தியாகு எழுதுகிறார் 42: சொல்லடிப்போம் வாங்க! (3)

(தோழர் தியாகு எழுதுகிறார் 41 தொடர்ச்சி) சொல்லடிப்போம் வாங்க! (3)      தாராளியமா? தாராளவியமா? தாழி அன்பர் ‘சிபி’ எழுதுகிறார்: தாரளம்+இயம் என்பதில் மகரவீற்று கெட்டப்பின்னர் தாராளவியம் தானே வரும். தாரள+இயம் என நிற்கும் போது உடம்படுமெய் விதியைத் தான் பொருத்தமுடியும். ள+இ என்பதில் அகரம் கெட்டாலொழிய ள்+இ என நிற்காது. அகரம் கெடும் விதி இதற்குப் பொருந்துமா? மேலும் தாராளவியம் என்பதே இயல்பான பலுக்கலாக உள்ளது. ************************* சிபி சொல்லும் தமிழ் இலக்கணத்தில் எனக்கு அவ்வளவாகப் பழக்கம் இல்லை. அது என் குறை. எனவே தமிழறிஞர்களின் கருத்தறிய விரும்புகிறேன்….